மனதில் ரீங்காரமிடும் எக்ஸ்சாஸ்ட் சப்தம் கொண்ட டாப்-10 கார்கள்!
ஸ்போர்ட்ஸ் மற்றும் சூப்பர் கார்களின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக கருதப்படுவது அதன் எக்ஸ்சாஸ்ட் சப்தம். சில ஸ்போர்ட்ஸ் கார்களின் எக்ஸ்சாஸ்ட் சப்தம் நம்மை மெய்மறக்க செய்துவிடும்.
அதுபோன்று, இதுவரை வெளிவந்த கார்களில் எக்காலத்திலும் சிறந்த எக்ஸ்சாஸ்ட் சப்தம் கொண்ட கார்களாக ஆட்டோமொபைல் நிபுணர்களால் புகழப்படும் சில கார் மாடல்களின் வீடியோ தொகுப்பை இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.

டாப்- 10 கார்கள்
சிறந்த எக்ஸ்சாஸ்ட் சப்தம் கொண்ட ஸ்ட்ரீட் மாடல் கார்களின் தொகுப்பை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.
1.போர்ஷே கரீரா ஜிடி
போர்ஷே கரீரா ஜிடி.,யின் பராக்கிரமத்தை உணர்த்தும் எக்ஸ்சாஸ்ட் சப்தம்.
ஃபெராரி எஃப்40
ஃபெராரி, மஸராட்டி, லம்போர்கினி கார்களுக்கான பெர்ஃபார்மென்ஸ் எக்ஸ்சாஸ்ட் அமைப்பை தயாரித்து வழங்கும் டூபி நிறுவனத்தின் எக்ஸ்சாஸ்ட் சிஸ்டம் பொருத்தப்பட்ட இந்த ஃபெராரி எஃப்40 காரின் எக்ஸ்சாஸ்ட் சப்தத்தை கேட்டு இன்புறுங்கள்.
சுப்ரா 1200எச்பபி
ஃபார்முலா-1 காரைப் போன்று அலாதி சப்தத்தை தந்து மனதை குளிர்வித்து போகும் சுப்ராவின் எக்ஸ்சாஸ்ட் சவுண்ட் சூப்பர்மா.
ஜெட்டா ஜிஎல்எக்ஸ் விஆர்6
சூப்பர் கார்களே வேண்டாம் எனும் அளவுக்கு எக்ஸ்சாஸ்ட் சப்தத்தால் மனதை நிறைய வைக்கும் ஃபோக்ஸ்வேகன் ஜெட்டா.
.ஃபெராரி 355
எப்போதும் கார் பிரியர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த ஃபெராரி 355 காரின் எக்ஸ்சாஸ்ட் சவுண்ட் எப்படி இருக்கிறது. தீப்பொறி பறக்க பறக்க காதுகளை சூடாக்கும் வீடியோ.
.லம்போர்கினி கூன்டாச்
அந்த எக்ஸ்சாஸ்ட் சப்தத்தை துரத்தி துரத்தி பிடிக்க ஓடும் கேமராமேன்.
சி5 கார்வெட்
அமெரிக்காவின் பிரபல மஸில் கார் மாடலான சி5 கார்வெட் காரின் எக்ஸ்சாஸ்ட் சப்தத்தை கேட்டு மகிழுங்கள். உண்மையான வல்லமையை தெரிந்துகொள்ள கடைசி 10 நொடிகளை தவற விடாதீர்கள்.
லம்போர்கினி எல்பி640-4 சூப்பர் வெலாஸ்
கார் பிரியர்களின் தாகத்தை தணிக்கும் எக்ஸ்சாஸ்ட் சப்தம்.
லான்சியா டெல்டா
வாவ் சொல்ல வைக்கும் எக்ஸாச்ஸ்ட் சப்தம். காதுகளுக்கு விருந்து.
1973 ப்ளைமோத் டஸ்ட்டர்
காதுகளில் தேனை பாய்ச்சும் அந்த ரீங்கார ஒலி.


Click it and Unblock the Notifications








