ஆச்சரியக் கடலில் மூழ்கடிக்கும் அந்த கால கார்களின் வேடிக்கை, வினோத விஷயங்கள்!

By Saravana

கார்களின் வடிவமைப்பும், வசதிகளும் இன்று கற்பனைக்கு எட்டாத உயரங்களை தொட்டு வருகிறது.

இந்த நிலையில், தொழில்நுட்ப வளர்ச்சி குறைவாக இருந்த காலத்திலேயே கார்களில் சில வியத்தகு வசதிகளும், ஆக்சஸெரீகளும் இடம்பெற்றிருந்தன. நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அந்த விஷயங்களை பற்றி அசைபோடும் விதத்தில் இந்த பதிவு.

01. இல்லுமினேட்டட் டயர்

01. இல்லுமினேட்டட் டயர்

இப்போது கார்களின் பின்புறம், அடிப்புறத்தில் எல்இடி விளக்குகளை பொருத்தி அழகு பார்க்கின்றனர். ஆனால், 1961ம் ஆண்டிலேயே குட்இயர் நிறுவனம் இல்லுமினேட்டட் எனப்படும் ஒளிரும் வசதி கொண்ட கார் டயர்களை அறிமுகம் செய்து அசத்தியது.

02.நாய்களுக்கான கோணிப் பை

02.நாய்களுக்கான கோணிப் பை

நாய்களை காருக்குள் வைத்து அழைத்து செல்ல பிரியபடாதவர்களுக்காக ஓர் வினோதமான ஐடியாவுடன் கோணிப் பை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டது. 1935ம் ஆண்டு பாப்புலர் மெக்கானிக்ஸ் இதழில் முதல்முறையாக இந்த நாய் கோணிப் பை விபரங்கள் வெளியிடப்பட்டன. காரின் பக்கவாட்டில் ரன்னிங் போர்டுடன் கோணிப் பையின் கீழ் பகுதியும், கோணிப் பையின் மேல்புறத்தை கொக்கிகள் மூலமாக காரின் ஜன்னலிலும் மாட்டிக் கொண்டு நாயை அழைத்து செல்லும் விதத்தில் இருந்தது. தேவைப்படும்போது எளிதாக கழற்றி வைத்துக் கொள்ள முடியும்.

03. க்ளவ் பாக்ஸில் மினி பார்

03. க்ளவ் பாக்ஸில் மினி பார்

1957ம் ஆண்டு மாடல் கேடில்லாக் எல்டார்டோ பிரகாம் காரின் க்ளவ் பாக்ஸில் சிறிய பார் வசதி கூடிய கிட் கொடுக்கப்பட்டிருந்தது. மது பாட்டில், மது கோப்பைகள் மற்றும் இதர ஐட்டங்களை அதில் வைத்துக் கொள்ள முடியும். அதுவும் அப்போது ஆடம்பரத்தை காட்டும் விஷயமாகவும், பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும் ஆக்சஸெரீயாகவும் இருந்தது.

04. இது எப்படி?

04. இது எப்படி?

ஹிட் அண்ட் ரன் எனப்படும் மோதிவிட்டு எஸ்கேப்பாகும் கார் ஓட்டுனர்களையும், காரையும் அடையாளம் காண்பதற்காக ஒரு வித்தியாசமான ஐடியா 1931ம் ஆண்டு பாப்புலர் மெக்கானிக்ஸ் இதழில் வெளியிடப்பட்டது. அதாவது, அனைத்து காரின் பம்பரிலும் ஓட்டுனர் பெயர் மற்றும் காரின் பதிவு எண் கொண்ட சிறிய ரக வட்டுகளை பொருத்தி வைக்க வேண்டும். ஒருவேளை, கார் மோதினால், அந்த தட்டுகள் தொடர்ந்து கீழே விழந்து கொண்டே இருக்கும். இதன்மூலம், சம்பந்தப்பட்ட காரையும், ஓட்டுனரையும் அடையாளம் காண முடியும் என்பதே அந்த ஐடியாவாகும்.

05.ஆம்பிகார்

05.ஆம்பிகார்

1961 முதல் 1968 வரை தயாரிக்கப்பட்ட ஆம்பி கார்கள் நீரிலும், நிலத்திலும் செல்லும் வசதி கொண்டவை. அப்போது இந்த காரை வாங்குவதை பலர் ஆவல் கொண்டனர். தரையில் மணிக்கு 112 கிமீ வேகத்திலும், தண்ணீரில் அதிகபட்சமாக 12 கிமீ வேகத்திலும் செல்லும் திறன் கொண்டவை. ஆனால், இந்த காரில் இருந்த மிகப்பெரிய குறை என்ன தெரியுமா, இதன் பில்ஜ் பம்ப் எனப்படும் நீரை வெளியேற்றும் எந்திரம் இயங்காவிட்டால் கார் நீரில் மூழ்கி விடும் ஆபத்து இருந்தது. ஆனாலும், இப்போது வரை இந்த காரை பலர் பயன்பாட்டில் வைத்திருப்பது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

06.மூன்றுசக்கர கார்

06.மூன்றுசக்கர கார்

வடக்கு இங்கிலாந்து பகுதிகளில் மிக பிரபலமாக விற்பனை செய்யப்பட்ட மூன்று சக்கர வாகனம்தான் ரிலையன்ட் ராபின்ஸ். இந்த ராபின்ஸ் கார் 27 ஆண்டுகள் உற்பத்தியில் இருந்தது. இதில் நான்காவது சக்கரம் இல்லை என்பதால், இதனை மோட்டார்சைக்கிள் என வகைப்படுத்தினர். மேலும், டூ வீலர் லைசென்ஸ் இருந்தாலே, இந்த காரை ஓட்ட முடியும். மேலும், பதிவுக் கட்டணம் போன்ற இதர செலவுகள் மிக குறைவானது. மேலும், பனிப்பொழிவு காலத்தில் இந்த கார் மிகச்சிறப்பாக செல்லுமாம். அதனாலேயே பலர் இதனை விரும்பி வாங்கினர். இப்போதும் மூன்று சக்கர வாகனங்கள் இருக்கின்றதே, இதில் என்ன வியத்தகு விஷயம் என்கிறீர்களா? ஆம், ஒருவேளை பயணி ஒருவர் இருக்கையில் பயணிக்காவிட்டால் அவருக்கு பதிலாக சிமென்ட் பிளாக் ஒன்றை பயணி இருக்கை பக்கம் வைத்து எடுத்துச் சென்றால்தான் வளைவுகளில் பேலன்ஸாக செல்ல முடியுமாம்.

 07. ஃபோர்டு ரிஸ்ட்-ட்விஸ்ட் ஸ்டீயரிங் சிஸ்டம்

07. ஃபோர்டு ரிஸ்ட்-ட்விஸ்ட் ஸ்டீயரிங் சிஸ்டம்

1965ல் ஃபோர்டு கார் நிறுவனம் அறிமுகம் செய்த Wrist-Twist system என்ற ஸ்டீயரிங் அமைப்பு வேடிக்கை, வினோதத்திற்கு பொருத்தமானது. அதாவது, ஆட்டோரிக்ஷா போன்ற ஹேண்டில்பார் இருபுறத்திலும் இரண்டு சிறிய ஸ்டீயரிங் வீல் கொடுக்கப்பட்டிருந்தது. சாலையை தெளிவாக பார்க்கவும், இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரை தெளிவாக படிக்கும் விதத்தில் இதனை அறிமுகம் செய்தது. இதன் புரோமோ வீடியோ கூட யூ- ட்யூபில் கிடைக்கிறது. நேரம் கிடைத்தால் பாருங்கள்.

08. புயிக் 180 டிகிரி இருக்கை

08. புயிக் 180 டிகிரி இருக்கை

1961ம் ஆண்டு மாடல் புயிக் ப்ளமிங்கோ மோட்டோரமா காரின் முன்பக்க பயணி இருக்கை 180 டிகிரி கோணத்தில் திரும்பும் வசதி கொண்டது. பின்னால் அமர்ந்து வரும் குடும்பத்தினருடன், முன்பக்க பயணி எளிதாக திரும்பி உட்கார்ந்து கொண்டு பேசிக் கொண்டு வர முடியும்.

09. க்றைஸ்லரின் ஹை- ஃபை வினைல் ரெக்கார்டு ப்ளேயர்

09. க்றைஸ்லரின் ஹை- ஃபை வினைல் ரெக்கார்டு ப்ளேயர்

1956ம் ஆண்டு க்றைஸ்லர் கார்ப்பரேஷன் நிறுவனம் ஹை- ஃபை என்ற வினைல் ரிக்கார்டு ப்ளேயரை அறிமுகம் செய்தது. அந்த காலத்தின் மிக நவீன தொழில்நுட்ப அம்சங்கள் கொண்ட ரெக்கார்டு பிளேயராக பிரபலப்படுத்தியது. மேலும், நெடுஞ்சாலை பயணங்களில் நீண்ட நேரம் பாடல்களை கேட்கும் வசதியை இந்த ஹை ஃபை சிஸ்டம் கொண்டிருப்பதாகவும், இந்த வசதியை வழங்கும் முதல் நிறுவனம் க்றைஸ்லர் என்றும் விளம்பரப்படுத்தியது. அத்தோடு, சாலையில் பள்ளம் மேடுகளில் கூட இது எந்த தொந்தரவும் இல்லாத அளவுக்கான பெட்டியில் பொருத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தது.

10. அட்ஜெஸ்ட் ஸ்டீயரிங் வீல்

10. அட்ஜெஸ்ட் ஸ்டீயரிங் வீல்

1961ம் ஆண்டு ஃபோர்டு தண்டர்பேர்டு காரில் ஸ்விங் அவே என்ற ஸ்டீயரிங் வீல் அமைப்பு அறிமுகம் செய்யப்பட்டது. கூடுதலாக 25 டாலர்கள் செலுத்தினால், இந்த ஸ்டீயரிங் வீல் சிஸ்டம் ஆப்ஷனலாக வழங்கப்பட்டது. அதாவது, தற்போது ஸ்டீயரிங் வீலை அட்ஜெஸ்ட் செய்யும் வந்தாலும், இந்த காரின் ஸ்டீயரிங் வீல் ஓட்டுனர் இருக்கையில் அமரும்போதும், எழும்போதும் படத்தில் இருப்பது அதிகபட்சமாக அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாம்.

Article Published On: Thursday, July 23, 2015, 12:51 [IST]
English summary
10 Interesting Features Of Old Cars.
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+