தயாராகிறது டைட்டானிக்- 2 ஆடம்பர கப்பல்: 2016ல் முதல் பயணத்தை துவங்குகிறது.

வரலாற்றில் மறக்க முடியாத டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கி நூறாண்டுகளை கடந்துவிட்டது. சென்ற நூற்றாண்டின் மிக மோசமான கடல் விபத்தாக வரலாற்றில் பதிவான அந்த சம்பவத்தை வைத்து படமான டைட்டானிக் படமும் உலக அளவில் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பெற்றது.

இந்த நிலையில், கடலில் மூழ்கிய டைட்டானிக் ஆடம்பர கப்பலின் மாதிரியை அடிப்படையாகக் கொண்டு புதிய டைட்டானிக் கப்பல் கட்டமைக்கப்பட்டு வருகிறது. வரும் 2016ம் ஆண்டில் இந்த புதிய டைட்டானிக் கப்பல் தனது முதல் பயணத்தை துவங்குகிறது. மேலும், கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பல் பயணித்த அதே வழியிலேயே இந்த புதிய டைட்டானிக் கப்பல் தனது முதல் பயணத்தை துவங்குகிறது.

மேலும், பழைய டைட்டானிக் கப்பலின் டிசைன் மாதிரியை பயன்படுத்தியே புதிய கப்பலும் வடிவமைக்கப்பட்டு வருகிறது. உள்ளலங்காரம் மற்றும் இதர வசதிகள் அனைத்தும் பழைய டைட்டானிக் கப்பலின் மாதிரியின் அடிப்படையிலேயே இருக்கும். ஆனால், செயற்கைகோள் தொடர்பு வசதிகள், கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய டைட்டானிக் கப்பல் கட்டப்பட்டு வருகிறது.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த பில்லியனரான க்ளைவ் பால்மர் தனது புளூ ஸ்டார் லைன் கப்பல் நிறுவனத்திற்காக இந்த டைட்டானிக்- 2 கப்பலை உருவாக்கி வருகிறார். பழைய டைட்டானிக் கப்பல் போன்றே இந்த கப்பலிலும் வசதிகளுக்கு தகுந்தவாறு மூன்று வகுப்புகள் கொண்டதாக இருக்கும். அறைகளின் உள்ளலங்காரங்கள் பழைய கப்பலை போன்றே வடிவமைக்கப்பட்டு வருகிறது.

அவசர காலங்களில் இந்த கப்பலில் பயணிக்கும் அனைவரும் பத்திரமாக வெளியேறுவதற்கான போதுமான எண்ணிக்கையில் உயிர்காக்கும் படகுகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டைட்டானிக்-2 என்ற பெயரில் வடிவமைக்கப்பட்டு வரும் இந்த கப்பலில் முதல் பயணத்தின்போது 2,600 பயணிகளும், 900 கப்பல் பணியாளர்களும் செல்ல இருப்பதாக கிளைவ் பால்மர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

மேலும், இந்த கப்பலில் பயணிப்போருக்கு 1,920ம் ஆண்டுகளின் டிசைனில் வடிவமைக்கப்பட்ட ஆடைகள் வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய டைட்டானிக் கப்பலின் பிரத்யேக படங்களை ஸ்லைடரில் காணலாம்.

டைட்டானிக் 2 கப்பலின் புளுபிரிண்ட்

டைட்டானிக்-2 கப்பலின் மாதிரித் தோற்றம்.

டைட்டானிக் 2 கப்பலின் புளுபிரிண்ட்

கூடத்திலிருந்து மேல் தளத்திற்கு செல்வதற்கான மர வேலைபாடுகள் நிறைந்த படிக்கட்டுகள்.

டைட்டானிக் 2 கப்பலின் புளுபிரிண்ட்

கூடத்தின் அலங்கார கூரை.

டைட்டானிக் 2 கப்பலின் புளுபிரிண்ட்

முதல் வகுப்பு சாப்பாட்டுக் கூடம்

டைட்டானிக் 2 கப்பலின் புளுபிரிண்ட்

முதல் வகுப்பு பயணிகள் அறை

டைட்டானிக் 2 கப்பலின் புளுபிரிண்ட்

புகைப்பிடிக்கும் அறை

டைட்டானிக் 2 கப்பலின் புளுபிரிண்ட்

சுவர்பந்து விளையாட்டு அரங்கம்

டைட்டானிக் 2 கப்பலின் புளுபிரிண்ட்

ரேடியோ கட்டுப்பாட்டு அறை

டைட்டானிக் 2 கப்பலின் புளுபிரிண்ட்

நீச்சல் குளம்

டைட்டானிக் 2 கப்பலின் புளுபிரிண்ட்

உடற்பயிற்சி கூடம்.

டைட்டானிக் 2 கப்பலின் புளுபிரிண்ட்

மின்தூக்கி முதல் கூடம்.

டைட்டானிக் 2 கப்பலின் புளுபிரிண்ட்

மின்தூக்கி இரண்டாவது கூடம்

டைட்டானிக் 2 கப்பலின் புளுபிரிண்ட்

மூன்றாம் வகுப்பு பயணிகள் அறை

டைட்டானிக் 2 கப்பலின் புளுபிரிண்ட்

மூன்றாம் வகுப்பு சாப்பாட்டு கூடம்

டைட்டானிக் 2 கப்பலின் புளுபிரிண்ட்

துருக்கி ஸ்டைல் குளியல் அறை

டைட்டானிக் 2 கப்பலின் புளுபிரிண்ட்

கஃபே பரிசியன்

டைட்டானிக் 2 கப்பலின் புளுபிரிண்ட்

மாலுமி அறை

டைட்டானிக் 2 கப்பலின் புளுபிரிண்ட்

டைட்டானிக் 2 கப்பல் புளுபிரிண்ட் பற்றி முதலில் தெரிந்து கொண்டு விட்டீர்கள் அல்லவா? இந்த புதிய ஆடம்பர கப்பல் பற்றிய பல சுவையான கூடுதல் தகவல்களை விரைவில் வழங்குகிறோம்.

More from DriveSpark

Article Published On: Monday, March 31, 2014, 11:36 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+