இவைதான் பெண்களை மயக்கும் டாப் 10 கார்கள்!

Written By:

பெண்களை மிகவும் கவர்ந்த 10 கார்கள் பற்றிய விபரங்களை பிரபல காப்பீட்டு நிறுவனம் ஆய்வறிக்கை மூலம் தகவல் வெளியிட்டிருக்கிறது.

ஆளுமையான ஆண்களை எவ்வாறு பெண்களுக்கு பிடிக்குமோ, அதுபோன்றே ஆளுமை தோற்றம் கொண்ட இந்த கார்களும் பெண்களை மிகவும் கவர்வதாக அந்த ஆய்வு தெரிவித்திருக்கிறது. ஆளுமை நிறைந்த அந்த 10 கார்களின் விபரத்தை ஸ்லைடரில் காணலாம்.

10. ஜீப் ரேங்க்லர்

10. ஜீப் ரேங்க்லர்

அமெரிக்காவின் மிக பிரபலமான ஆஃப்ரோடு வாகனம் என்ற பெருமைக்குரியது ஜீப் ரேங்க்லர். ஜீப் ரேங்க்லர் எஸ்யூவியின் முரட்டுத்தனமான அங்கங்கள் பெண்களை மிகவும் கவர்வதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவிலும் இந்த புதிய எஸ்யூவி மாடல் விரைவில் விற்பனைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

 09. ஃபெராரி ஜிடிஓ

09. ஃபெராரி ஜிடிஓ

இது விண்டேஜ் காராக இருந்தாலும், உலகின் மிகவும் விலை உயர்ந்த பொக்கிஷமாக இது பார்க்கப்படுகிறது. ஒன்று, இரண்டல்ல, பல நூறு கோடிகளுக்கு ஒரு கார் ஏலம் போகிறது. விண்டேஜ் அந்தஸ்தில் இருந்தாலும், இந்த காருக்கான மதிப்பு தினசரி அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த காரும் பெண்களுக்கு பிடித்தமான மாடல்களில் ஒன்றாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

08. கேடில்லாக் எல்டுராடோ

08. கேடில்லாக் எல்டுராடோ

செல்வ செழுமையையும், அந்தஸ்தையும் பன்மடங்கு தூக்கி பிடிக்கும் டிசைன் கொண்ட கேடில்லாக் எல்டுராடோ காரும் பெண்களை கவர்ந்த மாடல் என்று அந்த காப்பீட்டு நிறுவனத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பெண்களை மட்டுமில்லை, ஆண்களை கூட இந்த காரின் தோற்றம் சுண்டியிழுக்கும் என்றால் மிகையில்லை.

 07. டாட்ஜ் வைப்பர்

07. டாட்ஜ் வைப்பர்

மென்மையான மனம் படைத்த பெண்களுக்கு சக்திவாய்ந்த இந்த கார் மிகவும் கவர்வதாக ஆய்வில் கூறப்பட்டிருக்கிறது. இந்த டாட்ஜ் வைப்பர் கார் டெட்ராய்ட் நகரின் மிக்சிகனில் உள்ள ஆலையில் முழுக்க முழுக்க மனித ஆற்றல் கட்டமைக்கப்படும் மாடல். குறிப்பாக, இதன் சிவப்பு நிற கார் மிகவும் செக்சியாக இருப்பதாகவும், இதனை பெண்கள் மிகவும் விரும்புகின்றனராம்.

 06. பிஎம்டபிள்யூ எம்6 கேப்ரியோ

06. பிஎம்டபிள்யூ எம்6 கேப்ரியோ

சமூக அந்தஸ்து, செல்வ செழிப்பை பரைசாற்றுவதில் பாரம்பரியமிக்க பிராண்டுகளில் ஒன்றாக பிஎம்டபிள்யூ விளங்குகிறது. பல்வேறு மாடல்களை இந்த நிறுவனம் வெளியிட்டு வந்தாலும், பிஎம்டபிள்யூவின் எம்6 கேப்ரியோ மாடல் பெண்களை மிகவும் கவர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

05. புகாட்டி வெய்ரான்

05. புகாட்டி வெய்ரான்

பெரும் பணக்காரர்களின் கனவில் மட்டுமல்ல, பெண்களின் கனவுகளிலும் இந்த கார் இடம் பிடிக்கிறது. இதன் அளப்பரிய சக்தியும், தோற்றமும் பெண்களை மிகவும் கவர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

04. லம்போர்கினி

04. லம்போர்கினி

லம்போர்கினி நிறுவனத்தின் அனைத்து மாடல்களும் அனைத்துமே ஒருவித சீற்றத்துடனே இருப்பதால், அனைத்து லம்போர்கினி மாடல்களையும் பெண்களுக்கு பிடிக்கிறதாம். குறிப்பாக, 1974 முதல் 1990 வரை தயாரிக்கப்பட்ட லம்போர்கினி கூன்டாச் ஸ்போர்ட்ஸ் கார் பெண்களை மிகவும் கவர்ந்த மாடலாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 03. ஹம்மர்

03. ஹம்மர்

எஸ்யூவி வகைகளில் மிகவும் பிரம்மாண்டமான இந்த மாடலும் பெண்களை மிகவும் கவர்ந்த மாடலாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, இதன் செயல்திறன் என்பது இதன் தோற்றத்திலேயே தெரிந்துவிடுவதும் பெண்களை கவர்வதற்கு முக்கிய காரணம்.

02. போர்ஷே

02. போர்ஷே

ஸ்போர்ட்ஸ் கார்களில் மிகவும் தனித்துவமான டிசைன் அம்சங்கள் கொண்ட போர்ஷே கார்கள் பெண்களை எளிதில் வீழ்த்தி விடுகிறதாம். குறிப்பாக, விளையாட்டு வீராங்கனைகளுக்கு இந்த போர்ஷே என்பது மிகவும் பிடித்தமான பிராண்டாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 01. மஸராட்டி

01. மஸராட்டி

இத்தாலியை சேர்ந்த மஸராட்டியின் தயாரிப்புகள் டிசைனுக்கு பெயர் பெற்றவை. செக்சியான தோற்றம் கொண்ட மஸராட்டி கார்களின் முரட்டுத்தனம் கலந்த டிசைன் பெண்களை மிகவும் கவர்ந்துள்ளதாகவும், மஸராட்டி பிராண்டு பெண்களை அதிகம் வசீகரிப்பதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.

பெண்களின் ஈர்க்கும் கார்கள்

பெண்களின் ஈர்க்கும் கார்கள்

ஸ்போர்ட்ஸ் கார்கள் மீது ஆண்களுக்குத்தான் அதிக ஈர்ப்பு இருக்கும் என்பதை மாற்றும் விதத்தில், இந்த ஆய்வு புதிய கோணத்தில் தகவல்களை தந்துள்ளது.

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Her is the list covers the full array of female taste cars.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark