1 வருஷத்துக்கு அப்புறம் படத்துக்கு இசை போட்ட கையோடு வாங்கிய கார்! மியுசிக் டைரக்டர் யார்னு தெரியுதா?
இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) விற்பனையில் எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனம் புதிய ஆதிக்கத்தை நிகழ்த்தி வருகிறது. இதற்கு முக்கிய காரணம், எம்ஜி மோட்டார் நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட விண்ட்சர் இவி (Windsor EV) என்கிற எலக்ட்ரிக் கார் ஆகும்.
எம்ஜி மோட்டார் நிறுவனம் கடந்த 2023ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே விலை குறைவான எலக்ட்ரிக் காராக கோமெட் இவி (Comet EV) காரை அறிமுகம் செய்தது. டாடா (Tata) எலக்ட்ரிக் கார்களை காட்டிலும் விலை குறைவான எலக்ட்ரிக் காராக கொண்டுவரப்பட்டதினாலேயே எம்ஜி கோமெட் இவி எலக்ட்ரிக் கார் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியது.

ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு கோமெட் இவி எலக்ட்ரிக் கார்கள் விற்பனை ஆகவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், பெரியதாக எந்தவொரு விளம்பரமும் இல்லாமல் அறிமுகம் செய்யப்பட்ட எம்ஜி விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரை ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கிலான கஸ்டமர்கள் வாங்கி வருகின்றனர். இதற்கு முக்கியமான காரணம், எம்ஜி விண்ட்சர் இவி ஆனது பேட்டரி இல்லாமல் குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டது ஆகும்.
அதாவது, பேட்டரியை குத்தகை முறையில் விண்ட்சர் இவி கஸ்டமர்களுக்கு எம்ஜி நிறுவனம் வழங்கி வருகிறது. குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தி சார்ஜ் நிரம்பிய பேட்டரியை பெற்று விண்ட்சர் இவி காரை பயன்படுத்தலாம். சார்ஜ் காலியாக நேர்ந்தால், அந்த பேட்டரியை கொடுத்து மீண்டும் கட்டணத்தை செலுத்தி சார்ஜ் நிரம்பிய பேட்டரியை பெற்று பயன்படுத்தலாம். இந்த கட்டணங்கள் தற்போதைக்கு குறைவாக இருப்பதால், இவ்வாறான முறையில் பயன்படுத்த பலர் எம்ஜி விண்ட்சர் இவி-ஐ வாங்குகின்றனர்.

அந்த வரிசையில் தற்போது சினிமா இசையமைப்பாளர் ஒருவர் இந்த எம்ஜி எலக்ட்ரிக் காரை வாங்கியுள்ளார். இந்த திரைப்பட இசையமைப்பாளரின் பெயர், கைலாஸ் மேனன் (Kailas Menon) ஆகும். மலையாள திரையுலகை சேர்ந்தவரான 38 வயதான இசையமைப்பாளர் கைலாஸ் மேனன் 2011ஆம் ஆண்டிலேயே சினிமாவிற்குள் நுழைந்துவிட்டார். ஆனால், முதல் வெற்றி கிடைக்க கிட்டத்தட்ட 7 வருடங்கள் ஆனது.
ஆனால், முதல் வெற்றியே பிரம்மாண்ட வெற்றியாக இசையமைப்பாளர் கைலாஸ் மேனனுக்கு கிடைத்தது. 2018ஆம் ஆண்டில் இவரது இசையில் வெளிவந்த 'தீவண்டி' (Theevandi) திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியது. அப்புறம் என்ன... கைலாஸ் மேனனுக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. 2019இல் இருந்து 2023 வரையில் சுமார் 15க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்த கைலாஸ் மேனனின் இசையில் கடந்த 2024இல் ஒரு திரைப்படம் கூட வெளிவராதது ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.
ஆனால், இந்த 2025இல் திரைக்குவர புதியதாக ஒரு மலையாள திரைப்படம் இவரது இசையில் உருவாகி வருகிறது. இதற்கிடையில்தான் தற்போது இசையமைப்பாளர் கைலாஸ் மேனன் பிராண்ட்-நியூ எம்ஜி விண்ட்சர் இவி காரை வாங்கியுள்ளார். இந்த புதிய எலக்ட்ரிக் காரை தாய், மனைவி மற்றும் குழந்தைகள் உடன் ஷோரூமுக்கு சென்று கைலாஸ் மேனன் டெலிவிரி பெறும்போது எடுக்கப்பட்ட படங்கள் இன்ஸ்டாகிராமில் (Instagram) வெளியிடப்பட்டுள்ளன.
இந்த படங்களில், இசையமைப்பாளர் கைலாஸ் மேனனின் முற்றிலும் வெள்ளை நிறத்திலான எம்ஜி விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரை பார்க்கலாம். இதனை 'பேர்ல் வெள்ளை' (Pearl White) என எம்ஜி மோட்டார் நிறுவனம் அழைக்கிறது. இது இல்லாமல், ஸ்டார்பர்ஸ்ட் பிளாக், நீலம் & பச்சை கலந்த டர்க்கைஸ் பச்சை மற்றும் களிமண்ணின் பழுப்பு நிறம் உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களிலும் விண்ட்சர் இவி விற்பனை செய்யப்படுகிறது.
எக்ஸ்சைட், எக்ஸ்க்ளூசிவ், எஸ்ஸென்ஸ் என 3 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் இந்த எம்ஜி எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.12 லட்சத்தில் இருந்து ரூ.14 லட்சம் வரையில் உள்ளன. இது பேட்டரி உடன் கிடைக்கும் இந்த காரின் விலைகள் ஆகும். பேட்டரி இல்லாமல் காரின் விலை ரூ.10 லட்சத்தில் இருந்து துவங்குகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எம்ஜி விண்ட்சர் இவி எலக்ட்ரிக் கார் பாமர மக்களை தாண்டி சினிமா பிரபலங்களையும் கவர்ந்திருப்பதை இதன் மூலம் அறிய முடிகிறது. வெள்ளை நிறத்தில் இந்த எலக்ட்ரிக் காரை மலையாள இசையமைப்பாளர் கைலாஸ் மேனன் வாங்கியுள்ளார். இவரை பார்த்து மலையாள சினிமா துறையில் இன்னும் சிலர் இந்த எலக்ட்ரிக் காரை வாங்குவர் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications








