"வாகன துறையில் வேலையிழப்பே கிடையாது" - சர்ச்சை பதிலை கூறிய பாஜக தலைவர் யார் தெரியுமா..?
வாகனதுறையில் வேலையிழப்பு ஏற்படும் என்ற பயத்திற்கே இடமில்லை என மத்திய பாஜக அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். அவர் யார்..?, எதற்காக இவ்வாறு கூறினார் என்பதுகுறித்த விரிவான தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்திய வாகனச் சந்தை கடந்த 2019ம் ஆண்டு தொடங்கியது கடும் விற்பனைச் சரிவையும், மந்த நிலையையும் சந்தித்து வருகின்றது. இதனை வரலாறு காணாத வீழ்ச்சியாக பேசப்பட்டு வரும் வேலையில், பாஜக கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் சர்ச்சையான கருத்தை வெளியிட்டுள்ளார்.

சர்ச்சையான கருத்துகளுக்கும், பேச்சுகளுக்கும் பெயர்போனவர்கள் பாஜக கட்சியினர். இக்கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் முதல் முக்கிய தலைவர்கள் வரை ஒருமித்த கருத்தைக் கொண்டவர்களாகவே காணப்படுகின்றனர்.

அந்தவகையில், எப்போதும் ஏதாவது ஒரு சர்ச்சையான கருத்துகளை அவர்கள் வெளியிட்ட வண்ணம் இருக்கின்றனர்.
இந்நிலையில், மாநிலங்களுக்கான கனரக வாகனத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், வாகன துறையில் வேலை இழுப்பு என்ற அச்சுறுத்தல் இல்லை என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இவரின் இக்கருத்து வாகனத்துறையில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஈடி ஆட்டோ செய்தி தளத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் அவர் கூறியதாவது, "ஆட்டோமொபைல் துறை தற்போது பிஎஸ்-4 தரத்தில் இருந்து பிஎஸ்-6 தரத்திற்கு இடம்பெயரும் இடைக்காலத்தில் சிக்கியுள்ளது. இந்த திட்டத்தை 2020ம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதிக்குள் கட்டாயம் மாற வேண்டும் என உச்ச நீதிமன்றத்தால் காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், மின்சார வாகனங்களை நோக்கி நகர வேண்டியதsற்கும் நாம் தள்ளப்பட்டுள்ளோம்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "வேலை இழப்புகுறித்த கவலைப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை. இது ஓர் மறுசுழற்சி. அதேசமயம், எந்தவொரு வேலையும் ஆபத்தில் இல்லை. மேலும், பங்குதாரர்களுடன் பேசியபின் முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளது" என்று கூறினார்.

இந்த தகவலை அவர் எழுத்துப் பூர்வமாகவும் வெளியிட்டிருப்பதாக கூறப்படுகின்றது.
கடந்த ஒன்பது மாதங்களுக்கும் கடும் பின்னடைவைச் சந்தித்து வந்த இந்திய வாகனத்துறை வரும் விழாக்காலங்களை முன்னிட்டும் கடந்த விழாக் காலங்களை முன்னிட்டும் அறிவிக்கப்பட்ட சலுகைகளின் காரணமாக சற்றே நிம்மதி பெருமூச்சு விடத் தொடங்கியுள்ளன.

அந்தவகையில், இந்திய ஒரு சில முன்னணி வாகன நிறுவனங்கள் மட்டும் விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றன.
ஆனால், பல்வேறு நிறுவனங்கள் தற்போது விற்பனை இல்லாமல் பெரும் சிக்கலைச் சந்தித்து வருகின்றன. இதுபோன்ற காரணங்களால் கடந்த காலங்களில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் தற்காலிக பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தால், உற்பத்தியை குறைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது.

ஆனால், மத்திய அமைச்சர் ஆச்சரியம் அளிக்கும் வகையில் வாகன துறையில் வேலைக்கு எந்தவொரு ஆபத்தும் இல்லை என்று கூறியிருப்பது மிகுந்த வேதனை அளிக்கும் விதமாக இருப்பதாக வேலையை இழந்த பட்டதாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications








