தப்பி தவறி கூட இப்படியெல்லாம் மாடிஃபிகேஷன் பண்ணாதீங்க! அப்புறம் ஜெயில்ல கம்பி தான் எண்ணனும்!
நம் எல்லோருக்கும் கார்கள் என்றால் மிகவும் பிடிக்கும். நம் கார் சாலையில் செல்கிறது என்றால் அது மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என நம்மில் பலர் நினைப்பார்கள். அதற்காகக் காரை மாடிஃபிகேஷன் செய்வார். காரை மாடிஃபிகேஷன் செய்வது மூலம் அது நமக்கென ஒரு தனி அடையாளத்தை பெறுகிறது. இதனால் பலர் அதை விரும்புவார்கள்.
மாடிஃபிகேஷன் என்றால் அது காருக்கு ஜன்னல் கண்ணாடிகளில் ஸ்டிக்கர் ஒட்டுவது மூதல் காரே முற்றிலும் அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்பாய்லர்கள், அலாய் வீல்கள் உள்ளிட்டவற்றைப் பொருத்தி மாற்றுவது. ஆனால் இந்தியாவில் கார்களில் அனைத்து விதமான மாடிஃபிகேஷன்களும் அனுமதிக்கப்பட்டது அல்ல. கார்களில் சில மாடிஃபிகேஷனை செய்வது முற்றிலும் சட்ட விரோதமானது.

இப்படியான மாடிஃபிகேஷன் செய்து வாகனங்களில் பயணித்தால் சாலையில் செல்லும் போது போலீசார் உங்களைப் பிடித்து அபராதம் விதிப்பார்கள். உங்கள் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் பாயும். இதைத் தொடர்ந்து செய்தால் சில தவறுகளுக்கு ஜெயில்தண்டனை கூட வழங்கப்பட வாய்ப்பு இருக்கிறது. அப்படியாகச் சட்டத்திற்குப் புறம்பான மாடிஃபிகேஷன் என்பது எது எனக் காணலாம் வாருங்கள்.
கண்ணாடிகளை 50 சதவீத்திற்கு அதிகமாக மறைப்பது
கார் ஃபேக்டரியிலிருந்து வரும் போது காரின் ஜன்னல் கண்ணாடிகள் முழுவதும் டிரான்ஸ்பரன்டாக இருக்கும். இப்படியாக இருக்கும் ஜன்னல் கண்ணாடிகளை நம்மில் பலர் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டி மறைப்போம். ஆனால் இது சட்ட ரீதியில் தவறு. அதாவது கண்ணாடியை முழுமையாக மறைப்பது சட்டரீதியில் தவறான விஷயம் 50 சதவீதம் வரை மறைத்துக்கொள்ள அனுமதியிருக்கிறது. 50 சதவீதத்திற்கு மேல் கண்ணாடியை மறைப்பது சட்டப்படி குற்றம், பின்பக்க கண்ணாடியில் 70 சதவீதம் தெரியவேண்டும் ஜன்னல் கண்ணாடியில் 50 சதவீதம் தெரிய வேண்டும்.

ஹாரன்
இந்தியாவில் பல கார் உரிமையாளர்கள் செய்யும் தவறு இது தான் அதிகமான சத்தம் கொண்ட ஹாரனை காரில் பொருத்துவது தான். ஃபேக்டரி ஃபிட்டிங்கில் வரும் ஹாரனை மாற்றி விடுகின்றனர். இப்படியாக ஹாரனை மாற்றுவது தவறு அல்ல. ஆனால் மாற்றப்பட்ட ஹாரிலிருந்து வரும் சத்தத்தின் அளவு முக்கியம். இந்திய மோட்டார் வாகன சட்டப்படி 100 டெஸிபெல்லிற்கு மேல் சத்தம் கொண்ட ஹாரன் கள் அனுமதியில்லை. இதனால் அதிக சத்தம் கொண்ட ஹாரனை பொருத்தாதீர்கள். ஹாரனை மாற்றும் போது இதில் கவனமாக இருங்கள்.
சைலென்சர் மாற்றம்
இது காரை விட பெரும்பாலும் பைக் விரும்பிகள் தான் சைலென்சரை மாற்றுவதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். சிலர் கார்களிலும் இப்படியாக சைலென்ஸை மாற்றுகின்றனர். வாகனங்களில் சைலென்ஸை மாற்றுவது சட்டப்படி தவறு அல்லது ஆனால் அதிலிருந்து அதிகமாகச் சத்தம் வந்தால் அது சட்டப்படி தவறான விஷயமாகும். இப்படியாக சைலென்சரை மாற்றம் போது 2 விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். ஒன்று கேட்டலிஸ்ட் கன்வெர்டர் பொருத்தியிருக்க வேண்டும். மற்றொன்று சத்தம் அதிகமாக வராமல் இருக்க வேண்டும். ஃபேக்டரி ஃபிட்டிங்கில் வரும் சைலென்சர் அனுமதிக்கப்பட்டதாக இருக்கும்.

நம்பர் பிளேட்
இந்தியாவில் இருக்கும் மிக முக்கியமான தவறான பழக்கம் வாகனத்தின் நம்பர் பிளேட்டில் இஷ்டத்திற்கு நம்பர் எழுதுவது. இன்று புதிய கார்கள் வாங்கினால் வாகன நிறுவனங்களே நம்பர் பிளேட்களை தருகிறது. ஆனால் பழைய கார்களில் அவரவர்கள் தங்களின் விருப்பப்படி நம்பர் பிளேட்டில் நம்பரைப் பதித்து வந்தனர். பலர் நம்பருடன் சேர்த்து போலீஸ், பிரஸ், அவரவர் பெயர்கள், கடவுள் பெயர்கள் எனப் பல விஷயங்களை அச்சுகளை பதிவு செய்தனர். இதுவும் சட்டப்படி தவறான விஷயம்
லைட் மற்றும் டயர் மாடிஃபிகேஷன்
ரோட்டில் செல்லும் போது தன் கார் தனியாக தெரியவேண்டும் என்பதற்காகப் பலர் காரின் ஹெட்லைட் மற்றும் டயர் ஆகியவற்றை மாடிஃபிகேஷன் செய்து விடுவார்கள். ஹெட்லைட் மிகவும் பிரைட்டான ஹெட்லைட்டை பயன்படுத்துவார்கள். கார் டயரை பொருத்தவரை ஃபேக்டரி ஃபிட்டிங் டயரை விட பெரிய அல்லது சிறிய டயரை பொருத்துவார்கள். இதன் மூலம் காரின் பெர்ஃபாமென்ஸை மாற்றியமைப்பார்கள். இது முற்றிலும் தவறு காரின் டயரை மாற்றினால் அது காரின் பாடியை விட்டு வெளியே வரக்கூடாது. அதே போல ஹெட்லைட்டை மாற்றினால் அதன் நடுவில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும்.
ஆக மொத்தம் மாடிஃபிகேஷன் செய்தால் அது மற்றவர்களைப் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். மற்றவர்களைப் பாதிக்கும் மாடிஃபிகேஷன்களுக்கு தடையிருக்கிறது. இது போக காரின் கலர் மாற்றுவது, இன்ஜின் மற்றும் பிற மெக்கானிக் அம்சங்களை மாற்றினால் இதை ஆர்டிஓடிவிடம் தெரியப்படுத்த வேண்டும். இதை மீறுபவர்களுக்கு கடும் அபராதம் அல்லது தொடர்ந்து செய்தால் சிறை தண்டனையும் விதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
மேலும் மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட கார்கள் விபத்தில் சிக்கினால் அந்த கார்களுக்கு இன்சூரன்ஸ் கிளைம் கிடைக்காது என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இனியும் நீங்கள் உங்கள் காரை சட்ட விதிமுறைகளை மீறி மாடிஃபிகேஷன் செய்ய விரும்புகிறீர்களா? உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








