இவங்க எல்லாம் டோல்கேட் கட்டணம் செலுத்தத் தேவையில்லை! நிதின்கட்கரி வெளியிட்ட புதிய பட்டியல்!

இந்தியாவில் சுங்கச்சாவடி கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்களின் பட்டியலை மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்கரி வெளியிட்டுள்ளார். இந்த குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்க வாகன ஓட்டிகள் சுங்க கட்டணம் செலுத்த வேண்டும். இதற்காக மத்திய போக்குவரத்துத் துறை ஃபாஸ்ட்டேக் என்ற கார்டை அறிமுகப்படுத்தி அதன் மூலம் வசூலை நடத்தி வருகிறது. இந்த கார்டில் ரீசார்ஜ் செய்வது மூலம் சுங்க கட்டணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்த முடியும். இதற்காக இந்தியா முழுவதிலும் உள்ள சுங்கச்சாவடிகளில் தற்போது ஆர்எஃப்ஐடி ரீடர்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இவங்க எல்லாம் டோல்கேட் கட்டணம் செலுத்தத் தேவையில்லை! நிதின்கட்கரி வெளியிட்ட புதிய பட்டியல்!

சுங்க கட்டணம்!

இதற்கு முன்பு நேரடியாகப் பணம் செலுத்திச் செல்ல வேண்டிய முறை இருந்தது. அதில் பலர் சுங்கச்சாவடிகளில் பணம் செலுத்த மறுத்து வாக்குவாதம் செய்து வந்தனர். தற்போது அந்த முறை வெகுவாக குறைந்துவிட்டது. பழைய முறையில் இருக்கும் போது அரசியல்வாதிகள், அதிகாரம் படைத்தவர்கள், பணக்காரர்களுக்குச் சுங்க கட்டணம் வசூலிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது. தற்போது அனைத்து வாகனங்களும் ஆர் எஃப் ஐடியில் ஸ்கேன் செய்தால் தானாகக் கேட் திறக்கும் முறை அமலில் இருக்கிறது.

இதனால் தற்போது சுங்க கட்டணம் செலுத்தாமல் சுங்கச்சாவடியைக் கடப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. இருந்தாலும் தற்போது அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் சிலருக்கு மட்டும் சுங்கச்சாவடி கட்டணத்திலிருந்திருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சுங்கச்சாவடியைக் கடக்கும் போது அதற்கான கட்டணம் செலுத்த வேண்டிய தேவையில்லை. அதன்படி யார் யாருக்கு தற்போது இந்த சுங்கச்சாவடி கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது எனக் காணலாம்.

இவங்க எல்லாம் டோல்கேட் கட்டணம் செலுத்தத் தேவையில்லை! நிதின்கட்கரி வெளியிட்ட புதிய பட்டியல்!

சுங்க கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்களின் பட்டியல்:

1. இந்தியக் குடியரசுத் தலைவர்
2. இந்தியப் பிரதமர்
3. இந்தியத் தலைமை நீதிபதி
4. இந்தியத் துணை குடியரசுத் தலைவர்
5. மாநில கவர்னர்கள்
6. மத்திய அமைச்சர்கள்
7. லோக் சபா சபாநாயகர்
8. சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்
9. மத்திய இணையமைச்சர்கள்
10. மாநில முதலமைச்சர்கள்
11. யூனியன் பிரதேச கவர்னர்கள்
12. ஜெனரல் அல்லது அதற்குச் சமமான பதவியில் உள்ளவர்கள்
13. மக்களவை உறுப்பினர்கள்
14. மாநில உயர் நீதிமன்ற நீதிபதிகள்
15. மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி
16. மாநில மேலவை உறுப்பினர்கள்
17. இந்திய அரசின் செயலாளர்கள்
18. மாநிலங்கள் அவை உறுப்பினர்கள்
19. ராணுவ கமெண்டர்கள், ராணுவ அதிகாரியின் துணைத் தலைவர்கள்
20. மாநிலத் தலைமைச் செயலாளர்கள் (மாநிலத்திற்குள் மட்டும்)
21. மாநில சட்டமன்ற உறுப்பினர்கள்
22. இந்தியாவிற்கு அலுவல் ரீதியாக வந்துள்ள வெளிநாட்டுப் பிரமுகர்கள்

இந்த பட்டியலில் உள்ளவர்களுக்கு சுங்க கட்டணம் கிடையாது. இந்த தகவலை தற்போது மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்கரி உறுதிப்படுத்தியுள்ளார். பலருக்கு சில அரசு அதிகாரிகளின் வாகனங்கள் மட்டும் சுங்க கட்டணம் செலுத்தாமல் செல்வதாக வெளியான செய்தியை அடுத்து இந்த தகவல் வெளியாகியுள்ளது. இது மட்டுமல்ல இந்த பட்டியலுடன் சில பணியில் உள்ள மற்ற வாகனங்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிலருக்கும் விதிவிலக்கு!

மத்திய மாநிலத் துப்பாக்கி ஏந்திய சீருடை பணியாளர்கள், பாராளுமன்ற காவலர்கள், மாநில போலீஸ், தீயணைப்பு வாகனங்கள், பிரத்தியேக மஜிஸ்திரேட், ஆய்வாளர்கள், சர்வே பணியாளர்கள், தேசிய நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் செயல்பாட்டுப் பிரிவில் இருக்கும் வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் அதற்குரிய பணியில் இருக்கும் போது மட்டும் டோல்கேட் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. அவர்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இது போக ஊனமுற்றவர்களுக்காகப் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனங்களுக்கும் சுங்கச்சாவடி கட்டணம் கிடையாது. மற்றவர்கள் பாஸ்ட் டேக் முறையில் கட்டணம் செலுத்த வேண்டும். பாஸ்ட் டேக் இல்லாத வாகனங்கள் அதிகமான கட்டணம் செலுத்த வேண்டும். இந்தியாவில் 97 சதவீதமான கட்டணங்கள் பாஸ்ட் டேக் முறையிலேயே செலுத்தப்படுகிறது. இந்த செய்தி குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

Article Published On: Wednesday, January 4, 2023, 10:49 [IST]
English summary
These people are exempted from toll tax nithin Gadkari issued a new list
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+