Just In
- 29 min ago
சார்ஜ் போடாமல் வெறும் சூரிய வெளிச்சத்திலேயே காரை இயக்க முடியுமா? இரவு நேரம் இது எப்படி இயங்கும்?
- 1 hr ago
டிவிஎஸ் எக்ஸ்எல்-ஐயே தூக்கி சாப்பிட்ரும் போல... மைலேஜ் தருவதில் செம்ம கில்லாடி!
- 2 hrs ago
இந்த காருக்கான புக்கிங்கை கேன்சல் செய்தால் ரூ2லட்சம் பணம்! ஃபோர்டு நிறுவனம் அறிவித்துள்ள செம ஆஃபர்!
- 3 hrs ago
பெட்ரோல் பங்க் ஊழியர் செய்த காரியத்தால் நடுவழியில் தவித்த குடும்பம்! கடவுளாய் வந்து காப்பாற்றிய மஹிந்திரா!
Don't Miss!
- News
அடடே! என்ன புதுசா இருக்கு.. படகு போல பெங்களூரு சாலையில் சென்ற வாகனம்.. வியந்து பார்த்த வாகன ஓட்டிகள்
- Technology
ஒரு மேகத்துக்குள் இவ்வளவு ரகசியம் இருக்கா? உண்மையை கட்டவிழ்த்த NASA ஜேம்ஸ் வெப்! மெய்சிலிர்த்த விஞ்ஞானிகள்!
- Finance
கடன் நெருக்கடி.. சீனா பில்லியனர் Hui ka-வின் சொத்துமதிப்பு 93% சரிவு..!
- Sports
அவங்க நாடு மீது தான் விஸ்வாசம் இருக்கும்.. இந்தியா தோற்றதுக்கு காரணமே அது தான்.. கவாஸ்கர் தாக்கு
- Lifestyle
நீங்க 3, 12, 21 மற்றும் 30 தேதிகளில் பிறந்தவரா?அப்ப உங்களுக்கு எப்படிப்பட்ட எதிர்காலம் காத்திருக்கு தெரியுமா?
- Movies
கொலை வெறியில் இருக்கிறோம்.. ஜாக்கிரதையாக இருங்க ராஜமௌலி.. ராம்கோபால் வர்மாவின் ஷாக் ட்வீட்!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
ஷோரூம் ஊழியர்களுக்கே தெரியாத விஷயம் இது! ஆட்டோ கியர் காரை யாரெல்லாம் வாங்ககூடாதுன்னு தெரியுமா?
இன்று கார்களில் ஆட்டோமெட்டிக் கியர் ஆப்ஷன்கள் பல வந்துவிட்டன. சிறிய கார்கள் முதல் பெரிய கார்கள் வரை இந்த கியர் ஆப்ஷகள் இருக்கிறது. மக்கள் பலர் ஆட்டோமெட்டிக் கியர் ஆப்ஷன்கள் கொண்ட காரை அதிகம் விரும்புகின்றனர். ரூ3.4 லட்சம் முதல் இந்த கார்கள் மார்கெட்டில் கிடைக்கிறது. ஆனால் இந்த ஆட்டோமெட்டிக் கியர் கார்கள் சிலருக்கு மட்டும் ஒத்து வராது. இது யார்? ஏன் ஒத்து வராது? இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
பட்ஜெட்
நீங்கள் கார் வாங்கும் போது பட்ஜெட் குறித்து அதிகம் யோசிப்பவராக இருந்தால் ஆட்டோ கியர் காரை துணிந்து உங்கள் தேர்வுகளிலிருந்து நீக்கிவிடுங்கள். மேனுவல் கியர் காரை விட ஆட்டோமெட்டிக் கியர் காரின் விலை அதிகமாக இருக்கும். ஏற்கனவே பட்ஜெட் குறித்து அதிகம் யோசிக்கும் நீங்கள் ஆட்டோ கியர் காருக்காக அதிகம் செலவு செய்ய வேண்டிய தேவையில்லை. அது உங்களுக்குப் பின்னாளில் பெரிய சேமிப்பையும் ஏற்படுத்தப்போவதில்லை. இப்பொழுது செலவு செய்தால் பின்னாளில் வரும் செலவைக் குறைக்கலாம் என்றால் கூட இதைத் தேர்வு செய்யலாம். அதனால் நீங்கள் துணிந்து ஆட்டோமெட்டிக் கியர் காரை தேர்வு செய்வதைத் தவிர்த்து விடுங்கள்.

குறைவான டிராஃபிக்
நீங்கள் இருக்கும் பகுதியில் குறைவான டிராஃபிக் கொண்ட பகுதி அல்லது உங்கள் பயன்பாடு பெரும்பாலும் தேசிய நெடுஞ்சாலைகளிலேயே இருக்கும் என நினைத்தால் நீங்கள் ஆட்டோமெட்டிக் கியர் பொருத்தப்பட்ட காரை எடுக்க வேண்டிய அவசியமே இருக்காது. டிராஃபிக் இல்லாத நீண்ட தூரப் பயணத்தில் நீங்கள் மேனுவல் கியரில் பயணித்தாலும் அடிக்கடி கியர் மாற்ற வேண்டிய தேவை இருக்காது. இங்கு ஆட்டோ கியரால் கிடைக்கும் நன்மைக்கே வேலையில்லை. நீங்களும் ஆட்டோ கியர் கார்களை கட்டாயம் தவித்துவிடலாம்.
மைலேஜ்
கார் பயன்படுத்தும் உங்களுக்கு மைலேஜ் குறித்து அதிகமாகக் கவனம் இருந்தாலும் ஆட்டோ கியர் காரை தேர்வு செய்ய வேண்டாம். மேனுவல் கியர் காரைவிட ஆட்டோமெட்டிக் கியர் பொருத்தப்பட்ட காரில் மைலேஜ் குறைவாகத்தான் கிடைக்கும். பல கார்களில் மேனுவல் கியரை காரை விட மைலேஜ் அதிகமாகக் கிடைக்கும் என கார் தயாரிப்பு நிறுவனங்கள் கிளைம் செய்தாலும் ரியல் வேல்டிற்கு வரும் போது மைலேஜ் வெகுவாக குறைகிறது. இதனால் மைலேஜிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் இந்த ஆட்டோமெட்டிக் கியர் கார்களை தவிர்த்து விடுங்கள்.
பராமரிப்பு
பராமரிப்பு செலவைப் பொருத்தவரை ஆட்டோமெட்டிக் கியர் பொருத்தப்பட்ட கார்களுக்கு மேனுவல் கியர் கார்களை விட செலவு அதிகம். நீங்கள் கார் பராமரிப்பில் அதிகம் செலவு செய்ய விரும்பாதவர் அல்லது குறிப்பிட்ட இடைவெளியில் காரை பராமரிப்பு செய்யும் பழக்கம் இல்லாதவராக இருந்தால் ஆட்டோமெட்டிக் கியர் காரை தவிர்க்கவும், ஆட்டோ கியர் கார்களை முறையாகப் பராமரிக்காவிட்டால் அதிகம் செலவை இழுத்து விட்டுவிடும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
வெள்ள அபாய பகுதி
நீங்கள் வசிக்கும் இடம் அடிக்கடி மழை பெய்து சாலையில் நீர் தேங்கி நிற்கும் இடம் அல்லது அவ்வப்போது காரை நீங்கள் தண்ணீர் ஓடும் ஓடை அல்லது ஆற்றைக் கடந்து செல்ல பயன்படுத்துவீர்கள் என்றால் உங்களுக்கும் ஆட்டோமெட்டிக் கியர் கார் தேவையில்லை. பொதுவாக மேனுவல் கியர் கார்களில் தண்ணீரில் கார் செல்லும் போது ஆர்பிஎம்மில் நல்ல கண்ட்ரோல் கிடைக்கும். இதனால் எக்ஸாஸ்ட் வழியாகத் தண்ணீர் இன்ஜினிற்குள் செல்லாமல் இருக்கும். ஆட்டோமெட்டிக் கார்களில் கார் குறிப்பிட்ட வேகத்தில் சென்றால் கியர் தானாக அதிகமாகிவிடும். இதனால் கார் பாதிப்பிற்குள்ளாகும்.
ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ்களை பொருத்தவரை மொத்தம் ஏஎம்டி, சிவிடி, டார்க் கன்வெர்டர், மற்றும் டிசிடி ஆகிய கியர் பாக்ஸ்கள் இருக்கிறது. இதில் எல்லா வகையான கியர் பாக்ஸிற்கும் நாம் மேலே சொன்ன விஷயங்கள் பொருந்தும், சில கார்கள் ஆட்டோமெட்டிக் கியர் ஆப்ஷனை தவிர மேனுவல் கியர் ஆப்ஷனே இல்லாமல் இருக்கும் அந்த வகையான கார்களை தேர்வு செய்தால் ஆட்டோமெட்டிக் கியரை வாங்குவதை தவிர வேறு வழியில்லை.
ஆட்டோ கியரை பொருத்தவரை பெரு நகரங்களில் கடும் போக்குவரத்து நெருக்கடிக்குள் பயணிப்பவர்களுக்கு மட்டுமே சிறந்ததாக இருக்கும். அடிக்கடி கியரை மாற்ற வேண்டிய தேவை இருக்காது. சிங்கிள் பெடலில் காரை இயக்க முடியும். ஆட்டோமெட்டிக் கியர் என்பது சிலரின் தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்கிறது. அதனால் உங்கள் தேவை என்ன என்பதை அறிந்து கொண்டு அதற்கான காரை தேர்வு செய்வது அவசியம்.உங்களுக்கு அவசியம் இருந்தால் மட்டுமே ஆட்டோமெட்டிக் கியர் கார்களை தேர்வு செய்யுங்கள் இல்லை என்றால் மேனுவல் கியர் கார்களே பெஸ்ட்!
-
ஓலா, ஏத்தரின் கொட்டத்தை அடக்கத் துவங்கப்பட்டது சிம்பிள் எனர்ஜி ஆலை! தமிழகத்திற்குக் கிடைத்த மற்றொரு மகுடம்
-
2023 ஆட்டோ எக்ஸ்போவில் எல்லாரது கண்ணும் இந்த 5 கார்கள் மீதுதான்!! ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகத்தில்...
-
காருக்குள் திடீர்ன்னு அழுகுன முட்டை நாத்தம் அடிக்குதா! அப்ப இதான் மாத்துனா தான் அது சரியாகும்!