வெறும் 60 வினாடிகள் தான்... ராயல் என்பீல்டு பைக்கை திருட இந்த திருடனுக்கு ஆகும் நேரம்!! ஷாக்கான போலீஸார்!

பைக் திருட்டு வழக்கில் சிக்கிய திருடன் ஒருவன் தான் எவ்வாறு ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்களை சில நிமிடங்களில் திருடினேன் என்பதை செய்து காட்டி போலீஸாரை பிரம்மிக்க வைத்துள்ளான். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள வீடியோவினை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

வெறும் 60 வினாடிகள் தான்... ராயல் என்பீல்டு பைக்கை திருட இந்த திருடனுக்கு ஆகும் நேரம்!! ஷாக்கான போலீஸார்!

இந்தியாவின் முன்னணி மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ராயல் என்பீல்டு சென்னையில் தலைமையிடமாக கொண்டதாக விளங்குகிறது. புதிய கிளாசிக் மோட்டார்சைக்கிள்கள் சந்தையில் மட்டுமின்றி, பயன்படுத்தப்பட்ட பைக்குகள் சந்தையிலும் ராயல் என்பீல்டின் தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

வெறும் 60 வினாடிகள் தான்... ராயல் என்பீல்டு பைக்கை திருட இந்த திருடனுக்கு ஆகும் நேரம்!! ஷாக்கான போலீஸார்!

இதற்கு காரணம், ராயல் என்பீல்டு மிக பழமையான மோட்டார்சைக்கிள் பிராண்ட் என்பது ஒருபக்கம் இருந்தாலும், இந்த நிறுவனத்தின் பைக்குகள் ஆப்ரேட் செய்வதற்கு சற்று சிக்கலானவை, ஆதலால் பழக்கப்பட்ட உரிமையாளருக்கே எளிதாக கண்ட்ரோல் செய்ய உதவும் என்பது ஒரு காரணமாகும். இதனாலேயே ராயல் என்பீல்டு பைக்குகள் எளிதாக திருடு போவது இல்லை என்கிற கருத்து பரவலாக உள்ளது.

வெறும் 60 வினாடிகள் தான்... ராயல் என்பீல்டு பைக்கை திருட இந்த திருடனுக்கு ஆகும் நேரம்!! ஷாக்கான போலீஸார்!

இருப்பினும் இந்த பைக் திருடன் மிக எளிமையாக வெறும் 60 வினாடிகளில் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை அன்லாக் செய்து விடுகிறான். இதனை அவன் போலீஸாரின் முன்பே செய்தும் காட்டியுள்ளான். இதுதொடர்பாக யுடியூப் சேனல் ஒன்றில் பதிவிடப்பட்டுள்ள வீடியோவினை கீழே காணலாம்.

ராயல் என்பீல்டின் கிளாசிக் 350 சந்தையில் முதன்முதலாக 2009இல் அறிமுகப்படுத்தப்பட்ட போது கல்லூரி மாணவர்கள், போலீஸ்காரர்கள், இராணுவ துறையை சேர்ந்தவர்கள் என அனைத்து பிரிவு மக்களையும் வெகுவாக கவர்ந்தது. இப்போதும் மீட்டியோர் 350 & ஹிமாலயன் என வெவ்வேறு விதமான ராயல் என்பீல்டு பைக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், கிளாசிக் 350-ஐ வாங்குவதற்கு தனி கூட்டம் உள்ளது.

வெறும் 60 வினாடிகள் தான்... ராயல் என்பீல்டு பைக்கை திருட இந்த திருடனுக்கு ஆகும் நேரம்!! ஷாக்கான போலீஸார்!

இதனாலேயே அவ்வப்போது இந்த பைக்கினை ராயல் என்பீல்டு நிறுவனம் அப்டேட் செய்துவிடுகிறது. எனவே கிளாசிக் 350 பைக்குகளின் தரம் சிறப்பானதாக இருப்பதால், பயன்படுத்தப்பட்ட பைக்குகள் சந்தையிலும் இதற்கு நல்ல மதிப்பு கிடைக்கிறது. இதன் காரணமாக கிளாசிக் 350 மற்றவர்களை கவர்வதைபோல் திருடர்களையும் கவர்ந்துவிடுகிறது போலும். ஏனெனில் கடந்த சில வருடங்களில் திருடப்படும் கிளாசிக் 350 பைக்குகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.

வெறும் 60 வினாடிகள் தான்... ராயல் என்பீல்டு பைக்கை திருட இந்த திருடனுக்கு ஆகும் நேரம்!! ஷாக்கான போலீஸார்!

இதற்கு காரணமான திருடர்களுள் ஒருவராக இருக்கும் இந்த திருடன் பைக்கை திருடும்போது முதலாவதாக, பைக்கின் ஹேண்டில்பார் லாக்கை கால்களை உபயோகித்து உடைத்துவிடுகிறான். இதற்காக அவன் பின் இறுதிமுனையில் வழங்கப்படும் க்ராப் ரெயிலில் இருந்து முழு இருக்கை அமைப்பையும் பயன்படுத்தி கொள்கிறான். ஆகையால் சாலையில் செல்லும்போது இவ்வாறான செயல்களில் யாரேனும் ஈடுப்பட்டு கொண்டிருந்தால் அவர்கள் பைக்கின் ஹேண்டில்பார் லாக்கை உடைக்க முயற்சித்து கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தமாகும்.

வெறும் 60 வினாடிகள் தான்... ராயல் என்பீல்டு பைக்கை திருட இந்த திருடனுக்கு ஆகும் நேரம்!! ஷாக்கான போலீஸார்!

அதன்பின் இந்த திருடன் இக்னிஷன் வயர் மற்றும் பேட்டரி உடன் இணைக்கப்பட்டுள்ள ஃப்யுஸ் இணைப்பானை தனது பல்லால் கடித்து துண்டிக்கிறான். இந்த வயர்கள் கிளாசிக் 350-இல் ஹெட்லேம்பிற்கு பின்பக்கத்தில் வழங்கப்படுகிறது. அதன்பின் மீண்டும் இவை சேர்க்கப்பட்டு, எலக்ட்ரிக் ஸ்டார்டர் கொடுக்கும்போது பைக்கின் என்ஜின் ஸ்டார்ட் ஆகிவிடுகிறது. இத்தனை வேலைப்பாடுகளையும் ஒரு மெக்கானிக் கூட சில நிமிடங்களை எடுத்து கொண்டுதான் செய்வார்.

வெறும் 60 வினாடிகள் தான்... ராயல் என்பீல்டு பைக்கை திருட இந்த திருடனுக்கு ஆகும் நேரம்!! ஷாக்கான போலீஸார்!

ஆனால் இந்த திருடன் மிகவும் எளிதாக செய்து முடிக்கிறான். இதில் இருந்து இவன் பைக்குகளை திருடுவதில் கைத்தேர்ந்தவன் என்பது மட்டும் தெளிவாகிறது. இதனை அருகில் நின்றிருந்த போலீசார் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக் ஒற்றை-பக்க ஹேண்டில்பார் லாக்கை மட்டுமே பெற்று வருகிறது. இதனை தவிர்த்து இந்த பைக்கில் பூட்டக்கூடிய இக்னிஷன் சாவித்துளை, ப்ளூடூத் மூலமாக அப்ரேட் செய்யக்கூடிய ட்ராக்கிங் அமைப்பு அல்லது திருடுப்போவதை எச்சரிப்பான் உள்ளிட்ட மாடர்ன் பாதுகாப்பு வசதிகள் எதுவும் வழங்கப்படுவதில்லை.

வெறும் 60 வினாடிகள் தான்... ராயல் என்பீல்டு பைக்கை திருட இந்த திருடனுக்கு ஆகும் நேரம்!! ஷாக்கான போலீஸார்!

ஆதலால் கிளாசிக் 350 பைக்கை வைத்திருப்போர் கூடுதல் பாதுகாப்பு தேவை என நினைத்தால், பிரேக் டிஸ்க் லாக் மற்றும் முன்பக்க ஃபோர்க் லாக் போன்ற ஹேண்டில்பாரை தவிர்த்து மற்ற இயந்திர பாகங்களுக்கான பூட்டுகளை வாங்கி பொருத்தி கொள்ளலாம். அதேபோல் திருடப்படும் சமயத்தில் என்ஜின் ஸ்டார்ட் ஆகுவதை தடுக்கும் இம்பொளிசர் மற்றும் வாகனம் இருக்கும் இடத்தை தெரிவிக்கும் டிராக்கர் போன்றவையும் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. இவற்றையும் முயற்சி செய்து பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, March 17, 2022, 20:34 [IST]
English summary
Thief gives demo how to stole a motorcycle in just 30 seconds video details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+