லேப்டாப் உடன் வந்து டொயோட்டா ஃபார்ச்சூனரை திருடியது அவரா! வீடியோவ பாத்ததும் உறைந்து போன கார் உரிமையாளர்கள்!
சாஃப்ட்வேர் சார்ந்த தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், புதிய கார்களை திருடுவது என்பது, கொள்ளையர்களுக்கு சவாலான ஒரு விஷயமாக மாறியுள்ளது. முந்தைய காலங்களை போல், தற்போதெல்லாம் கார்களை எளிதாக திருடி செல்ல முடியாது. ஆனால் காலத்திற்கு ஏற்ப கொள்ளையர்களும் 'அப்டேட்' ஆகி வருகின்றனர் என்பது வருத்தமான ஒரு விஷயம்.
இதை உண்மை என நிரூபிக்கும் வகையிலான சம்பவம் ஒன்று, உத்தர பிரதேச (Uttar Pradesh) மாநிலம் கோரக்பூர் (Gorakhpur) பகுதியில் அரங்கேறியுள்ளது. அங்கே சமீபத்தில் ஒரு பெண், தனது லேப்டாப்பில் (Laptop) இருந்த ஒரு சாஃப்ட்வேர் மூலமாக டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) காரை திருடி சென்றுள்ளார்.

சம்பவத்தன்று வீட்டின் வெளியே டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் நிறுத்தப்பட்டிருந்தது. இது வெள்ளை நிற கார் ஆகும். அப்போது அங்கு பெண் ஒருவர் வந்தார். அவரது ஹேண்ட்பேக்கில் லேப்டாப் ஒன்று இருந்தது. டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை நெருங்கியதும், அதன் ஜன்னல் கண்ணாடியை அவர் அடித்து நொறுக்கினார்.
இதன்பின் டொயோட்டா ஃபார்ச்சூனர் காருக்கு உள்ளே அவர் சென்று விட்டார். அதற்கு பிறகு அவர் கையில் வைத்திருந்த லேப்டாப்பில் இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்த ஒரு சாஃப்ட்வேர் மூலமாக, டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை ஸ்டார்ட் செய்ய அவர் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. ஒரு சில முறை முயற்சி செய்த பின், டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் ஸ்டார்ட் ஆகி விட்டது.

இதன்பின் அங்கிருந்து காருடன் அவர் தப்பி விட்டார். இந்த காட்சிகள் அனைத்தும், அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. அந்த காட்சிகள் யூடியூப் (YouTube) தளத்தில் தற்போது பதிவிடப்பட்டுள்ளன. இந்த வைரல் வீடியோ (Viral Video), கார் உரிமையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் ஆரம்ப விலையே (Price) 33.43 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 51.44 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்-ரோடு விலை இன்னும் கூடுதலாக வரும்.
இவ்வளவு விலை உயர்ந்த ஒரு காரை, பெண் ஒருவர் சாஃப்ட்வேர் தொழில்நுட்பம் மூலம் எளிதாக திருடி சென்றிருப்பது, கார் வைத்திருப்பவர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் ஏற்கனவே கூறியபடி, தற்போதைய அதிநவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப கொள்ளையர்கள் அப்டேட் ஆகி வருகின்றனர் என்பதற்கு, இது மிகச்சிறந்த ஒரு உதாரணம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அதிக பணம் கொடுத்து வாங்கப்பட்ட கார்கள் கொள்ளை போவதை தடுக்க வேண்டுமென்றால், அதிநவீன தொழில்நுட்பங்கள் இருந்தால் மட்டும் போதாது. கூடவே பாதுகாப்பான இடங்களில் கார்கள் பார்க்கிங் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதை இந்த சம்பவம் நன்றாக உணர்த்தி விட்டது.
கோரக்பூரில் நடந்த இந்த கொள்ளை சம்பவத்தில், டொயோட்டா ஃபார்ச்சூனர் கார், வீட்டிற்கு வெளியேதான் நிறுத்தப்பட்டிருந்தது. எனவே கார் உரிமையாளர்கள் அனைவரும், தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு, பாதுகாப்பான ஒரு இடத்தை ஏற்பாடு செய்து கொள்வது நல்லது. புதிய கார் வாங்க திட்டமிட்டுள்ளவர்களும், பாதுகாப்பான பார்க்கிங் இடவசதி குறித்து முடிவெடுத்ததற்கு பின்னர், கார்களை வாங்குவது நன்மை பயக்கும்.
இந்த கோரக்பூர் கொள்ளை சம்பவத்தை பொறுத்தவரையில், பெண் ஒருவர் ஈடுபட்டுள்ளதால், அது அதிர்ச்சியை இன்னும் அதிகமாக்கியுள்ளது. பெண்களும் தற்போது அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் கொள்ளை போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட தொடங்கி விட்டார்களே என சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் அதிர்ச்சி தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








