இந்த காரை தான் அதிகமா திருடிட்டு போறாங்களாம்... அப்படி என்ன பாதுகாப்பு வசதி குறைவா இருக்கிறது?

கனடா நாட்டில் ஹோண்டா நிறுவனத்தின் சிஆர்வி கார் அதிகம் களவு போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பதிவான வழக்குகளில் உள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.

இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் கார் திருட்டு நடந்து கொண்டே தான் இருக்கிறது. பொது இடம், தனியார் இடம் என கார்கள் எங்குப் பாதுகாப்பில்லாமல் அஜாக்கிரதையாக நிறுத்தப்பட்டாலும் திருடப்படும் அபாயம் இருக்கிறது.

இந்த காரை தான் அதிகமா திருடிட்டு போறாங்களாம்... அப்படி என்ன பாதுகாப்பு வசதி குறைவா இருக்கிறது?

கார் திருட்டிற்குப் பின்னால் மிகப்பெரிய கள்ளச் சந்தையே இருக்கிறது. இது இந்தியா உள்ளிட்ட உலகின் அனைத்து பகுதிகளிலும் இந்த விஷயம் நடந்து கொண்டே தான் இருக்கிறது. இது எல்லாம் ஒருபுறம் இருக்க கார் திருட்டு குறித்துப் பதிவான வழக்குகளின் தகவல்களை வைத்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.

அதன்படி கனடா நாட்டில் ஹோண்டா நிறுவனத்தின் சிஆர்-வி கார் தான் அதிகமாகத் திருடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது மட்டுமல்ல லெக்சஸ் ஆர்எக்ஸ் காரும் அதிகமாகத் திருடப்பட்டுள்ளது. இதன்படி அந்நாட்டில் மொத்தம் 2,34,550 ஹோண்டா சிஆர்வி கார்கள் இன்சூர் செய்யப்பட்டுள்ளது. அதில் 1.7 சதவீதம் அதாவது மொத்தம் 4117 கார்கள் திருடப்பட்டுள்ளது.

இது போக மொத்தம் பதிவான திருட்டு வழக்குகளில் 6.4 சதவீதம் அதாவது ஒவ்வொரு 16 கார் திருட்டிலும் ஒரு லெக்சஸ் ஆர்எக்ஸ் காராவது இருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2016-2021ம் ஆண்டு வரை மொத்தம் 34,560 லெக்சஸ் ஆர்எக்ஸ் கார்கள் இன்சூர் செய்யப்பட்டுள்ளது. அதில் 2202 கார்கள் திருடப்பட்டுள்ளது.

இந்த இரண்டு கார்கள் தான் கனடா நாட்டில் அதிகமாகத் திருடப்படும் கார்களாக இருக்கிறது. இதற்கு அடுத்த இதத்தில் ஃபோர்டு பிக்கப் டிரக் இருக்கிறது. இது மொத்தம் 1182 ஃபோர்டு பிக்கப் டிரக் திருடப்பட்டுள்ளது. இது போக ஜிஎம்சி சியரா, செர்வலேட் சில்வரடோ, டொயோட்டா ஆர்ஏவி4 மற்றும் ராம் பிக்கப் ஆகிய கார்களும் அதிகம் திருடப்படும் கார்களின் பட்டியலில் இருக்கிறது.

இதுவே ஹோண்டா நிறுவனத்தின் சிவிக் கார் குறைவாகத் திருடப்படும் காராக இருக்கிறது. இந்த கார் மொத்தம் 2,63,958 கார்கள் இன்சூர் செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்தமே 768 கார்கள் தான் திருடப்பட்டுள்ளது. கனடா நாட்டில் தற்போது ஹோண்டா சிஆர்-வி மற்றும் லெக்சஸ் ஆர்எக்ஸ் கார்களை வைத்திருக்கும் உரிமையாளர்கள் எல்லாம் தற்போது பெரும் அச்சத்தில் இருக்கின்றனர். தங்கள் கார் எப்பொழுது வேண்டுமானாலும் களவு போகலாம் என அதைப் பாதுகாத்து வருகின்றனர்.

இந்த பிரச்சனை தற்போது ஹோண்டா நிறுவனத்திற்கு பெரும் தலைவலியாக இருக்கிறது. அந்நிறுவனத்தின் கார்கள் பாதுகாப்பில்லாத கார்கள் என்ற பிம்பத்தை மக்களுக்கு ஏற்படுத்துகிறது. இதனால் மக்கள் மத்தியில் ஹோண்டா காரின் மீதான நம்பிக்கை குறைந்து வருகிறது. ஹோண்டா நிறுவனம் அதை மீட்டெடுக்க அடுத்த அப்டேட்டில் அந்த காரின் பாதுகாப்பை அதிகப்படுத்தும் விஷயங்களைக் கொண்டு வர முயல்கிறது.

More from DriveSpark

Article Published On: Monday, November 21, 2022, 19:26 [IST]
English summary
Thieves loot honda cr v cars in Canada lot
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+