தள்ளி விட்டது பேயா! ரோட்டில் திடீரென கீழே விழுந்த ஸ்கூட்டர் ரைடர்! கார் கேமராவில் பதிவான அதிர்ச்சி வீடியோ!

சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவர்களிடம் ஸ்மார்ட்போன் (Smartphone) மற்றும் தங்க நகை (Gold Jewel) போன்றவை பறிக்கப்பட்ட சம்பவங்களை கடந்த காலங்களில் நாம் பல முறை பார்த்துள்ளோம். ஆனால் இதை எல்லாம் விட மிக கொடூரமான சம்பவம் ஒன்று தற்போது நிகழ்ந்துள்ளது.

ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த ஒருவரிடம் இருந்து இளைஞர்கள் 3 பேர், செல்போனை (Cell Phone) பறித்து சென்றுள்ளனர். பாதிக்கப்பட்ட நபர், பரபரப்பான சாலையில் ஸ்கூட்டரை ஓட்டி கொண்டிருந்தபோது இந்த நிகழ்வு நடைபெற்றிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உயிருக்கு பாதிப்பு ஏற்படுமே என்பதை பற்றி எல்லாம் கவலைப்படாமல், செல்போன் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

Smartphone Thieves

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் இந்தியாவின் தலைநகர் டெல்லியில் (Delhi) நடைபெற்றுள்ளது. சம்பவத்தன்று ஸ்கூட்டரில் ஒருவர் மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தார். அவர் ஹெல்மெட் (Helmet) அணிந்திருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆனால் செல்போன் பயன்படுத்தி கொண்டே ஸ்கூட்டர் ஓட்டியது தவறாக மாறி விட்டது.

ஆம், அவர் ஒரு கையில் செல்போனை பயன்படுத்தி கொண்டே, மற்றொரு கையில் ஸ்கூட்டரை ஓட்டி கொண்டிருந்தார். இதன் காரணமாக அவரது கவனம் சாலையில் இல்லை. அப்போது டிவிஎஸ் அப்பாச்சி (TVS Apache) பைக்கில் வந்த 3 இளைஞர்கள், அவரது கையில் இருந்த செல்போனை பறித்து கொண்டு, அங்கிருந்து தப்பினர்.

Thieves Snatch Smartphone From Scooter Rider

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால், ஸ்கூட்டரில் வந்தவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். ஆனால் நல்ல வேளையாக அவருக்கு பெரிய அளவிலான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. பின்னால் வந்த வாகனங்கள் அவர் மீது ஏறியிருந்தால், விளைவுகள் மோசமானதாக இருந்திருக்கும். ஆனால் அதிர்ஷ்டவசமாக அப்படி எதுவும் நடக்கவில்லை.

அவ்வழியாக வந்து கொண்டிருந்த டாடா ஹாரியர் (Tata Harrier) கார் ஒன்றின், டேஷ்போர்டு கேமராவில் (Dashboard Camera) இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன. யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டதன் மூலமாக இந்த வைரல் வீடியோ (Viral Video) தற்போது பெரும்பாலானவர்களை சென்றடைந்து வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மற்றவர்களின் உடைமைகளை திருடுவதே தவறுதான். அதிலும் வாகனம் ஓட்டி கொண்டிருக்கும்போது செல்போனை திருடுவது என்பது, அவர்களின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம். எனவே இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு காவல் துறை அதிகாரிகள் (Police Officers), நீதிமன்றம் (Court) மூலமாக கடுமையான தண்டனைகளை பெற்று தர வேண்டும்.

இந்த சம்பவத்தில் ஸ்கூட்டரில் வந்தவர் மீதும் தவறு இருக்கவே செய்கிறது. வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்த கூடாது என அரசும் (Government), காவல் துறை அதிகாரிகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஏற்படுத்தி சலித்தே போய் விட்டன. ஆனால் இன்னமும் பலர் இதனை காது கொடுத்து கேட்க கூட தயாராக இல்லை.

இது உண்மையிலேயே வருத்தமான ஒரு விஷயம்தான். வாகனங்களை ஓட்டி கொண்டிருக்கும்போது இனி மேலாவது செல்போனை பயன்படுத்த வேண்டாம். இந்த எச்சரிக்கையை மீறினால், சாலை விபத்துக்கள் (Road Accidents) மட்டுமல்லாது, இது போன்ற கொள்ளை சம்பவங்களிலும் பாதிக்க நேரிடலாம் என்பதை அனைவரும் மனதில் வைத்து கொள்வது நல்லது.

நாம் அவசரமான உலகத்தில் வாழ்ந்து கொண்டுள்ளோம் என்பதில் யாருக்குமே மாற்று கருத்து இல்லை. ஒருவேளை அவசரமாக பேச வேண்டியது இருந்தால், வாகனத்தை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு, செல்போனை பயன்படுத்துங்கள். இது உங்களுக்கு மட்டுமல்லாது, உங்களுடன் சேர்ந்து சாலையை பயன்படுத்தும் மற்றவர்களுக்கும் நன்மையை ஏற்படுத்தும்.

இதற்கிடையே ஸ்கூட்டரில் வந்தவரை கீழே தள்ளி, செல்போனை பறித்து சென்றவர்கள் ஈவு ஈரக்கம் இல்லாதவர்கள் எனவும், அவர்கள் பேயை விட கொடூரமானவர்கள் எனவும், நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது பாரபட்சம் இல்லாமல் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதும் நெட்சடின்களின் கருத்தாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, November 18, 2023, 12:28 [IST]
English summary
Thieves snatch smartphone from scooter rider viral video all details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+