இப்படி ஒரு யோசனை திருடனுக்கு எப்படி வந்திருக்கும்! ரோட்ல நிக்குல கார்லஇதை மட்டும் திருடிட்டு போயிட்டானே!

ரோட்டில் பார்க் செய்யப்பட்டிருந்த புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் வீல்லை திருடர்கள் இரவோடு இரவாக திருடி காரை வீல் இல்லாமல் எந்த சப்போர்ட்டும் இல்லாமல் ரோட்டில் வைத்து சென்ற சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலர் இந்த புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். இந்த சம்வம் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

திருடர்களின் அட்டராசிட்டி நாளுக்கு நாள்அதிகரிக்கொண்டே வருகிறது. அவர் நூதனமாக திருடும் திறனும் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தில் உள்ள ஜவஹர் காலனி பகுதியை சேர்ந்த ஜக்தீப் சீங் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மாருதி நிறுவனத்தின் புதிய ஸ்விஃப்ட் காரை வாங்கியுள்ளார். இந்த காரை அவர் வழக்கமாக தனது வீட்டின் அருகில் ரோட்டிலேயே நிறுத்தவிட்டு சென்றுள்ளார்.

thieves Steal 4 Wheels of swift

இந்நிலையில் கடந்த 23ம் தேதி இரவு ரோட்டில் கவனிக்க யாரும் இல்லாத நேரத்தில் திருடர்கள் சிலர் இந்த காரில் தங்கள் கைவரிசையை காட்ட முடிவு செய்தனர். காரை மொத்தமாக திருடினால் மாட்டிக்கொள்வோம் என்பதை அறிந்த அவர், காரின் வீல்களை மட்டும் திருட முடிவு செய்தனர். அவர்கள் திட்டமிட்டபடி காரில் வீலை ஆக்ஸிலில் இருந்து கழட்டி காரை எந்த சப்போர்ட்டும் இல்லாமல் தரையில் நிப்பாட்டி சென்றுள்ளனர். காரின் 4 வீல்களைமே அவர் கழற்றியுள்ளனர்.

மறுநாள் காலையில் எழுந்து ஜக்தீப் சிங்கிங் தாராய் ஒம்வதி வெளியில் வந்து பார்த்த போது தான் இந்த திருட்டு சம்பவம் நடந்தது அவருக்கு தெரியவந்தது. உடனடியாக அதை ஜக்தீப் சிங்கிற்கு தெரிவித்தார். அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தியபோது அக்கம்பக்க்தினர் இரவு நேரத்தில் காரின் டயரை கழற்றும் எந்த வித்தியசமான சத்தமும் தங்களுக்கு கேட்கவில்லை என கூறியுள்ளனர். இந்த திருட்டு நடந்ததற்கு எந்த தடயமும் இல்லாமல் இருக்கிறது.

thieves Steal 4 Wheels of swift

இதையடுத்து அப்பகுதியை சுற்றியுள்ள பகுதியில் அமைக்கப்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். போலீசார் சில நபர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் தற்போது விசாரணை நடந்து வருவதாகவும், கூறப்படுகிறது.விரைவில் இந்த திருட்டில் ஈடுபட்டவர்கள் பிடிபடுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

வாகனத்தில் வீலை மட்டும் திருடுவது இது ஒன்றும் முதன்முறை கிடையாது. இதற்கு முன்னர் பல இடங்களில் இது போன்ற நிறுத்தி வைக்கப்பட்ட வாகனத்தின் வீல் மட்டும் திருடுபோயுள்ளது. இப்படியாக திருடு போன வாகனங்கள் எல்லாம் பொது இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள்.

இதனால் நீங்கள் வாகனங்களை பத்திரமாக தனியார் இடத்திலோ, அல்லது பாதுகாப்பான இடத்திலோ நிறுத்த வைப்பதன் மூலம் இப்படியான திருட்டுகளை தவிர்க்க முடியும். இதனால் நீங்கள் தற்போது இரவு நேரத்தில் வாகனத்தை சாலையோரத்திலோ அல்லது தெருக்களிலேயே நிறுத்தாதீர்கள். இது உங்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் திருட்டை தடுக்க பல தொழிற்நுட்பங்களை கொண்டு வந்தாலும் அதற்கு ஏற்ப திருடர்கள் தங்களை அப்டேட் செய்து கொண்டு எப்படி திருடினால் மாட்ட மாட்டோம் என யோசித்து திருடுகிறார்கள் இதனால் இனி நீங்கள் உஷாராக இருந்தால் தான் இது போன்ற பிரச்சனையில் இருந்து தப்பிக்க முடியும்.

More from DriveSpark

Article Published On: Friday, June 27, 2025, 14:00 [IST]
English summary
Thieves steal 4 wheels of swift in rajasthan viral incident
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+