சாவி இல்லாமல் 50 நொடிகளில் ஹை-டெக் முறையில் நடைபெற்ற மெர்சிடிஸ் கார் திருட்டு..!! (வீடியோ)

Written By:

ஆபத்து காலத்தில் நம்மை பாதுகாக்கும் கார்களுக்கு, நாம் இல்லாத போது பாதுகாப்பு உள்ளதா..? இவ்வாறு சந்தேகம் எழுவதற்கு காரணமாக இங்கிலாந்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

சாவி இல்லாமல் 50 நொடிகளில் திருடப்பட்ட மெர்சிடிஸ் கார்..!!

இங்கிலாந்தின் மிட்லேண்ட்ஸ் பகுதியில் சாவியை பயன்படுத்தாமல், ரிலே பாக்ஸ் மூலம் ஆடம்பர மெர்சிடிஸ் காரை இரண்டு திருடர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாவி இல்லாமல் 50 நொடிகளில் திருடப்பட்ட மெர்சிடிஸ் கார்..!!

இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ள போலீசார், ஹை-டெக் திருட்டு பற்றி கிடைக்கப்பெற்ற முதல் வீடியோ ஆதாரம் இது என கூறுகின்றனர்.

சாவி இல்லாமல் 50 நொடிகளில் திருடப்பட்ட மெர்சிடிஸ் கார்..!!

இங்கிலாந்து வெஸ்ட் மிட்லேண்ட்ஸின் உள்ள சோலிஹில் பகுதியில் கடந்த செப்டம்பர் 24ம் தேதி இந்த திருட்டு சம்பவம் நடந்துள்ளது.

சாவி இல்லாமல் 50 நொடிகளில் திருடப்பட்ட மெர்சிடிஸ் கார்..!!

காரை திருட வந்த இரு மர்ம அசாமிகளில் ஒருவன், கையில் வைத்திருக்கும் பெட்டியை உரிமையாளர் வீட்டின் முன்புறமாக நின்று கொண்டு அசைக்கிறான்.

சில நொடிகளில் இந்த கார் எப்படி திருடப்படுகிறது என்பதற்கான வீடியோ:

பிறகு காரோடு ஒட்டி நிற்கும் மற்றொரு திருடன் தான் வைத்திருக்கும் ஒரு பெட்டியின் மூலம் காரின் விளக்குகளை இயக்கி, கதவை திறந்து ஓட்டி செல்கிறான்.

சாவி இல்லாமல் 50 நொடிகளில் திருடப்பட்ட மெர்சிடிஸ் கார்..!!

வெறும் 50 நொடிகளுக்குள் நடந்த இந்த ஹை-டெக் திருட்டு சம்பவம் ரிலே பாக்ஸ் தொழில்நுட்பம் கொண்டு நடத்தப்பட்டதாக மிட்லேண்ட்ஸ் பகுதி போலீசார் கூறுகின்றனர்.

Recommended Video - Watch Now!
[Tamil] Skoda kodiaq Launched In India - DriveSpark
சாவி இல்லாமல் 50 நொடிகளில் திருடப்பட்ட மெர்சிடிஸ் கார்..!!

வீட்டிற்கு அருகில் நின்ற திருடர்களில் ஒருவன், ரிலே பாக்ஸ் மூலம் வீட்டினுள் இருக்கும் சாவியின் சிக்னலை பெறுகிறான்.

சாவி இல்லாமல் 50 நொடிகளில் திருடப்பட்ட மெர்சிடிஸ் கார்..!!

பிறகு அந்த சிக்னல் காருக்கு அருகில் இருக்கும் மற்றொரு திருடனின் இராண்டாவது பெட்டிக்கு அனுப்பப்படுகிறது. அதன்மூலம் அந்த திருடன் காரை இயக்கி கதவை திறந்து காரியத்தை முடிக்கிறான்.

சாவி இல்லாமல் 50 நொடிகளில் திருடப்பட்ட மெர்சிடிஸ் கார்..!!

ரிலே பாக்ஸ் மூலம் நடத்தப்பட்ட இந்த திருட்டு சாவி மூலமாகத்தான் கார் திறக்கப்படுகிறது என காரின் அமைப்பை நம்ப வைக்கிறார்கள்.

சாவி இல்லாமல் 50 நொடிகளில் திருடப்பட்ட மெர்சிடிஸ் கார்..!!

சிசிடிவி காட்சிகள் மூலம் திருடர்களின் செயல்பாட்டை விளக்கியுள்ள போலீசார், ஒரு ஹைடெக் திருட்டின் முதல் வீடியோ காட்சி இது எனவும் கூறுகின்றனர்.

சாவி இல்லாமல் 50 நொடிகளில் திருடப்பட்ட மெர்சிடிஸ் கார்..!!

பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இருந்தபோதிலும், கார் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது வாடிக்கையாகி வருகிறது.

சாவி இல்லாமல் 50 நொடிகளில் திருடப்பட்ட மெர்சிடிஸ் கார்..!!

குறிப்பாக தொழில்நுட்பங்கள் வளர வளரத்தான் இந்த குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக சமீபத்திய அதாரங்கள் தெரிவிக்கின்றன.

சாவி இல்லாமல் 50 நொடிகளில் திருடப்பட்ட மெர்சிடிஸ் கார்..!!

இதுபோன்ற ஹை-டெக் கார் திருட்டுகளை தடுக்க 'கார் ஸ்டீயரிங்' பூட்டுகளை பொதுமக்கள் பயன்படுத்துமாறு, போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: Thieves Steals Mercedes Car in 50 Seconds. Click for Details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark