கொஞ்சம் அசந்தா அருணா கயிறு வரைக்கும் உருவீருவாங்க! கார் உரிமையாளர்களை அதிர்ச்சியில் உறைய வைத்த கொள்ளை சம்பவம்!
இந்தியாவில் வாகனங்களுடன் தொடர்புடைய திருட்டு சம்பவங்கள் தினந்தோறும் ஏராளமாக நடைபெற்று வருகின்றன. இந்த வரிசையில், மும்பை (Mumbai) நகரில் தற்போது நடைபெற்றுள்ள ஒரு திருட்டு சம்பவம், வாகன உரிமையாளர்களை எல்லாம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இது குறித்த தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.
இந்த திருட்டு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவரின் பெயர் சரனஷ் என்பதாகும். இவர் சம்பவத்தன்று ஹூண்டாய் ஐ20 என்-லைன் (Hyundai i20 N-Line) காரை ஓட்டி சென்று கொண்டிருந்தார். அப்போது டிராபிக் சிக்னல் ஒன்றில், ஸ்கை ப்ளூ நிறத்தில் டீ-ஷர்ட் அணிந்த ஒருவர் வேண்டுமென்றே, அவரது கார் மீது மோதினார்.

அத்துடன் சரனஷ் மோசமாக கார் ஓட்டுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக பேசுவதற்காக காரின் விண்டோவை சரனஷ் கீழே இறக்கினார். அந்த நேரத்தில் காரின் மற்றொரு பக்கம், க்ரே நிறத்தில் டீ-ஷர்ட் அணிந்த ஒருவர் வந்தார். காரை உடனடியாக எடுக்கும்படி அவர் சரனஷிடம் வலியுறுத்தினார்.
காரை நிறுத்தி பேசி கொண்டிருப்பதால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது என்ற ரீதியில் அவர் பேசினார். அவரிடம் பேசுவதற்காக சரனஷ் திரும்பிய நேரத்தில், ஸ்கை ப்ளூ நிறத்தில் டீ-ஷர்ட் அணிந்திருந்த நபர், அதாவது முன்பு கார் மீது வேண்டுமென்றே மோதி பிரச்னையை ஏற்படுத்திய நபர், காருக்கு உள்ளே கையை விட்டு சரனஷின் செல்போனை எடுத்து கொண்டு, அங்கிருந்து தப்பி சென்றார்.

நடந்தது என்னவென்றால், ஸ்கை ப்ளூ நிறத்தில் டீ-ஷர்ட் அணிந்திருந்த நபரும், க்ரே நிறத்தில் டீ-ஷர்ட் அணிந்திருந்த நபரும், ஒரே கும்பலை சேர்ந்த நண்பர்கள் ஆவார்கள். ஸ்கை ப்ளூ நிறத்தில் டீ-ஷர்ட் அணிந்திருந்த நபர் வேண்டுமென்றே பிரச்னையை ஏற்படுத்தி, கார் விண்டோவை திறக்க வைத்த நேரத்தில், க்ரே நிறத்தில் டீ-ஷர்ட் அணிந்திருந்த நபர் அங்கு வந்து, சரனஷின் கவனத்தை திசை திருப்பியுள்ளார்.
சரனஷ் சற்றே அசந்த நேரத்தில், ஸ்கை ப்ளூ நிறத்தில் டீ-ஷர்ட் அணிந்திருந்த நபர், காருக்கு உள்ளே கையை விட்டு, செல்போனை திருடி சென்றுள்ளார். ஆக மொத்தத்தில் இருவரும் ஏற்கனவே திட்டமிட்டு செல்போனை கொள்ளையடித்துள்ளனர். அவர்கள் திருடி சென்றது மிகவும் விலை உயர்ந்த ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro) ஆகும்.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஆப்பிள் ஐபோன் 16 ப்ரோ செல்போனின் விலை (Price) சுமார் 1.20 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவ்வளவு விலை உயர்ந்த ஒரு செல்போனை கொள்ளையர்கள் திட்டமிட்டு திருடி சென்றிருப்பது, கார் உரிமையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடந்த சம்பவங்கள் அனைத்தும், சரனஷின் ஹூண்டாய் ஐ20 என்-லைன் காரில் இருந்த டேஷ்போர்டு கேமராவில் பதிவாகியுள்ளன. அதை Crime Tak தனது யூடியூப் (YouTube) சேனலில் தற்போது வெளியிட்டுள்ளது. அதிர்ச்சிகரமான இந்த வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கொள்ளையடிக்கப்பட்ட ஐபோன் 16 ப்ரோ செல்போன், சரனஷிற்கு, அவரது தந்தை மற்றும் சகோதரரால் பரிசாக வழங்கப்பட்டது ஆகும். எனவே அந்த செல்போன் திரும்ப கிடைத்தால் நன்றாக இருக்கும் என சரனஷ் கூறியுள்ளார். இந்த செல்போனை கண்டுபிடிப்பதற்காக, சரனஷ் காவல் துறையில் புகார் அளித்திருப்பார் என நாம் நம்பலாம்.
இது உண்மையிலேயே வருத்தமான ஒரு விஷயம் என்கிற அதே நேரத்தில், மற்ற கார் உரிமையாளர்களுக்கு எல்லாம் இது முன்னெச்சரிக்கையாக அமைந்துள்ளது. கார்களில் பயணம் செய்யும்போது, நாம் நம்முடையை உடைமைகளை காத்து கொள்ள, எந்த அளவிற்கு முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.


Click it and Unblock the Notifications








