ஏடிஎம் முன்னாடி வந்து நின்ன மாருதி கார்! உள்ளே இருந்து இறங்கியவர்களால் ஷாக்! வீடியோ பாத்து நாடே ஆடி போயிருச்சு

ஃபாஸ்ட் அண்டு ஃப்யூரியஸ் (Fast And Furious) ஹாலிவுட் திரைப்படம், இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த ரசிகர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலம். இதில் 2 கார்களை பயன்படுத்தி, வங்கியில் இருந்து பண பெட்டகத்தை கொள்ளையடித்து செல்வது போன்ற ஒரு காட்சி வரும்.

பண பெட்டகம் மற்றும் 2 கார்களையும் கயிறு மூலம் இணைத்து, இந்த கொள்ளை சம்பவம் அரங்கேற்றப்பட்டிருக்கும். இதே பாணியிலான ஒரு கொள்ளை சம்பவம் இந்தியாவில் தற்போது அரங்கேற்றப்பட்டுள்ளது. ஆனால் கொள்ளையர்களின் திட்டம் வெற்றி பெறவில்லை. எனவே இது கொள்ளை முயற்சி மட்டுமே!

Thieves Try To Steal ATM By Using Maruti Suzuki Car

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தின் சிசிடிவி வீடியோ (CCTV Video) காட்சிகள் வெளியாகி, அதிர்ச்சியுடன் சிரிப்பையும் வரவழைத்துள்ளன. இந்த வீடியோவில் 2 கொள்ளையர்கள் ஒரு ஏடிஎம் (ATM) மையத்தில் இருந்து, பணம் வினியோகம் செய்யும் இயந்திரத்தை கொள்ளையடித்து செல்ல முயற்சி செய்வதை நம்மால் காண முடிகிறது.

அவர்கள் இருவரும் மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் காரில் அங்கு வந்துள்ளனர். இந்த காரின் பின் பகுதியில் கயிற்றின் ஒரு முனையை கட்டி, மற்றொரு முனையை ஏடிஎம் இயந்திரத்தில் அவர்கள் கட்டி விட்டனர். இதன்பின் காரை வேகமாக ஓட்டி, ஏடிஎம் இயந்திரத்தை பிடுங்கி செல்வது அவர்களின் நோக்கம்.

ஆனால் எதிர்பாராதவிதமாக அவர்களின் திட்டம் தோல்வியில் முடிந்து விட்டது. ஒரு கொள்ளையன் டிரைவர் இருக்கையில் அமர்ந்து காரை ஓட்ட மற்றொரு கொள்ளையன் ஏடிஎம் மையத்தின் வாயில் அருகே நின்று கொண்டிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. ஆனால் கார் வேகமாக ஓட்டப்பட்ட சமயத்தில் ஏடிஎம் இயந்திரத்துடன், ஏடிஎம் மையத்தின் கதவும் பிடுங்கி கொண்டு வந்து விட்டது.

இதன் காரணமாக வாயில் அருகே நின்று கொண்டிருந்த கொள்ளையன் நிலைதடுமாறி கீழே விழ மொத்த திட்டமும் 'க்ளோஸ்' ஆகி விட்டது. அந்த நேரத்தில் காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. எனவே கொள்ளையர்கள் தங்கள் திட்டத்தை பாதியில் கை விட்டு விட்டு, அங்கிருந்து தலை தெறிக்க தப்பியோடி விட்டனர்.

அவர்கள் தற்போது காவல் துறை வசம் சிக்கி கொண்டார்களா? என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. ஆனால் சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் இந்த வீடியோவிற்கு, நகைச்சுவையாக கமெண்ட்களை வழங்கி வருகின்றனர். திரைப்படங்களை பார்த்து கெட்டு போய், இதுபோன்ற விபரீத முயற்சிகளில் ஈடுபட கூடாது என்ற கோணத்தில் நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் செய்து கொண்டுள்ளனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார்களை போக்குவரத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதை விடுத்து, ஏடிஎம் இயந்திரங்களை கொள்ளையடிப்பது போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்களுக்கு, கார்களை பயன்படுத்த கூடாது. நாங்கள் இங்கே கூறியுள்ள சம்பவம், மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் பிடிக்கப்பட்டு, கடுமையான தண்டனைக்கு ஆளாக வேண்டும் என்பதுதான் எங்கள் கருத்து.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 13, 2023, 14:01 [IST]
English summary
Thieves try to steal atm by using maruti suzuki car viral video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+