டெஸ்ட் டிரைவ் செய்வதாக கூறி ரூ.3 லட்சம் மதிப்புள்ள பைக் கொள்ளை: திருட்டின் அதிர்ச்சி தகவல்கள்!
டெஸ்ட் டிரைவ் செய்வதுபோல் நடித்து மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள ராயல் என்பீல்டின் புதிய இண்டர்செப்டார்650 மாடல் பைக்கைத் திருடிச்சென்ற இளைஞரை குரோம்போட்டை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சென்னை குரோம்பேட்டையில் ராயல் என்பீல்டு பைக்கிற்கான ஷோரூம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இங்கு கடந்த 5ம் தேதி பைக் வாங்குவதைப்போல் வந்த இளைஞர் ஒருவர், தன்னை ஷோபியான் என்றும், புதிதாக அறிமுகமாகியுள்ள ராயல் என்பீல்டு இண்டர்செப்டார்650 பைக்கினை வாங்க வந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
பின்னர், பைக்கினை பார்வையிட்ட அந்த இளைஞர், டெஸ்ட் டிரைவ் செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளார். இளைஞரின் ஓட்டுநர் உரிமத்தை பிணையாக வாங்கிய ஷோரூம் ஊழியர்கள் பைக்கை டெஸ்ட் டிரைவ் செய்ய ஒப்படைத்துள்ளனர். சுமார் 3 லட்சம் மதிப்புள்ள இண்டர்செப்டார்650 பைக்கைக் கொண்டுச் சென்ற அந்த இளைஞர் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை.

அப்போது, தாங்கள் ஏமாத்தப்பட்டிருப்பது ஷோரூம் ஊழியர்களுக்கு தெரியவந்தது. பின்னர், இச்சம்பவம் குறித்து குரோம்பேட்டை காவல் நிலையத்தில் அவர்கள் புகார் அளித்தனர். கொள்ளைக் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், கொள்ளைக்காரனின் பிணையாக விட்டுச்சென்ற ஓட்டுநர் உரிமத்தை ஆராய்ந்து பார்த்தனர். அதில், அது போலியானது என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, திருட்டு குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
சிசிடிவி காட்சியின்படி, பைக்கை திருடிச் சென்றவரின் உருவத்தை ஆய்வு செய்ததில், அந்த நபர் வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த ஷோபியான் என்பது தெரியவந்தது. இவன் மீது ஏற்கனவே 34 சொகுசு கார்கள் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இதற்காக 12 முறைக்கும் மேலாக கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, ஷோபியான் இதேபோன்று கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றும் விதமாக ஜாபர்கான்பேட்டையில் உள்ள ராயல் என்பீல்டு பைக் ஷோரூமில் ஈடுபட்டுள்ளான், என்பதும் தெரியவந்துள்ளது.
கடந்த 3ம் தேதி ஜாபர்கான்பேட்டை ஷோரூமிற்கு, தனது நண்பனுடன் வந்த ஷோபியான், அதே இண்டர்செப்டார்650 மாடலை வாங்க வந்திருப்பதாக கூறியுள்ளார். மேலும், அதனை டெஸ்ட் டிரைவ் செய்ய விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, டெஸ்ட் டிரைவ் பைக்கை ஷோபியானிடம் ஒப்படைத்த ஷோரூம் ஊழியர்கள், அவரது நண்பரை ஷோரூமிலேயே இருக்குமாறு கூறியுள்ளனர்.
பின்னர், அவனது நண்பனை அங்கு பிணையாக விட்டுச் சென்ற ஷோபியான், அங்கிருந்து பைக்கை ஓட்டிச்சென்றுள்ளான். கொஞ்சம் நேரம் கழித்து அவனது நண்பனுக்கு போன் செய்து அங்கிருந்து புறப்படுமாறு வற்புறுத்தியுள்ளான். ஆனால், ஷோரூம் ஊழியர்கள் அவனைக் உண்ணிப்புடன் கவணித்துக் கொண்டிருந்ததால், அவனால் அங்கிருந்து தப்ப முடியவில்லை.
இதைத்தொடர்ந்து, ஷோபியானின் நண்பன், "ஷோரூம் ஊழியர்கள் அனைவரும் தன்னையே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். பைக்கை எடுத்துக்கொண்டு சீக்கிரம் திரும்பி வா" என அழைத்துள்ளான். இதையடுத்து, நல்ல பிள்ளைப்போன்று பாவனைக் காட்டிக்கொண்டு வந்த ஷோபியான், இன்னொரு நாள் வந்து பைக்கினை வாங்கிக் கொள்வதாக தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுள்ளான்.
நண்பனுடன் சென்றாள் பைக்கைத் திருட முடியாத என நினைத்த ஷோபியான், இரண்டு நாள் கழித்து தனியாக, தனக்கே உரித்தான டெஸ்ட் பாணியைக் கையாண்டு இண்டர்செப்டார்650 மாடல் பைக்கை களவாடிச் சென்றுள்ளான்.

ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் தனது புத்தம் புதிய தயாரிப்பான இண்டர்செப்டர்650 மாடல் பைக்கை கடந்த 2017ம் ஆண்டு இத்தாலியில் நடைபெற்ற வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்தது. இதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு இந்திய சந்தையில் இந்த பைக்கை விற்பனைக்காக அறிமுகம் செய்தது.
அதிநவீன வசதிகளுடன் அறிமுகமான இந்த இண்டர்செப்டர்650 பைக்கின் தோற்றமானது பாரம்பரியமிக்க ரோட்ஸ்டெர் ரகத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இண்டர்செப்டர்650-யில் புத்தம் புதிய 650cc பேரலல் எஞ்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது. இது 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன், அதிகபட்சமாக 46.3php பவரையும், 52nm டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதன் கவர்ச்சியான தோற்றத்தில் மதி மயங்கிய இளைஞர்கள், தற்போது தங்களது பார்வையை இண்டர்செப்டர்650-ன் மீது செலுத்த தொடங்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications








