கார்களில் வழக்கொழிந்து வரும் 8 முக்கிய விஷயங்கள்!

Written By:

இதுவரை கார்களில் பரவலாக பயன்படுத்தப்பட்ட பல முக்கிய தொழில்நுட்ப அம்சங்கள் விடைபெற்று வருகின்றன. அவ்வாறு மறைந்து வரும் முக்கிய தொழில்நுட்ப அம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

01. மேனுவல் கியர்பாக்ஸ்

01. மேனுவல் கியர்பாக்ஸ்

வரும் காலங்களில் மேனுவல் கியர்பாக்ஸ் கார்கள் வழக்கொழியும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மேனுவல் கியர்பாக்ஸ் கார்களின் விற்பனை சதவீதம் பாதியாக குறைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் மூலமாக தெரிய வந்துள்ளது.

புதிய கார்களில் வழக்கொழிந்து வரும் 8 விஷயங்கள்!

அதிக எரிபொருள் சிக்கனம், சிறந்த பிக்கப் மற்றும் நகர்ப்புற பயன்பாட்டிற்கு சிறப்பாக இருப்பதால், ஆட்டோமேட்டிக் கார்களுக்கான வரவேற்பு அதிகரித்துள்ளதே முக்கிய காரணம்.

சாவி கொத்து

சாவி கொத்து

இனி சாதாரண சாவி போட்டு காரை ஸ்டார்ட் செய்யும் தொழில்நுட்பமும் பல மாடல்களில் விடைபெற்று வருகிறது. இதற்கு பதிலாக கைக்கு அடக்கமான ஸ்மார்ட் சாவி கார்களில் இடம்பெற்றுவிடும்.

புதிய கார்களில் வழக்கொழிந்து வரும் 8 விஷயங்கள்!

இந்த ஸ்மார்ட் சாவியுடன் காருக்கு அருகில் வந்தாலே கார் கதவுகள் தானாக திறந்து விடும். பூட் ரூம் மூடியையும் திறக்கலாம்.

கார் எஞ்சினை புஷ் பட்டன் ஸ்டார்ட் மூலமாக ஸ்டார்ட் செய்யவும், ஆஃப் செய்யவும் முடியும்.

ரேடியோ ஆன்டெனா

ரேடியோ ஆன்டெனா

ரேடியோவுக்கு சிக்னல் பெறுவதற்காக கூரையில் கொடுக்கப்படும் ஆன்டெனா இனி வரும் கார் மாடல்களில் இருக்காது.

Trending On Drivespark:

விரைவில் புதிய 125சிசி ஸ்கூட்டரை களமிறக்குகிறது டிவிஎஸ்! !

கார் எஞ்சினை நீண்ட நேரம் ஐட்லிங்கில் விடுவதால் ஏற்படும் தீமைகள்!

Recommended Video - Watch Now!
Porsche Panamera Sport Turismo India Launch Details - DriveSpark
புதிய கார்களில் வழக்கொழிந்து வரும் 8 விஷயங்கள்!

ஜிபிஎஸ் வசதி மற்றும் ரேடியோவுக்கு சிக்னல் தரும் சுறா துடுப்பு போன்ற புதிய ஆன்டெனா இப்போது வரும் கார்களில் இடம்பெறுகிறது.

ஸ்பேர் வீல்

ஸ்பேர் வீல்

கார்களில் இடவசதியை அதிகரிக்கும் விதத்தில், இனி முழுமையான ஸ்பேர் வீல் கார்களில் கொடுக்கப்படாது.

புதிய கார்களில் வழக்கொழிந்து வரும் 8 விஷயங்கள்!

ட்யூப்லெஸ் டயரை பஞ்சர் செய்து ஓட்டுவதற்கான கிட்டும், குறைந்த இடத்தில் பொருத்துவதற்கான ஸ்பேர் வீலும் கொடுக்கப்படும்.

ஹேண்ட்பிரேக்

ஹேண்ட்பிரேக்

ஹேண்ட்பிரேக் லிவருக்கு பதிலாக, பட்டனை அழுத்தி ஹேண்ட்பிரேக் போடும் வசதி இனி இடம்பெறும்.

புதிய கார்களில் வழக்கொழிந்து வரும் 8 விஷயங்கள்!

ஆட்டோமேட்டிக் கார்களில் பார்க்கிங் பிரேக் என்ற பெயரில் இந்த வசதி பரவலாக கொடுக்கப்படுகிறது.

பெஞ்ச் இருக்கை

பெஞ்ச் இருக்கை

பழைய கார்களில் பெஞ்ச் இருக்கைகள்தான் கொடுக்கப்பட்டு வந்தன. இந்த சூழலில், இனி புதிய கார்களில் பெஞ்ச் இருக்கைகளுக்கு வேலை இருக்காது.

புதிய கார்களில் வழக்கொழிந்து வரும் 8 விஷயங்கள்!

முன் வரிசையில் மட்டும் பக்கெட் இருக்கைகள் கொடுக்கப்படுகிறது. இனி பின் இருக்கைகளும் தனித்தனியாக கொடுக்கும் வழக்கம் துவங்கும்.

மியூசிக் சிஸ்டம்

மியூசிக் சிஸ்டம்

கார்களில் மியூசிக் சிஸ்டத்திற்கு பதிலாக ஒருங்கிணைந்த வசதிகளை தரும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பிடிக்கும்.

புதிய கார்களில் வழக்கொழிந்து வரும் 8 விஷயங்கள்!

வரும் காலங்களில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் அடிப்படை வசதியாக மாறிவிடும். பொழுதுபோக்கு வசதி, நேவிகேஷன் வசதி, கட்டுப்பாட்டு வசதிகளை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மூலமாக பெற முடியும்.

புதிய கார்களில் வழக்கொழிந்து வரும் 8 விஷயங்கள்!

சொகுசு கார்களில் இங்கே வழங்கப்பட்டிருக்கும் பல நவீன தொழில்நுட்பங்களும், வசதிகளும் இடம்பெற்று வருகின்றன. இந்த சூழலில், பட்ஜெட் கார்களிலும் இந்த மாற்றங்களை அடுத்த ஓரிரு ஆண்டுகளில் பார்க்க முடியும்.

Trending On Drivespark:

2018-ல் மூன்று புதிய கார்களை அறிமுகப்படுத்துகிறது மாருதி சுஸுகி!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கார்கள் விபரம்... இனி எளிமையின் சிகரம்னு சொல்ல முடியாதோ?

டிரைவ்ஸ்பார்க் தமிழ் யூ- ட்யூப் வீடியோ

Subscribe To DriveSpark Tamil YouTube Channel - Click Here

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
These are the features modern cars do not have, but old cars do. Over the years, the automobile industry has seen many changes, and most of them are aimed at providing more convenience to the drivers.
Story first published: Wednesday, January 3, 2018, 9:45 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark