ஹெல்மெட் வாங்க போறீங்களா... தயவு செஞ்சு இதெல்லாம் பாத்து வாங்குங்க... நிறைய விஷயம் இருக்க பாத்து வாங்குங்க!

டூ-வீலர்கள் ஹெல்மெட் அணிவது இந்தியாவில் கட்டாயம். டூ-வீலரை இயக்குபவர் மட்டுல்ல பில்லியன் ரைடரும் தலைக் கவசம் கட்டாயம் இந்தியாவில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பளிப்பதில் தலைக் கவசங்கள் முக்கிய பங்களிப்பை வழங்குகின்ற காரணத்தினால் இந்திய அரசு தலைக் கவசங்களைக் கட்டாயமாக்கியிருக்கின்றது.

இது அணியாமல் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு ரூ. 1000 வரை அபராதமாக வசூலிக்கப்படுகின்றது. ஹெல்மெட்டின்றி பயணிக்கும் இருசக்கர வாகனன ஓட்டிகளே விபத்துகளின் மிகக் கடுமையான பாதிப்புகளைச் சந்திப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த மாதிரியான அவல நிலையை போக்கும் பொருட்டே மத்திய, மாநில அரசுகள் ஹெல்மெட் விஷயத்தில் மிகக் கடுமையான முடிவுகளை எடுத்து வருகின்றன. இத்தகைய ஹெல்மெட்டை வாங்கச் செல்லும்போது அதிக கவனத்துடன் செயல்படுவது மிக அவசியமானதாக இருக்கின்றது. அது என்ன என்பது பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

பாதுகாப்பு முக்கியம் அமைச்சரே:

ஹெல்மெட் விஷயத்தில் நாம் கவனிக்க வேண்டியது பாதுகாப்பு அம்சம். மத்திய அரசாங்கம் ஹெல்மெட் அணிவதற்கு மட்டுமல்ல அதை தயாரிப்பதற்கும் சில வழிக்காட்டுதல்களை வகுத்துள்ளது. அந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்ட ஹெல்மெட்டுகளை நாம் வாங்கி பயன்படுத்த வேண்டும். குறிப்பாக நாம் பயன்படுத்தும் ஹெல்மெட் ஐஎஸ்ஐ முத்திரைப் பதிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். இந்த முத்திரை அரசின் அனைத்து விதிமுறைகளுக்கும் உட்பட்டு தயாரிக்கப்படும் ஹெல்மெட்டுகளுக்கு மட்டுமே வழங்கப்படும்.

எனவேதான் இது பொறிக்கப்பட்டிருக்கும் ஹெல்மெட்டுகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது. ஹெல்மெட்டுகளுக்கு ஐஎஸ்ஐ முத்திரை 1 ஜூன் 2021 முதல் கட்டாயமாக்கப்பட்டது குறிப்பிடத்தகுந்தது. இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்திலும் இதுபோன்று ஹெல்மெட் விஷயத்தில் பாதுகாப்பு விதிகள் கடைபிடிக்கப்படுகின்றது. எனவே ஹெல்மெட்டை வாங்கச் செல்லம் முன் இந்த விஷயத்தை எல்லாம் பார்த்து வாங்க வேண்டும். போக்குவரத்து காவலர்கள் ஐஎஸ்ஐ ஹெல்மெட் அணியவில்லை என்றாலும் அபராதம் விதிப்பர்.

தலைக்கு ஏத்த ஹெல்மெட்டை பாத்து வாங்குங்க:

இந்த விஷயத்துல கோட்டையை விட்டோம்னு வச்சுக்கோங்க, ரொம்ப கஷ்டம்தான். ஹெல்மெட் வாங்கும்போது உங்கள் தலையின் அளவை பார்த்து வாங்குவது மிக அவசியமானது. ஸ்மால், மீடியம், லார்ஜ் மற்றும் எக்ஸ்-லார்ஜ் என பன்முக அளவுகளில் ஹெல்மெட்டுகள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. எனவே, ஹெல்மெட் வாங்க செல்லும் முன் சட்டைக்கு அளவு எடுத்துக் கொண்டு போவதை போல் அதற்கும் அளவை எடுத்துச் செல்ல வேண்டும். இதன் வாயிலாக உங்களுக்கான தகுந்த ஹெல்மெட்டைப் பெற்றுக் கொள்ள முடியும்.

ஹெல்மெட் வாங்க கட்டாயம் அளவு எடுத்து போக வேண்டும் என்று இல்லை. கடைக்கு சென்ற பின்னர் ஹெல்மெட்டை அணிந்து தலையை ஆட்டி பார்க்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது ஹெல்மெட் மட்டும் தனியாக, குறிப்பாக, மிக லூசாக ஆடினால் அது உங்கள் தலைக்கு ஏற்ற ஹெல்மெட் அல்ல. அதுவே தளர்வுகள் இன்றி அவை இருக்கும் என்றால் அதுதான் உங்களின் தலைக்கு ஏற்ற ஹெல்மெட் ஆகும். விபத்து போன்ற அசம்பாவிதங்களின்போது தக்க பாதுகாப்பு கிடைக்க உதவியாக இருக்கும்.

விஷர்:

ஹெல்மெட்டை வாங்க செல்லும்போது அந்த ஹெல்மெட் உறுதியாக இருக்கின்றதா, அளவு பொருத்தமானதா இருக்கிறதா என இவைகளை மட்டும் பார்த்தால் போதாது. அதில் இடம் பெற்றிருக்கும் விசர்களையும் ஆராய வேண்டும். குறிப்பாக, மழை மற்றும் பனி காலத்தின்போது பயன்படுத்தக் கூடியதாக அது இருத்தல் வேண்டும். மேலும், ஆன்டி கிளார் அம்சம் கொண்டதாக அது இருப்பது அவசியம். இந்த அம்சங்கள் அனைத்தும் இருக்கும் எனில் இரவு மற்றும் மழைக் காலங்களில் தடையில்லா பயணத்தை நம்மால் மேற்கொள்ள முடியும்.

குஷன்:

சில ஹெல்மெட்டுகளில் வழங்கப்படும் குஷன்கள் அதிக எரிச்சலூட்டுவதாக அமைந்துவிடுகின்றன. அதை சரியாக சுத்தம்கூட செய்ய முடியாது. ஆகையால், நாம் வாங்க செல்லும் ஹெல்மெட்டுகளில் குஷன்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து வாங்க வேண்டும். அது கழட்டி வாஷ் செய்யும் வசதிக் கொண்டதாக இருந்தால் கூடுதல் சிறப்பு. விரைவில் அழுக்காகக் கூடியதாக குஷன்கள் இருக்கின்றன. அவற்றை தொடர்ச்சியாக அப்படியே பயன்படுத்தும்போது முடி உதிர்தல் போன்ற பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் இதனை தவிர்க்க வாஷபிள் குஷன்கள் கொண்ட ஹெல்மெட்டுகள் வாங்குவதே சிறந்தது.

எடை குறைவானதாக இருத்தல் வேண்டும்:

பார்க்க அழகா இருக்கு, விலை குறைவா இருக்கின்றதுக்காக எல்லாம் ஹெல்மெட் வாங்கிட கூடாது. நாம் வாங்கும் ஹெல்மெட் அதிக பாதுகாப்பானதா, அதிகம் நேரம் பயன்படுத்தும் வகையில் இலகுவான எடைக் கொண்டதாக இருக்கா என்பதை பார்த்து வாங்க வேண்டும். இத்துடன், அது அதிக உறுதியானதா என்பதையும் பார்க்க வேண்டும். ஒரு சிலர் "வெயிட்டா இருக்கு, அப்படினா அதில் பாதுகாப்பு அதிகம்" என நினைத்துக் கொள்கின்றனர். அதுதான் கிடையாது. மிக மிக குறைவான எடைக் கொண்ட ஹெல்மெட்டுகளிலும் அதிக பாதகாப்பானவை இருக்கின்றன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Things to consider before buy helmet
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X