வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டுத் தொகை 50% உயருகிறது
மோட்டார் வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டு பிரீமியம் தொகை 50% உயர உள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.
கார், பைக், வர்த்தக மோட்டார் வாகனங்களுக்கான காப்பீட்டு பிரீமியத்தை வரும் ஏப்ரல் 1 முதல் 50 சதவீதம் அதிகரிக்க இந்திய காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐ.ஆர்.டி.ஏ.ஐ.) பரிந்துரைத்துள்ளது.

பொதுவாக, மோட்டார் வாகன இன்ஸ்யூரன்ஸ் பாலிசிகள் ஓர் ஆண்டு செல்லத்தக்க கால அளவை கொண்டிருக்கும். இதனை ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டியது அவசியம்.

வாகனங்களால் எதிரில் வருபவர்க்கும், பொருட்களுக்கும் இழப்பீடு கோரும் காப்பீட்டு திட்டத்திற்கு ‘மூன்றாம் நபர் காப்பீடு' எனப்படுகிறது. சாலையில் இயக்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும் காப்பீடு அவசியமானது.

இந்திய காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம்,
ஒவ்வொரு ஆண்டும் வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டுத் தொகையை திருத்தி அமைத்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் காப்பீட்டு தொகை திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

எனினும், 1000சிசிக்கு குறைவான கார்களான மாருதி ஆல்டோ, டாடா நானோ மறும் டேட்சன் ரெடிகோ ஆகிய கார்கள் மட்டும் இந்த பிரிமியம் உயர்விலிருந்து விலக்கு பெற்றுள்ளன.

இதேபோல 75சிசி க்கு குறைவான இருசக்கர வாகனங்களும் பிரிமியம் உயர்விலிருந்து விலக்கு பெற்றுள்ளன. ஆயினும் ஸ்போர்ட்ஸ் மற்றும் சூப்பர் பைக்குகளுக்கு 50% பிரிமியம் தொகையை உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல் பிரிமியம் தொகையில் பழங்கால கார்கள் 25% சலுகை பெற்றுள்ளது. பழங்கால கார் என்பதனை பழங்கால மற்றும் கிளாசிக் கார் கிளாப் ஆஃப் இந்தியா என்ற அமைப்பு அங்கீகரிக்கிறது.

இதுமட்டுமல்லாமல் பிரிமியம் தொகையில் பழங்கால கார்கள் 25% சலுகை பெற்றுள்ளது. பழங்கால கார் என்பதனை பழங்கால மற்றும் கிளாசிக் கார் கிளாப் ஆஃப் இந்தியா என்ற அமைப்பு அங்கீகரிக்கிறது.

மேலும், மோட்டார் வாகன காப்பீட்டு பிரீமியத்தை 50 சதவீதம் அதிகரிக்கும் திட்டம் குறித்த வாடிக்கையாளர்கள் கருத்துகள் மார்ச் 18-ஆம் தேதி வரையில் வரவேற்கப்படுவதாக ஐ.ஆர்.டி.ஏ.ஐ. தெரிவித்துள்ளது.
புதிய 2017 செவர்லட் கமாரோ எசட்எல்-1 காரின் படங்கள்:

Click it and Unblock the Notifications