வாகன ஓட்டிகளின் மனதை குளிர வைத்த அந்த அறிவிப்பு: என்னனு தெரிஞ்சா நீங்களும் சந்தோஷப்படுவீங்க!

வாகன ஓட்டிகளின் மனதை குளிர வைக்கும் வகையில் ஐஆர்டிஏ சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

 வாகன ஓட்டிகளின் மனதை குளிர வைத்த அந்த அறிவிப்பு: என்னனு தெரிஞ்சா நீங்களும் சந்தோஷப்படுவீங்க!

2020ம் ஆண்டிற்கான மோட்டார்சைக்கிள், கார் மற்றும் சரக்கு வாகனங்களின் மூன்றாம் நபர் காப்பீட்டு தொகை உயர்வை காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் ரத்து செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த, செய்தியை டைம்ஸ் ஆப் இந்தியா இணையதளம் அண்மையில் வெளியிட்டது.

 வாகன ஓட்டிகளின் மனதை குளிர வைத்த அந்த அறிவிப்பு: என்னனு தெரிஞ்சா நீங்களும் சந்தோஷப்படுவீங்க!

ஒவ்வொரு வருடமும் மூன்றாம் நபருக்கான காப்பீட்டு தொகையை 10 முதல் 40 சதவீதம் வரை உயர்த்தி ஏப்ரல் மாதத்தில் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் அறிவிக்கும். ஆனால், இந்த முறை இந்த உயர்வு இருக்காது என கூறப்படுகிறது. கடந்த வருடம் மோட்டார்சைக்கிள், கார் மற்றும் டாக்ஸிகளுக்கு 10 முதல் 20 சதவீதம் வரை காப்பீட்டு தொகை உயர்வு பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

 வாகன ஓட்டிகளின் மனதை குளிர வைத்த அந்த அறிவிப்பு: என்னனு தெரிஞ்சா நீங்களும் சந்தோஷப்படுவீங்க!

இந்நிலையில், இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம், நடப்பாண்டில் வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டு தொகையில் எந்த மாற்றமும் இல்லை எனவும், பழைய காப்பீட்டு தொகையே அடுத்த 2020ம் ஆண்டின் நிதியாண்டு வரை நீடிக்கும் என அறிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 வாகன ஓட்டிகளின் மனதை குளிர வைத்த அந்த அறிவிப்பு: என்னனு தெரிஞ்சா நீங்களும் சந்தோஷப்படுவீங்க!

இந்த ஆணையம், மூன்றாம் நபர் காப்பீட்டிற்கான தொகை மற்றும் விபத்தின்போதோ அல்லது வாகனத்தின் சேதாரத்தின்போதோ எவ்வளவு வழங்கப்படும் என்பதை நிர்ணயிக்கிறது. கடந்த வருடத்தின் காப்பீட்டு தொகை அதிகரிப்பை மனத்தில் கொண்டு, இந்த வருடம் 20 அல்லது 30 சதவீதம் வரை மூன்றாம் காப்பீட்டு தொகை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதனைத் தகர்த்தெரியும் விதமாக, வாகன ஓட்டிகளின் மனதைக் குளிர்விக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 வாகன ஓட்டிகளின் மனதை குளிர வைத்த அந்த அறிவிப்பு: என்னனு தெரிஞ்சா நீங்களும் சந்தோஷப்படுவீங்க!

இதுகுறித்து ஐஆர்டிஏ கூறியிருப்பதாவது, "முறையான அறிவிப்பு வெளியாகும் வரை, கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் தேதி அறிவிக்கப்பட்ட காப்பீட்டு தொகையை மட்டும் வாகன ஓட்டிகள் செலுத்தினால் போதுமானது. இதுகுறித்த அடுத்த அறிவிப்பு வரும்வரை பழைய கட்டணமுறையே இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.

 வாகன ஓட்டிகளின் மனதை குளிர வைத்த அந்த அறிவிப்பு: என்னனு தெரிஞ்சா நீங்களும் சந்தோஷப்படுவீங்க!

75சிசி திறனைக் கொண்டு இயங்கும் சிறிய மொபட், ஸ்கூட்டர் மற்றும் பைக்குகள் மூன்றாம் நபர் காப்பீட்டு தொகையாக 427 ரூபாய் செலுத்தி வருகிறது. இந்த தொகையே ஐஆர்டிஏவின் அடுத்த அறிவிப்பு வரை வசூலிக்கப்படும் என கூறப்படுகிறது. இதேபோன்று, 75 முதல் 150 சிசி கொண்ட ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார்சைக்கிள்களுக்கு பிரீமியம் தொகையாக ரூபாய் 720 வசூலிக்கப்படும். தொடர்ந்து, அதிக சக்தி உடைய பைக்குகளுக்கு 985 ரூபாய் வசூலிக்கப்படும்.

 வாகன ஓட்டிகளின் மனதை குளிர வைத்த அந்த அறிவிப்பு: என்னனு தெரிஞ்சா நீங்களும் சந்தோஷப்படுவீங்க!

சிறிய ரக செடான் கார்களுக்கு, அதாவது 1,000 முதல் 1,500சிசி வரைக் கொண்டு இயங்கும் கார்களுக்கு ஆயிரத்து 850 ரூபாய் வசூலிக்கப்படும். அதேபோல், 1,500 சிசி-க்கும் மேலான திறனைக் கொண்ட எஸ்யூவி கார்களுக்கு 2 ஆயிரம் 863 ரூபாய் முதல் 7 ஆயிரத்து 890 ரூபாய் வரை வசூலிக்கப்படும். ஆட்டோ ரிக்ஷாவிற்கு 2,595 ரூபாயும், இ-ரிக்ஷாவிற்கு 1,685 ரூபாயும் வசூலிக்கப்படும். மேலும், வர்த்தகம் சார்ந்து இயங்கும் டாக்ஸி கார்களுக்கு 5 ஆயிரத்து 437 ரூபாயும், என்ட்ரி லெவல் செடான்கார்களுக்கு 7 ஆயிரத்து 147 ரூபாயும் வருடத்திற்கு வசூலிக்கப்படும்.

 வாகன ஓட்டிகளின் மனதை குளிர வைத்த அந்த அறிவிப்பு: என்னனு தெரிஞ்சா நீங்களும் சந்தோஷப்படுவீங்க!

மோட்டார் வாகனங்கள் சட்டம், மூன்றாம் நபர் காப்பீட்டு திட்டத்தை சமீபத்தில் கட்டாயமாக்கியது. இது வாகன திருட்டு மற்றும் சேதம் உள்ளிட்டவற்றை கவர் செய்ய உதவும். தற்போது புதிதாக வாங்கப்படும் வாகனங்களுக்கு ஒரு வருடத்திற்கான மேலான காப்பீட்டு திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதிதாக வாங்கப்படும் கார்களுக்கு ஒரு வருடம் முதல் மூன்று ஆண்டுகளும், இருசக்கர வாகனங்களுக்கு ஐந்து வருடமும் காப்பீடு பெறவேண்டும்.

 வாகன ஓட்டிகளின் மனதை குளிர வைத்த அந்த அறிவிப்பு: என்னனு தெரிஞ்சா நீங்களும் சந்தோஷப்படுவீங்க!

முன்னதாக புதிய வாகனங்கள் வாங்கும்போது ஓராண்டுக்கு காப்பீடு செய்வது கட்டாயமாக இருந்தது. இதனை வாகனத்தின் உரிமையாளர்கள் ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். இதேபோன்று, காப்பீடு செய்யாத வாகனங்களை இயக்கக்கூடாது என்ற சட்டம் கடந்த 1988ம் ஆண்டு முதல் மோட்டார் வாகன சட்டத்தில் இடம்பெற்று வருகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, March 29, 2019, 15:44 [IST]
English summary
Third Party Insurance Won't Be Hike In This Year. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+