திடீரென வாகன இன்சூரன்ஸ் பிரீமியத்தை உயர்த்திய மத்திய அரசு... ஜூன் 1ம் தேதி முதல் இவ்வளவு விலை ஏறுகிறதா?

மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் பிரீமியம் தொகையை அதிகரித்துள்ளது. ஜூன் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள இந்த புதிய விலைகள் குறித்த விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

திடீரென வாகன இன்சூரன்ஸ் பிரீமியத்தை உயர்த்திய மத்திய அரசு . . . ஜூன் 1ம் தேதி முதல் இவ்வளவு விலை ஏறுகிறதா ?

இந்தியாவில் எல்லா வாகனங்களுக்கும் இன்சூரன்ஸ் என்பது கட்டாயம். சாலையில் வாகனங்களில் செல்லும் போது அது விபத்தில் சிக்கும் ஆபத்து இருப்பதால் அந்த வாகனம் விபத்தில் சிக்கும்போது ஆகும் சேதாரங்களை ஈடு செய்யவே இந்த இன்சூரன்ஸ் என்பது கட்டாயமாக உள்ளது. ஒவ்வொரு வாகனமும் கட்டாயம் இன்சூரன்ஸ் வைத்திருக்க வேண்டும் என்பது இந்திய மோட்டார் வாகன சட்டம் சொல்லும் விஷயம்.

திடீரென வாகன இன்சூரன்ஸ் பிரீமியத்தை உயர்த்திய மத்திய அரசு . . . ஜூன் 1ம் தேதி முதல் இவ்வளவு விலை ஏறுகிறதா ?

இந்தியாவில் இன்சூரன்ஸை பொருத்தவரை 5 வகைகளாக உள்ளது. முதலில் 3ம் நபருக்கான இன்சூரன்ஸ் இதில் வாகனம் விபத்தை ஏற்படுத்தினால் அதனால் மற்றவர்களுக்கு ஏற்படும் சேதாரத்தை இந்த இன்சூரன்ஸ் ஈடுசெய்யும், இதே போல ஓன் டேமேஜ்கவர், பர்சனல் ஆக்ஸிடென்ட் கவர், ஜீரோ டிப்ரிசியேஷன் கவர், காம்பரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸ் என 5 விதமான இன்சூரன்ஸ் இருக்கிறது.

திடீரென வாகன இன்சூரன்ஸ் பிரீமியத்தை உயர்த்திய மத்திய அரசு . . . ஜூன் 1ம் தேதி முதல் இவ்வளவு விலை ஏறுகிறதா ?

இதில் குறைந்த பட்சம் மூன்றாம் நபருக்கான இன்சூரன்ஸாவது காருக்கு இருக்க வேண்டும் என்பது தான் சட்டம் சொல்கிறது. மற்ற இன்சூரன்ஸ்கள் எல்லாம் வாகன ஓட்டிகளின் விருப்பத்திற்கே வேண்டுமானால் தேர்வு செய்து கொள்ளலாம். மற்ற இன்சூரன்ஸ் எடுக்கும் போதும் மூன்றாம் நபருக்கான இன்சூரன்ஸ் சேர்ந்தே வரும். இந்நிலையில் மத்திய அரசு ஜூன் மாதம் 1ம் தேதி முதல் இன்சூரன்ஸிற்கான பிரீமியத்தை உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது.

திடீரென வாகன இன்சூரன்ஸ் பிரீமியத்தை உயர்த்திய மத்திய அரசு . . . ஜூன் 1ம் தேதி முதல் இவ்வளவு விலை ஏறுகிறதா ?

இது குறித்து மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி அனைத்து வாகனங்களுக்கான மூன்றாம் நபருக்கான இன்சூரன்ஸ் பிரீமியம் உயர்த்தப்பட்டுள்ளது இது கடந்த 2019-20ம் நிதியாண்டில் உயர்த்தப்பட்டது. பின்னர் கொரோனா காரணமாக உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.

திடீரென வாகன இன்சூரன்ஸ் பிரீமியத்தை உயர்த்திய மத்திய அரசு . . . ஜூன் 1ம் தேதி முதல் இவ்வளவு விலை ஏறுகிறதா ?

உயர்த்தப்பட்ட இன்சூரன்ஸ் குறித்த விபரங்கள் பின்வருமாறு:

தனியார் கார்களுக்கான இன்சூரன்ஸில் 1000சிசிக்கும் குறைவான இன்ஜின் கொண்ட கார்களுக்கு ரூ 2,072 ஆக இருந்த பிரீமியம் ரூ 2,094 ஆக உயர்ந்துள்ளது. 1000-1500 சிசி இன்ஜின் கொண்ட கார்களுக்கு ரூ3,221 ஆக இருந்த இன்சூரன்ஸ் ரூ3,416 ஆக உயர்ந்துள்ளது. 1500 சிசிக்கு அதிகமான கார்களுக்கான இன்சூரன்ஸ் பிரீமியம் ரூ 7890 ஆக இருந்தது. ரூ7897 ஆக உயர்ந்துள்ளது.

திடீரென வாகன இன்சூரன்ஸ் பிரீமியத்தை உயர்த்திய மத்திய அரசு . . . ஜூன் 1ம் தேதி முதல் இவ்வளவு விலை ஏறுகிறதா ?
Cars Insurance
Engine New Price Old Price 3 Year Single Premium
Under 1000cc ₹2,094 ₹2,072 ₹6,521
1000cc to 1500cc ₹3,416 ₹3,221 ₹10,640
Above 1500cc ₹7,897 ₹7,890 ₹24,596
Two-Wheelers Insurance
Engine Price 5 Year Single Premium
Upto 75cc - ₹2,901
75cc to 150cc - 3,851
150cc to 350cc ₹1,366 ₹7,365
Over 350cc ₹2,804 ₹15,117
திடீரென வாகன இன்சூரன்ஸ் பிரீமியத்தை உயர்த்திய மத்திய அரசு . . . ஜூன் 1ம் தேதி முதல் இவ்வளவு விலை ஏறுகிறதா ?

இருசக்கர வாகனங்களைப் பொருத்தவரை 150-300 சிசி வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் புதி விலைப்படி ரூ1366 ஆகவும், 350 சிசிக்கு அதிகமான வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் ரூ 2,804 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

திடீரென வாகன இன்சூரன்ஸ் பிரீமியத்தை உயர்த்திய மத்திய அரசு . . . ஜூன் 1ம் தேதி முதல் இவ்வளவு விலை ஏறுகிறதா ?

புதிய கார்களை வாங்கும் போது 3 ஆண்டு இன்சூரன்ஸ் கட்டாயம் அதைப்பொருத்தவரை 1000 சிசிக்கும் குறைவான கார்களுக்கு புதிய விலைப்படி ரூ6521 ஆகவும், 1000-1500 சிசி இன்ஜின் கொண்ட கார்களுக்கு ரூ10,640 ஆகவும், 1500 சிசிக்கும் அதிகமான கார்களுக்கு ரூ24,596 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

திடீரென வாகன இன்சூரன்ஸ் பிரீமியத்தை உயர்த்திய மத்திய அரசு . . . ஜூன் 1ம் தேதி முதல் இவ்வளவு விலை ஏறுகிறதா ?

அதே போல இருசக்கர வாகனங்களைப் புதிதாக வாங்கும்போது 5 ஆண்டிற்கான இன்சூரன்ஸ் கட்டாயம். அதை பொருத்தவரை 75 சிசிக்கும் குறைவான வாகனங்களுக்கு ரூ2901 ஆகவும், 75-150 சிசி வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் ரூ3851 ஆகவும், 150-350 சிசி வாகனங்களுக்கு ரூ7,365 மற்றும் 350 சிசிக்கு அதிகமான வாகனங்களுக்கு ரூ15,117 எனவும் புதிய விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

திடீரென வாகன இன்சூரன்ஸ் பிரீமியத்தை உயர்த்திய மத்திய அரசு . . . ஜூன் 1ம் தேதி முதல் இவ்வளவு விலை ஏறுகிறதா ?

எலெக்ட்ரிக் கார்களை பொருத்தவரை புதிய கார்களுக்கு மூன்றாண்டு பிரீமியம் கட்டாயம், அதன் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. 30KW வரையிலான வாகனங்களுக்கு ரூ 5,543 எனவும், 30-65KW கொண்ட வாகனங்களுக்கு ரூ9,044, 65KWக்கு மேல் உள்ள வாகனங்களுக்கு ரூ20,907 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

திடீரென வாகன இன்சூரன்ஸ் பிரீமியத்தை உயர்த்திய மத்திய அரசு . . . ஜூன் 1ம் தேதி முதல் இவ்வளவு விலை ஏறுகிறதா ?
EV Cars Insurance
KW 3 Years Premium
Upto 30KW ₹5,543
30KW to 65KW ₹9,044
Above 65KW ₹20,907
EV Two-Wheelers Insurance
KW 5 Year Premium
Upto 3KW ₹2,466
3KW to 7KW ₹3,273
7KW to 16KW ₹6,260
Over 16KW ₹12,849
திடீரென வாகன இன்சூரன்ஸ் பிரீமியத்தை உயர்த்திய மத்திய அரசு . . . ஜூன் 1ம் தேதி முதல் இவ்வளவு விலை ஏறுகிறதா ?

எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களைப் பொருத்தவரை அதற்கும் புதிய வாகனங்களுக்கு 5 ஆண்டு இன்சூரன்ஸ் கட்டாயம். 3KW வரை உள்ள வாகனங்களுக்கு ரூ2,466, 3-7KW வரையிலான வாகனங்களுக்கு ரூ3,273 7-16KW வரையிலான வாகனங்களுக்கு ரூ6,260, 16KWக்கும் அதிகமான அதிக திறன் கொண்ட வாகனங்களுக்கு ரூ12,849 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

திடீரென வாகன இன்சூரன்ஸ் பிரீமியத்தை உயர்த்திய மத்திய அரசு . . . ஜூன் 1ம் தேதி முதல் இவ்வளவு விலை ஏறுகிறதா ?

இந்த புதிய இன்சூரன்ஸ் பிரீமியம் வரும் ஜூன் மாதம் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. அதற்கு முன்னர் எடுக்கப்படும் இன்சூரன்ஸ்களுக்கு பழைய நடைமுறைகளே அமலில் இருக்கும். இந்த விலை எல்லாம் மூன்றாம் நபர் இன்சூரன்ஸின் விலைகளே இதைப் பொருத்து மற்ற இன்சூரன்ஸ் திட்டங்களின் விலையும் மாறுபடும். உங்கள் வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் முடிந்துவிட்டதா அல்லது ஒரிரு நாளில் முடியப்போகிறதா? உடனடியாக விலையேறும் முன் இன்சூரன்ஸை எடுத்துக்கொள்ளுங்கள்

Article Published On: Thursday, May 26, 2022, 13:17 [IST]
English summary
Third party vehicle insurance rate revised by central govt know new prices from june 1
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+