Just In
- 1 hr ago
பிரம்மிப்பா இருக்கு... இந்த நிஸான் டீலர்ஷிப் ஒரே நாளில் இத்தனை மேக்னைட் கார்களை டெலிவரி செய்துள்ளதா?
- 3 hrs ago
சொகுசு செடான் காருக்கு இந்த விலை ஓகே... ஓட்டுவதற்கு எப்படி உள்ளது புதிய ஆடி ஏ4? ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!
- 4 hrs ago
நிஜமாகும் சூர்யாவின் சூரரைப் போற்று கதை!! பயன்பாட்டிற்கு வந்தது இந்தியாவின் முதல் ஏர் டாக்ஸி சர்வீஸ்!
- 5 hrs ago
பெங்களூர் கொண்டு வரப்பட்டார் சி.எஸ்.சந்தோஷ்... உடல்நிலையில் லேசான முன்னேற்றம்!
Don't Miss!
- News
தமிழகத்தில் இன்று 610 பேருக்கு கொரோனா பாதிப்பு - 775 பேர் குணமடைந்தனர்
- Movies
மக்கள் செல்வனின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. கொண்டாடி வரும் ரசிகர்கள்!
- Sports
அவர்கிட்டயே சிக்குறீங்களே.. இது தேவையா? ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா!
- Finance
ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..!
- Lifestyle
பெண்களை கலவியில் திருப்திப்படுத்துவதற்கு இத மட்டும் கரெக்ட்டா பண்ணுனா போதுமாம்... சரியா பண்ணுங்க...!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இப்பவும் எந்த பிரச்னையும் இல்ல! இந்த இன்னோவா எவ்வளவு கிமீ ஓடியிருக்குனு தெரிஞ்சா மயக்கம் போட்றுவீங்க
தமிழகத்தை சேர்ந்த ஒருவரின் டொயோட்டா இன்னோவா கார், பிரம்மிக்க வைக்கும் வகையில் பல லட்சம் கிலோ மீட்டர்கள் ஓடியுள்ளது.

டொயோட்டா நிறுவனத்தின் கார்கள் நீண்ட வருடங்களுக்கு உழைக்க கூடியவை. அத்துடன் நம்பகத்தன்மை மிகுந்தவை. இதன் காரணமாகவே விலை கொஞ்சம் அதிகம் என்றாலும் கூட, டொயோட்டா கார்களை அனைவரும் நம்பி வாங்குகின்றனர். இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் டொயோட்டா நிறுவனத்தின் கார்கள் மிகவும் புகழ்பெற்று விளங்குகின்றன.

இந்தியாவை பொறுத்தவரை டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா வாடிக்கையாளர்கள் அதிகம் நேசிக்க கூடிய கார்களில் ஒன்றாக உள்ளது. டொயோட்டா இன்னோவா கார்களுக்கு இந்தியாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இந்திய சாலைகளில் எந்தவித பிரச்னையும் இல்லாமல் பல லட்சம் கிலோ மீட்டர்களை கடந்தும் சிறப்பாக ஓடி வரும் டொயோட்டா இன்னோவா கார்கள் ஏராளமாக இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கூட அப்படிப்பட்ட செய்திகளை கடந்த காலங்களில் அதிகமாக பிரசுரித்துள்ளது. டொயோட்டா இன்னோவா கார் ஒன்று 6 லட்சம் கிலோ மீட்டர்களை கடந்தும் வெற்றிகரமாக ஓடி வரும் செய்தி உங்களுக்கு நினைவிருக்கலாம். மேலும் டொயோட்டா குவாலிஸ் கார் ஒன்று 8 லட்சம் கிலோ மீட்டர்களை கடந்தும் சிறப்பாக ஓடி வரும் செய்தியையும் வழங்கியிருந்தோம்.

இந்த வரிசையில் தற்போது டொயோட்டா இன்னோவா கார் ஒன்று 10 லட்சம் கிலோ மீட்டர்களை கடந்தும் சிறப்பாக ஓடி கொண்டிருக்கும் தகவல் நமக்கு கிடைத்துள்ளது. டொயோட்டா நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்பான ஆனைமலைஸ் டொயோட்டா, இன்னோவா கார் ஒன்றின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

இதில், டொயோட்டா இன்னோவா கார் ஒன்று 10 லட்சம் கிலோ மீட்டர்களை கடந்து இன்னமும் எவ்விதமான பிரச்னையும் இல்லாமல் ஓடி கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 லட்சம் கிலோ மீட்டர்களை கடந்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கும் முதல் டொயோட்டா இன்னோவா அனேகமாக இதுவாகதான் இருக்கும்.

இந்த கார் ப்ரைவேட் நம்பர் பிளேட்டை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக பல லட்சம் கிலோ மீட்டர்களை கடந்த டொயோட்டா இன்னோவா கார்கள் கமர்ஷியல் நம்பர் பிளேட்களைதான் பெற்றிருக்கும். அந்த கார்கள் டாக்ஸிகளாக பயன்படுத்தப்படுவதால், எளிதாகவும், விரைவாகவும் பல லட்சம் கிலோ மீட்டர்களை கடந்து விடும்.

இந்த காரின் உரிமையாளரை கண்டறிய செய்த முயற்சிகளில் இது வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான கார் என்பதும், கடந்த 2007ம் ஆண்டு ஜூலை மாதம் பதிவு செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இது 13 ஆண்டுகள் ஆன கார் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 1 லட்சம் கிலோ மீட்டர்களை இந்த கார் கடந்துள்ளது. இது சாதாரண விஷயம் கிடையாது.

டாக்ஸியாக பயன்படுத்தப்படவில்லை என்றாலும் இந்த கார் எப்படி இவ்வளவு கிலோ மீட்டர்களை கடந்தது? என்பதற்கான காரணம் எதுவும் தெரிய வரவில்லை. இருந்தாலும் இன்னமும் கூட அதன் உரிமையாளர் இந்த காரை பயன்படுத்தி கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் இன்னோவா மற்றும் பார்ச்சூனர் ஆகிய கார்களில் பயன்படுத்தப்படும் டி-4டி (D-4D) இன்ஜின் மிகவும் புகழ்பெற்றது.

அதிகப்படியான நம்பகத்தன்மை காரணமாகவே இந்த இன்ஜின் மிகவும் புகழ்பெற்றதாக உள்ளது. 10 லட்சம் கிலோ மீட்டர்களுக்கும் மேல் ஓடிய டொயோட்டா இன்னோவா காரில், அதே 2.5 லிட்டர் டி-4டி இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது. சரியான நேரத்தில் சர்வீஸ் செய்தால், இந்த இன்ஜின் பல லட்சம் கிலோ மீட்டர்களுக்கும் மேல் நீடித்து உழைக்கும்.

கார்களை காலம் தவறாமல் சரியான நேரத்தில் சர்வீஸ் செய்வதன் மூலமாக, அவை இப்படி அதிகப்படியான கிலோ மீட்டர்களுக்கு ஓடுவதை உறுதி செய்ய முடியும். உங்களுடைய அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள் யாருடைய கார்களாவது இவ்வாறு பல லட்சம் கிலோ மீட்டர்களுக்கு ஓடியிருந்தால், கமெண்ட் பாக்ஸில் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.