ஃபோல்டிங் ஹெல்மெட்... பையில் மடக்கி வைத்து எடுத்துச் செல்லலாம்!

Posted By:

இப்போது ஹெல்மெட்டை பூட்டிச் செல்வதற்கு அஞ்ச வேண்டிய நிலை உள்ளது. அந்தளவுக்கு ஹெல்மெட்டிற்கான டிமான்ட் இருக்கிறது.

ஆனால், கையோடு எடுத்துச் செல்வதற்கும், பாதுகாப்பாக கையாள்வதிலும் பலருக்கு பிரச்னையும், கூடுதல் சுமையாகவும் இருக்கிறது. இந்த குறையை போக்கும் விதத்தில், பையில் எளிதாக மடக்கி வைத்து எடுத்துச் செல்லக்கூடிய ஒரு புதிய ஹெல்மெட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

ஸ்பெயின் தயாரிப்பு

ஸ்பெயின் தயாரிப்பு

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கிளாஸ்கா என்ற நிறுவனம்தான் இந்த ஹெல்மெட்டை வடிவமைத்து அறிமுகம் செய்துள்ளது. ஃபியூகா என்ற பெயரில் இந்த ஹெல்மெட் குறிப்பிடப்படுகிறது.

சுருங்கும் அளவு

சுருங்கும் அளவு

5 இன்ச் உயரம் கொண்ட இந்த ஹெல்மெட்டை மேல்புறத்தில் சிறிது அழுத்தினால், 2.36 இன்ச் அளவுக்கு சுருங்கி விடுகிறது.

அளவு

அளவு

சிறிய, நடுத்தர மற்றும் பெரிய ஆகிய மூன்றுவிதமான அளவுகளில் கிடைக்கும்.

எளிது...

எளிது...

முதுகில் மாட்டிச் செல்லும் பையில் இந்த ஹெல்மெட்டை மிக எளிதாக வைத்து எடுத்துச் செல்லலாம்.

 பாதுகாப்பு

பாதுகாப்பு

ஹெல்மெட் அடுக்குகளாக சுருங்குவதால், பாதுகாப்பு பிரச்னை எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பிற ஹெல்மெட்டுகளை போன்றே, அணிந்து செல்லும்போது சிறந்த பாதுகாப்பை வழங்கும் என்று தெரிவித்துள்ளது. அதிர்வுகளை தாங்குவதற்கான அமைப்பும் சிறப்பாக கொடுக்கப்பட்டிருக்கிறது.

 விலை

விலை

ஒரு ஃபியூகா ஹெல்மெட் 100 டாலர் விலையில் விற்பனைக்கு கிடைக்கும் என்று கிளாஸ்கா தெரிவித்துள்ளது.

 டெலிவிரி

டெலிவிரி

வரும் அக்டோபர் மாதம் முதல் ஹெல்மெட் டெலிவிரி துவங்கப்பட உள்ளதாக கிளாஸ்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Closca Fuga transforms a safety element into a fashion accessory. This helmet is elegant, smart and safety certified. Able to become flat and folding itself more than 50% so you can put it in your bag while not pedaling.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark