திரைப்பட இயக்குநரிடம் இத்தன சொகுசு கார்களா! ஆடம்பர கார்களை வைத்திருப்பதில் தயாரிப்பாளர்களையே தோற்கடிச்சிட்டாரு
பாலிவுட் திரை உலகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய திரையுலகைச் சேர்ந்தவர்களும் மிகப் பெரிய சொகுசு கார் ஃபேன்களாக இருக்கின்றனர். உதாரணமாக, மம்முட்டி மற்றும் அவரது மகன் துல்கர் சல்மான், ஃபஹத் ஃபாசில் ஆகியோரைக் கூறலாம். இவர்களே அடிக்கடி சொகுசு கார்களை வாங்கும் தென்னிந்திய நடிகர்களாக அறியப்படுகின்றனர்.
இவர்களைப் போலவே சினிமாத் துறையைச் சேர்ந்த இன்னும் பலர் பெரும் தொழிலதிபர்களுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு சூப்பரான கார்களை பயன்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் முன்னணி திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் சொகுசு கார்களை ஓர் பாலிவுட் திரைப்பட இயக்குநர் அரிய மற்றும் ஆடம்பர கார்களை அதிகளவில் பயன்படுத்திக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரோஹித் ஷெட்டி, இவரே முன்னணி தயாரிப்பாளர்களுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு சொகுசு கார்களைப் பயன்படுத்திக் கொண்டிருப்பவர் ஆவார். இவரிடத்தில் என்னென்ன சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன? அவற்றின் சிறப்புகள் என்ன? மற்றும் விலை உள்ளிட்டவ விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
ஃபோர்டு மஸ்டாங் (Ford Mustang): இயக்குநர் ரோஹித் ஷெட்டி பயன்படுத்திக் கொண்டிருக்கும் சூப்பரான கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். இந்தியாவில் மிகவும் குறைவான நபர்களே இந்த காரை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்களில் ரோஹித் ஷெட்டியும் ஒருவர் ஆவார். இந்த காரை சில மாற்றங்களுக்கு உட்படுத்தி அவர் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார். அதாவது, இயக்குநர் அவருடைய டேஸ்டிற்கு ஏற்ப மாடிஃபைச் செய்து அந்த காரை பயன்படுத்தி வருகின்றார்.

அவர் செய்த மாற்றத்தால் அந்த கார் மேலும் கட்டுமஸ்தான தோற்றம் கொண்டதாகக் கட்சியளிக்கின்றது. குறிப்பாக, அதிக ஸ்போர்ட்டியான காராக அது மாறி இருக்கின்றது. பெரிய ஹூட்ஸ்கூப் மற்றும் பல சிறப்பு கருவிகள் இந்த காரில் கூடுதலாக சேர்க்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, ஆஃப்டர் மார்க்கெட் எக்சாஸ்ட் சிஸ்டத்தையும் இந்த காரில் அவர் சேர்த்திருக்கின்றார். இந்த ஒற்றை காரின் மதிப்பு மட்டுமே ரூ. 75 லட்சத்திற்கும் அதிகம் ஆகும்.
ரேஞ்ச் ரோவர் வோக் (Range Rover Vogue): ரோஹித் ஷெட்டியிடம் இருக்கும் கவர்ச்சியான கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். இந்திய தொழிலதிபர்கள் பலரின் பிரியமான கார் மாடலாக லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வோக் காட்சியளிக்கின்றது. தொழிலதிபர்களின் மனம் கவர்ந்த கார் மாடல் மட்டுமல்ல இது, பல திரை நட்சத்திரங்களின் பிரியமான கார் மாடலாகவும் இது காட்சியளிக்கின்றது. இதன் விலை ரூ. 1 கோடியை நெருங்கும்.

இந்த காரில் லேண்ட் ரோவர் நிறுவனம் 4.4 லிட்டர் வி8 டீசல் எஞ்சினையே பயன்படுத்தி இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 335 பிஎச்பி பவரையும், 740 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த காரிலும் லேசான அலங்கார வேலைகளை ரோஹித் ஷெட்டி செய்திருக்கின்றார். இந்த கார் முழுக்க நீலம் மற்றும் சிவப்பு நிற அக்செண்டுகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது.
மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி (Mercedes-Benz G63 AMG): இந்த கார் மாடலும் இந்திய திரை நட்சத்திரங்கள் பலரின் பிரியமான கார் மாடலாகக் காட்சியளிக்கின்றது. முகேஷ் அம்பானி முதல் இந்தி திரை உலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் இந்த சொகுசு எஸ்யூவி ரக காரை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலையே ரூ. 2.45 கோடி ஆகும். ஆன்-ரோடில் இதன் விலை எப்படியும் ரூ. 3 கோடியை நெறுங்கும்.

இத்தகைய அதிக விலைக் கொண்ட காரையே இயக்குநர் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார். இந்த காரில் 4.0 லிட்டர் பை-டர்போ வி8 பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 585 பிஎச்பி பவரையும், 850 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. வெள்ளை நிறத்தாலேயே இவர் வைத்திருக்கும் ஜி வேகன் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது.
லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus): உலகின் அதிக வேகத்தில் இயங்கும் திறன் கொண்ட எஸ்யூவி கார் மாடல்களில் உருஸ்-ம் ஒன்றாகும். இந்த கார் மாடலை ரோஹித் ஷெட்டி கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து பயன்படுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த கார் மாடல் மஞ்சள் நிறத்தால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும். இந்த காரையும் இந்தியாவில் தொழிலதிபர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலர் பயன்படுத்தி வருகின்றனர். இதன் விலை ரூ.4கோடிக்கும் அதிகம் ஆகும்.
மஸராட்டி கிரான் டூரிஸ்மோ ஸ்போர்ட் (Maserati GranTurismo Sport): ரோஹித் ஷெட்டி வைத்திருக்கும் மிக மிக கவர்ச்சியான கார் மாடல் என இதைக் கூறலாம். இது சாலையில் பயணிக்கும்போது நிச்சயம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும். இத்தகைய சிறப்புமிக்க மற்றும் அழகிய கார் மாடலே மஸராட்டி கிரான் டூரிஸ்மோ ஸ்போர்ட் ஆகும். இதன் விலை ரூ. 2 கோடிக்கும் அதிகம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இந்த இயக்குநரைப் போலவே இன்னும் பல இயக்குநர்கள் மிகப் பெரிய ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர். சொல்லப்போனால் முகேஷ் அம்பானி, அதானி உள்ளிட்டோருக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு பணக்கார வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக, கார்கள் விஷயத்தில் கோடிகளை அவர்கள் வாரி இறைத்துக் கொண்டிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications









