விவசாயிகளின் நலனிற்காக மாணவர்கள் காட்டிய பெருந்தன்மை... என்னவென்று தெரிந்தால் பெருமைப்படுவீர்கள்...

ஏழை விவசாயிகளின் நலனை காப்பதற்காக நமது மாணவர்கள் பெருந்தன்மை காட்டியுள்ளனர். அது என்னவென்று தெரிந்தால் நீங்கள் பெருமைப்படக்கூடும்.

ஏழை விவசாயிகளை காக்க களமிறங்கிய மாணவர்கள்... என்ன செய்தார்கள் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம்தான் என பெருமை பேசி கொண்டிருக்கிறோம். ஆனால் தற்போதைய நிலையில் நம் நாட்டு விவசாயிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி கொண்டிருக்கின்றனர். வாழ்க்கை நடத்துவதற்கு தேவையான வருமானம் விவசாயத்தின் மூலம் கிடைக்காததே இதற்கு காரணம்.

ஏழை விவசாயிகளை காக்க களமிறங்கிய மாணவர்கள்... என்ன செய்தார்கள் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

விவசாயிகள் சந்திக்கும் முக்கியமான பிரச்னைகளில் ஒன்று பூச்சி தாக்குதல். விவசாய பயிர்களை பூச்சிகள் தாக்குவதால், மகசூல் வெகுவாக குறைந்து விடுகிறது. இதன் காரணமாக போட்ட முதலீடு கூட கிடைக்காமல் விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்க நேரிடுகிறது.

ஏழை விவசாயிகளை காக்க களமிறங்கிய மாணவர்கள்... என்ன செய்தார்கள் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

நமது விவசாயிகள் சந்திக்கும் மற்றொரு பிரச்னை களை. பயிர்களுக்கு இடையே வளரும் வேண்டத்தகாத செடிகள்தான் களை என அழைக்கப்படுகின்றன. பூச்சிகளின் தாக்குதலால் ஏற்படும் நஷ்டத்தை விட களைகளால் ஏற்படும் நஷ்டம்தான் அதிகம் என வேளாண் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

ஏழை விவசாயிகளை காக்க களமிறங்கிய மாணவர்கள்... என்ன செய்தார்கள் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

இதில், முதலாவது பிரச்னையால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க வேண்டும். இரண்டாவது பிரச்னையால் நஷ்டம் அடையாமல் இருக்க களைகளை கண்டறிந்து அகற்ற வேண்டும்.

ஏழை விவசாயிகளை காக்க களமிறங்கிய மாணவர்கள்... என்ன செய்தார்கள் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

இதற்கு போதிய அளவிற்கு வேலை ஆட்கள் தேவை. ஆனால் இன்றைய சூழலில் விவசாய பணிகளுக்கு வேலை ஆட்கள் கிடைப்பது என்பது சவாலான காரியமாக உள்ளது. அப்படியே கிடைத்தாலும், முன்பை காட்டிலும் அவர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்க வேண்டியுள்ளது.

ஏழை விவசாயிகளை காக்க களமிறங்கிய மாணவர்கள்... என்ன செய்தார்கள் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

ஏற்கனவே நஷ்டத்தை சந்தித்து வரும் விவசாயிகளால், பணியாளர்களுக்கு அதிகப்படியான சம்பளம் கொடுக்க முடிவதில்லை. இந்த சூழலில் விவசாயிகளின் இந்த பிரச்னைக்கு, நம் நாட்டு மாணவர்கள் அதிநவீன முறையில் தீர்வு கண்டுள்ளனர்.

ஏழை விவசாயிகளை காக்க களமிறங்கிய மாணவர்கள்... என்ன செய்தார்கள் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் நகரில், லவ்லி புரொபஷனல் யுனிவர்சிட்டி (LPU- Lovely Professional University) செயல்பட்டு கொண்டுள்ளது. இப்பல்கலைகழகத்தை சேர்ந்த 45 மாணவர்கள் ஒருங்கிணைந்து, பறக்கும் ட்ரோன் (Drone) ஒன்றை வடிவமைத்துள்ளனர்.

ஏழை விவசாயிகளை காக்க களமிறங்கிய மாணவர்கள்... என்ன செய்தார்கள் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

இதற்கு 'பறக்கும் விவசாயி' (Flying Farmer) என பெயரிட்டுள்ளனர். இந்த பறக்கும் ட்ரோனில் உள்ள பல்வேறு வசதிகள் விவசாயிகளின் பிரச்னைக்கு தீர்வாக அமைந்துள்ளன. இந்த ட்ரோன் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்கும் திறன் வாய்ந்தது.

ஏழை விவசாயிகளை காக்க களமிறங்கிய மாணவர்கள்... என்ன செய்தார்கள் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

எங்கெங்கு பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்க வேண்டும் என்பதை இந்த ட்ரோன் கண்டறிந்து விடும். அத்துடன் பூச்சிக்கொல்லி மருந்துகளையும் சரியாக தெளித்து விடும். இந்த பணியில் மனிதர்களை ஈடுபடுத்தினால், பூச்சிக்கொல்லி மருந்துகள் வீணாவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஏழை விவசாயிகளை காக்க களமிறங்கிய மாணவர்கள்... என்ன செய்தார்கள் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

ஆனால் ட்ரோன்கள் ஒரு துளி பூச்சிக்கொல்லி மருந்தை கூட வீணடிக்காது. எவ்வளவு தெளிக்க வேண்டுமோ, அதை மட்டும் சரியாக தெளித்து விடும். இதன்மூலம் பூச்சிக்கொல்லி மருந்துகள் விரயமாவது தடுக்கப்பட்டு, விவசாயிகளுக்கு நன்மை ஏற்படும்.

ஏழை விவசாயிகளை காக்க களமிறங்கிய மாணவர்கள்... என்ன செய்தார்கள் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

அத்துடன் பூச்சிக்கொல்லி மருந்து சரியான இடங்களில் தெளிக்கப்படுவதால், மகசூலும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர மனிதர்களால் சில சமயங்களில் களைகளை சரியாக கண்டறிய முடியாமல் போய் விடுகிறது.

ஏழை விவசாயிகளை காக்க களமிறங்கிய மாணவர்கள்... என்ன செய்தார்கள் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

ஆனால் மாணவர்கள் கண்டறிந்துள்ள இந்த ட்ரோன், கம்ப்யூட்டர் முறையில் ப்ரோகிராம் செய்யப்பட்டது. இதில் உள்ள இன்ஃப்ராரெட் சென்சார்கள் (Infrared Sensors), களைகள் உள்ள இடத்தை மிக துல்லியமாக கண்டறிந்து விடக்கூடிய திறன் வாய்ந்தவை.

ஏழை விவசாயிகளை காக்க களமிறங்கிய மாணவர்கள்... என்ன செய்தார்கள் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

இதுதவிர மண்ணின் ஊட்டச்சத்து விகிதத்தை மிக துல்லியமாக கணக்கிட்டு, மகசூலை அதிகரிக்க இந்த ட்ரோன் உதவி செய்யும். அத்துடன் பயிர்கள் சேதாரமாவதை தடுப்பதற்கான வேலைகளையும் இந்த வயர்லெஸ் சென்சார் டிவைஸ் மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏழை விவசாயிகளை காக்க களமிறங்கிய மாணவர்கள்... என்ன செய்தார்கள் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

பறக்கும் விவசாயி என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த ட்ரோன் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 25 நிமிடங்கள் இடைவிடாமல் பறக்க கூடிய திறன் வாய்ந்தது. இதன் விலை ரூ.10 ஆயிரம்-ரூ.15 ஆயிரத்திற்குள்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏழை விவசாயிகளை காக்க களமிறங்கிய மாணவர்கள்... என்ன செய்தார்கள் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

லவ்லி புரொபஷனல் யுனிவர்சிட்டியின் எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் மற்றும் வேளாண் பொறியியல் ஆகிய துறைகளை சேர்ந்த 45 மாணவர்கள் ஒருங்கிணைந்து இந்த ட்ரோனை வடிவமைத்துள்ளனர். இதில், மற்றொரு குறிப்பிடத்தகுந்த விஷயமும் அடங்கியுள்ளது.

ஏழை விவசாயிகளை காக்க களமிறங்கிய மாணவர்கள்... என்ன செய்தார்கள் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

இந்த ட்ரோனுக்கு காப்புரிமை கோர வேண்டாம் என மாணவர்களும், பல்கலைக்கழக நிர்வாகமும் பெருந்தன்மையுடன் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விவசாயிகள் யார் வேண்டுமானாலும், மிக குறைவான செலவில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொள்ள இது உதவும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
This Drone Made By Engineering Students Will Help Farmers To Improve Crop Yield. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X