மாம்பழங்களை டெலிவரி செய்ய சூப்பர் கார்... விலையை பாத்து மயக்கம் போட்றாதீங்க... அவ்ளோ காஸ்ட்லி...

மாம்பழங்களை டெலிவரி செய்வதற்கு, லம்போர்கினி சூப்பர் கார் பயன்படுத்தப்படும் நிகழ்வு, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மாம்பழங்களை டெலிவரி செய்ய சூப்பர் கார்... விலையை பாத்து மயக்கம் போட்றாதீங்க... அவ்ளோ காஸ்ட்லி...

சூப்பர் கார்களில் ஜாலி ரைடு செல்ல வேண்டும் என்ற ஆசை, நம்மில் பலருக்கும் உள்ளது. இதில் விஷயத்தை பொறுத்தவரை சிறுவர்கள், பெரியவர்கள் என்ற வித்தியாசமெல்லாம் கிடையாது. அதிலும் வாழ்க்கையில் ஒரு முறையாவது, லம்போர்கினி (Lamborghini) நிறுவனத்தின் கார்களில் பயணம் செய்து விட மாட்டோமா? என்று ஏங்கி கிடப்பவர்கள் இங்கு ஏராளம்.

மாம்பழங்களை டெலிவரி செய்ய சூப்பர் கார்... விலையை பாத்து மயக்கம் போட்றாதீங்க... அவ்ளோ காஸ்ட்லி...

இது இத்தாலியை சேர்ந்த உலகப்புகழ் பெற்ற நிறுவனமாகும். லக்ஸரி ஸ்போர்ட்ஸ் கார்களை தயாரிப்பதில், லம்போர்கினிக்கு நிகர் லம்போர்கினிதான். இந்திய சாலைகளில், லம்போர்கினி நிறுவனத்தின் கார்களை பார்ப்பது என்பது மிகவும் அரிதான விஷயம். சென்னை, பெங்களூர் மற்றும் மும்பை போன்ற பெரு நகரங்களில் மட்டும் லம்போர்கினி கார்களை அவ்வப்போது பார்க்க முடியும்.

மாம்பழங்களை டெலிவரி செய்ய சூப்பர் கார்... விலையை பாத்து மயக்கம் போட்றாதீங்க... அவ்ளோ காஸ்ட்லி...

அப்படி ஒரு கார் தென்பட்டு விட்டால் கூட, சமூக வலை தளங்களில் அந்த போட்டோ வைரல் ஆவது உறுதி. இந்தியாவின் நிலைமை இப்படி இருக்க ஐக்கிய அரபு எமீரகத்தின் முக்கியமான நகரங்களில் ஒன்றான துபாயின் நிலைமையோ வேறு. லம்போர்கினி உள்பட பல்வேறு நிறுவனங்களின் ஸ்போர்ட்ஸ் மற்றும் லக்ஸரி கார்களை துபாய் சாலைகளில் சர்வ சாதாரணமாக காண முடியும்.

மாம்பழங்களை டெலிவரி செய்ய சூப்பர் கார்... விலையை பாத்து மயக்கம் போட்றாதீங்க... அவ்ளோ காஸ்ட்லி...

இப்படிப்பட்ட சூழலில், லம்போர்கினி காரில் ஜாலி ரைடு செல்லும் அதிர்ஷ்டம் துபாய்வாசிகளுக்கு தற்போது அடித்துள்ளது. இதற்காக அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். மாம்பழம் ஆர்டர் செய்ய வேண்டும். ஆம், துபாயில் இயங்கி வரும் சூப்பர் மார்க்கெட் ஒன்று, மாம்பழம் ஆர்டர் செய்பவர்களுக்கு, லம்போர்கினி காரில் பயணிக்கும் அனுபவத்தை வழங்கி வருகிறது.

மாம்பழங்களை டெலிவரி செய்ய சூப்பர் கார்... விலையை பாத்து மயக்கம் போட்றாதீங்க... அவ்ளோ காஸ்ட்லி...

துபாயில் உள்ள பாகிஸ்தான் சூப்பர் மார்க்கெட் தனது வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே நேராக சென்று, மாம்பழங்களை டெலிவரி செய்து வருகிறது. இதற்கு பச்சை நிற லம்போர்கினி ஹூராகேன் (Lamborghini Huracan) காரை, அந்த சூப்பர் மார்க்கெட் பயன்படுத்தி வருகிறது. மாம்பழத்தை டெலிவரி செய்த பின்னர், லம்போர்கினி ஹூராகேன் காரில் வாடிக்கையாளர்கள் ரைடு அழைத்து செல்லப்படுகின்றனர்.

மாம்பழங்களை டெலிவரி செய்ய சூப்பர் கார்... விலையை பாத்து மயக்கம் போட்றாதீங்க... அவ்ளோ காஸ்ட்லி...

இது தொடர்பாக அந்த சூப்பர் மார்க்கெட்டின் நிர்வாக இயக்குனரான முகம்மது ஜெஹன்ஷாப் கூறுகையில், ''அரசன் (மாம்பழம்) எப்போது அரசனை போலதான் பயணம் செய்ய வேண்டும்'' என்றார். இவர்தான் லம்போர்கினி ஹூராகேன் காரில், வாடிக்கையாளர்களுக்கு மாம்பழங்களை டெலிவரி செய்கிறார். அத்துடன் வாடிக்கையாளர்களை ரைடும் கூட்டி செல்கிறார்.

மாம்பழங்களை டெலிவரி செய்ய சூப்பர் கார்... விலையை பாத்து மயக்கம் போட்றாதீங்க... அவ்ளோ காஸ்ட்லி...

இந்திய மதிப்பில் குறைந்தபட்சம் 2,100 ரூபாய்க்கு மாம்பழங்களை ஆர்டர் செய்பவர்களுக்கு இந்த சூப்பரான ஆஃபர் கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து முகம்மது ஜெஹன்ஷாப் கூறுகையில், ''மக்களின் முகத்தில் மகிழ்ச்சியை வரவழைக்க வேண்டும் என்பதன் அடிப்படையில்தான் இந்த ஐடியா தோன்றியது. அவர்களை சிறப்பாக உணர வைக்க வேண்டும் என்பதும் எங்கள் நோக்கம்'' என்றார்.

மாம்பழங்களை டெலிவரி செய்ய சூப்பர் கார்... விலையை பாத்து மயக்கம் போட்றாதீங்க... அவ்ளோ காஸ்ட்லி...

இதுகுறித்து முகம்மது ஜெஹன்ஷாப் மேலும் கூறுகையில், ''கொரோனா வைரஸ் பிரச்னையால் குழந்தைகள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். அவர்களுக்கு லம்போர்கினி ரைடு மகிழ்ச்சியை கொடுக்கிறது. அதே நேரத்தில் இதன் மூலம் பெரியவர்களுக்கு சிலிர்ப்படைகின்றனர். எனவே இந்த பணியை செய்வதில் எனக்கும் மகிழ்ச்சிதான்.

மாம்பழங்களை டெலிவரி செய்ய சூப்பர் கார்... விலையை பாத்து மயக்கம் போட்றாதீங்க... அவ்ளோ காஸ்ட்லி...

ஒரு டெலிவரியை முடிப்பதற்கு சுமார் ஒரு மணி நேரம் ஆகிறது. இதன் காரணமாக ஒரு நாளைக்கு 7-8 ஹோம் டெலிவரிகளை மட்டுமே செய்ய முடிகிறது. ஆனால் இந்த எண்ணிக்கையை 12 ஆக உயர்த்த முடியும் என்ற நம்பிக்கையுடன் உள்ளோம்'' என்றார். துபாய் சூப்பர் மார்க்கெட்டின் இந்த அதிரடி ஆஃபர் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மாம்பழங்களை டெலிவரி செய்ய சூப்பர் கார்... விலையை பாத்து மயக்கம் போட்றாதீங்க... அவ்ளோ காஸ்ட்லி...

மாம்பழங்களை டெலிவரி செய்வதற்காக, துபாய் சூப்பர் மார்க்கெட் பயன்படுத்தி வரும் ஹூராகேன் கார் மிகவும் புகழ்பெற்ற லம்போர்கினி நிறுவனத்தின் தயாரிப்புகளில் ஒன்றாகும். அத்துடன் அதன் விலையும் மிகவும் அதிகம். இந்திய மதிப்பில் லம்போர்கினி ஹூராகேன் காரின் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை, 2.99 கோடி ரூபாய் முதல் 3.97 கோடி ரூபாய் வரை என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
This Dubai Super Market Delivers Mangoes In Lamborghini Huracan Supercar. Read in Tamil
Story first published: Friday, June 26, 2020, 15:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X