பயணியிடம் விமான பணிப்பெண்கள் முதலில் கவனிக்கும் விஷயம் இதுதான்!! இத்தனை நாள் இது தெரியாம போச்சே!

எத்தனை முறை பேருந்து, இரயில்களில் பயணித்து இருந்தாலும், விமானத்தில் பறப்பது என்பது தனி ஃபீல். ஏனெனில் முதல்முறையாக பயணம் செய்வோர்க்கு விமான பயணத்திற்கான போர்டிங் பாஸை பெறுவதில் இருந்து, விமானத்திற்குள் பணிப்பெண்களிடம் இருந்து கிடைக்கும் உபசரிப்புகள் வரையில் எல்லாமே புதியதாக இருக்கும்.

பயணியிடம் விமான பணிப்பெண்கள் முதலில் கவனிக்கும் விஷயம் இதுதான்!! இத்தனை நாள் இது தெரியாம போச்சே!

பணிப்பெண்களை பொறுத்தவரையில், நீங்கள் கேபினுக்குள் நுழைந்தவுடன் வணக்கம் வைக்கும்போதே உங்களை பற்றிய ஓர் அணுகுமுறைக்கு வந்துவிடுவார்கள். பயணத்தின்போது எந்தெந்த விஷயங்களை வைத்து பணிப்பெண்கள் உங்களை மதிப்பிடுவார்கள் என்பதை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

பயணியிடம் விமான பணிப்பெண்கள் முதலில் கவனிக்கும் விஷயம் இதுதான்!! இத்தனை நாள் இது தெரியாம போச்சே!

எந்த மாதிரியான ஷூ-வை அணிந்துள்ளீர்கள்

விமானத்தினுள் நுழைந்தவுடன் உங்கள் முகத்தை பார்த்து பதிலுக்கு வணக்கம் வைத்தவுடன், பணிப்பெண்களின் தலை கீழே குனிந்து நேராக உங்களது ஷூ-வின் மீதுதான் பார்வை விழும். ஏனெனில் கேபினின் தரைப்பாய் உங்களை பிரமிக்க வைத்தாலும், தொடர்ந்து பயணிகளின் மிதிக்கு ஆளாகுவதால் அது எந்த அளவிற்கு அழுக்காக இருக்கும் என்பது பணிப்பெண்களுக்கு தெரியும்.

பயணியிடம் விமான பணிப்பெண்கள் முதலில் கவனிக்கும் விஷயம் இதுதான்!! இத்தனை நாள் இது தெரியாம போச்சே!

அது மேலும் அழுக்காக உள்ளதா என்பதை உங்களது ஷீ-வை வைத்து பணிப்பெண்கள் தீர்மானித்து விடுவார்கள். பெண் பயணிகளில் யார் யார் ஹீல்ஸ் அணிந்துள்ளனர் என்பதையும் மனதில் குறித்து வைத்து கொள்வார்கள். ஏனென்றால் பயணத்தின்போது சில சமயங்களில் அவர்களை ஹீல்ஸை கழற்றி நடக்க சொல்லி வேண்டிவரும் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

பயணியிடம் விமான பணிப்பெண்கள் முதலில் கவனிக்கும் விஷயம் இதுதான்!! இத்தனை நாள் இது தெரியாம போச்சே!

எத்தகைய பண்பு கொண்டுள்ளீர்கள்

முதல்முறையாக விமானத்தில் பயணிப்பவர்கள் நிச்சயமாக பணிப்பெண்களின் வரவேற்பை பார்த்து மெல்லிய, இல்லை... இல்லை சற்று நீண்ட சிரிப்பையோ அல்லது 'ஹலோ, ஹௌ ஆர் யூ?" போன்ற கேள்விகளையோ வெளிப்படுத்திவிடுவர். இதை வைத்தே இவர் முதல்முறையாக விமான பயணம் செய்பவர் என்பதை எளிதாக பணிப்பெண் அடையாளம் கண்டுவிடுவார்.

பயணியிடம் விமான பணிப்பெண்கள் முதலில் கவனிக்கும் விஷயம் இதுதான்!! இத்தனை நாள் இது தெரியாம போச்சே!

அதேநேரம் எதையும் சொல்லாமல் கோபத்துடன் கேபினுக்குள் நுழைப்பவரையும், திறுத்திறுவென முழிப்பவரையும் குறித்து வைத்து கொள்வர். ஏனெனில் மனித கடத்தல்காரர்கள் விமானங்களையும் தங்கள் கடத்தல்களுக்கு ஏற்ற இடமாக பார்க்கின்றனர். இதனால் விசித்திரமான சைகைகள், செயல்பாடுகள் ஏதேனும் அத்தகையவர்களிடம் இருந்து வெளிப்பட்டால் உடனே விமானிக்கு பணிப்பெண்கள் தகவல் தெரிவித்துவிடுவர்.

பயணியிடம் விமான பணிப்பெண்கள் முதலில் கவனிக்கும் விஷயம் இதுதான்!! இத்தனை நாள் இது தெரியாம போச்சே!

உடன் எடுத்து செல்லும் சுமைகள் எவ்வளவு

விமானத்தில் பயணிக்கும் பயணிகளை சோதனையிடும் கடைநிலை ஊழியர்கள் பணிப்பெண்கள் ஆவர். இவர்கள் உங்களது பைகளை நேரடியாக சோதனையிடாவிடினும், பைகள் அளவை வைத்தும், அலமாரியில் தூக்கி வைப்பதற்கு உதவும்போது எந்த அளவிற்கு எடைமிக்கதாக உள்ளது என்பதை வைத்தும் மறைமுகமாக உங்களது பைகளை சோதித்துவிடுவர்.

பயணியிடம் விமான பணிப்பெண்கள் முதலில் கவனிக்கும் விஷயம் இதுதான்!! இத்தனை நாள் இது தெரியாம போச்சே!

ஏனெனில் நிர்ணயிக்கப்பட்டதற்கு மேல் எடை கொண்ட பைகளை பயணிகள் கேபினில் வைத்து கொண்டு செல்ல இயலாது. விமான நிலையத்தில் சோதனை செய்தபின் பயணிகளின் பைகளுக்கு எத்தகைய லேபிள் டேக் செய்யப்பட்டுள்ளது என்பதை கூடுதல் கவனம் செலுத்தி பார்ப்போம் என பெரும்பாலான விமான பணிப்பெண்கள் தெரிவித்துள்ளனர்.

பயணியிடம் விமான பணிப்பெண்கள் முதலில் கவனிக்கும் விஷயம் இதுதான்!! இத்தனை நாள் இது தெரியாம போச்சே!

உடலமைப்பு எவ்வாறு கொண்டுள்ளீர்கள்

வெளியே சிரித்து கொண்டிருந்தாலும், பணிப்பெண்களின் முழு கவனமும் பயணத்தின்போது எப்போதும் பயணிகளின் பாதுகாப்பை பற்றியே இருக்கும். நீங்கள் அதிக சுமைகளை சுமக்கக்கூடியவராக வலிமையானவர் போன்று தோற்றமளித்தீர்கள் என்றால் உங்களையும் அவசர நேரத்தில் அழைப்பதற்காக கவனத்தில் வைத்து கொள்வார்கள்.

பயணியிடம் விமான பணிப்பெண்கள் முதலில் கவனிக்கும் விஷயம் இதுதான்!! இத்தனை நாள் இது தெரியாம போச்சே!

அதுவே உடல் சோர்வாகவோ அல்லது காய்ச்சலில் உள்ளதை போன்றோ அல்லது சோகமாகவோ இருந்தால் உங்களிடம் வந்து என்ன பிரச்சனை என கேட்டு அறிந்துக்கொள்வார்கள். அதிலிலும் கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியால், நீங்கள் காய்ச்சலுடன் பயணம் செய்ய வேண்டி இருந்தால் நீங்கள் அதீத கவனத்திற்கு உள்ளாக்கப்படுவீர்கள். காய்ச்சல் முற்றியிருந்தால் உங்களை விமானத்தில் இருந்து இறக்கிவிடவும் வாய்ப்புள்ளது.

பயணியிடம் விமான பணிப்பெண்கள் முதலில் கவனிக்கும் விஷயம் இதுதான்!! இத்தனை நாள் இது தெரியாம போச்சே!

போதையில் உள்ளீர்களா...

காய்ச்சல் மட்டுமில்லை, நீங்கள் போதையில் தள்ளாடியப்படி இருந்தாலும் விமானத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவீர்கள். ஏனெனில் அவர்களினால் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இது மிக பெரிய பிரச்சனையிலும் சென்று முடியலாம். ஆதலால் டேக்-ஆஃப் இற்கு முன்பே நீங்கள் வெளியேற்றப்படுவீர்கள்.

பயணியிடம் விமான பணிப்பெண்கள் முதலில் கவனிக்கும் விஷயம் இதுதான்!! இத்தனை நாள் இது தெரியாம போச்சே!

மேலும், வெளியில் இருந்து ஆல்கஹால் கொண்டுவருவதையும் பணிப்பெண்கள் அனுமதிப்பது இல்லை. ஆனால் உண்மையில் நீங்கள் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்தாலோ அல்லது மதுப்பாட்டில்களை உடன் கொண்டுவந்தாலோ நீங்கள் செக்-இன் பகுதியிலேயே தடுத்து நிறுத்தப்படுவீர்கள்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
This is flight attendant first notices about you
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X