நடிகர் அஜித் விரும்பி ஃபோட்டோ எடுத்து கொண்ட காரில் இத்தனை ஸ்பெஷல் இருக்கா!! ஃபேன்ஸ் ஆராய்ச்சில இறங்கிட்டாங்க!

அட்டகாசமான மெக்லாரன் ஸ்போர்ட்ஸ் காருடன் நடிகர் அஜித் இருக்கும் படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதனை பற்றியும், இந்த மெக்லாரன் காரில் அப்படி என்ன சிறப்பம்சங்கள் உள்ளன என்பதை பற்றியும் இந்த செய்தியில் பார்ப்போம்.

நடிகர் அஜித் விரும்பி ஃபோட்டோ எடுத்து கொண்ட காரில் இத்தனை ஸ்பெஷல் இருக்கா!! ஃபேன்ஸ் ஆராய்ச்சில இறங்கிட்டாங்க!

நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி பல சுவாரஸ்யமான விஷங்களில் தன்னை ஆர்வத்துடன் ஈடுப்படுத்தி கொள்பவர் என்பது நமக்கு தெரிந்த விஷயமே. சினிமாவிற்கு வருவதற்கு முன்பு இருந்தே பைக் ரேஸிங்கில் ஈடுப்பட்டு வரும் அஜித் அதேநேரம் டிரோன்களை வடிவமைத்து இயக்குவதிலும் பிரத்யேகமாக பயிற்சி எடுத்து நிபுணராக இருக்கிறார்.

நடிகர் அஜித் விரும்பி ஃபோட்டோ எடுத்து கொண்ட காரில் இத்தனை ஸ்பெஷல் இருக்கா!! ஃபேன்ஸ் ஆராய்ச்சில இறங்கிட்டாங்க!

பைக்குகளை ஓட்டுவதில் ஆர்வமிக்கவர்கள் பலருக்கு கார்களை இயக்கி பார்ப்பதிலும் ஆர்வம் இருக்கும். அத்தகையவர்களில் நடிகர் அஜித்தும் ஒருவர் என்றுதான் சொல்ல வேண்டும். எச்.வினோத்தின் இயக்கத்தில் ஏகே61 படத்தில் நடித்துவரும் நடிகர் அஜித் தற்சமயம் ஐரோப்பாவில் ஜாலியாக மோட்டார்சைக்கிள்களில் சுற்றுலா மேற்கொண்டு வருகிறார்.

நடிகர் அஜித் விரும்பி ஃபோட்டோ எடுத்து கொண்ட காரில் இத்தனை ஸ்பெஷல் இருக்கா!! ஃபேன்ஸ் ஆராய்ச்சில இறங்கிட்டாங்க!

கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் பைக்கில் பயணம் மேற்கொண்டிருந்த அஜித் இப்போது இங்கிலாந்தில் அதே பாணியில் மோட்டார்சைக்கிளில் தனக்கு பிடித்த இடங்களுக்கு சென்று வருகிறார். இது தொடர்பான படங்கள்தான் கடந்த ஒரு வாரமாக இணையத்தில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக, அங்கிருக்கும் இந்தியர்களுடன் மோட்டார்சைக்கிள்களில் அஜித் பயணம் செய்யும் படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

நடிகர் அஜித் விரும்பி ஃபோட்டோ எடுத்து கொண்ட காரில் இத்தனை ஸ்பெஷல் இருக்கா!! ஃபேன்ஸ் ஆராய்ச்சில இறங்கிட்டாங்க!

இந்த வகையில் தற்போது லண்டனில் ஆடம்பர ஷோரூம் ஒன்றில் மெக்லாரன் கார் ஒன்றிற்கு அருகில் நின்றவாறு நடிகர் அஜித் எடுத்துக்கொண்ட படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. மேலும் அங்கிருந்த பல பிரபலமான மற்றும் லக்சரி மெக்லாரன் கார்களை அஜித் பார்வையிட்டுள்ளார். அப்போது வெள்ளை நிறத்தில் அங்கிருந்த மெக்லாரன் 720எஸ் காரின் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.

நடிகர் அஜித் விரும்பி ஃபோட்டோ எடுத்து கொண்ட காரில் இத்தனை ஸ்பெஷல் இருக்கா!! ஃபேன்ஸ் ஆராய்ச்சில இறங்கிட்டாங்க!

ஆனால் நடிகர் அஜித்தின் ரசிகர்கள், அஜித் ஏன் குறிப்பாக இந்த காரின் அருகில் நின்று புகைப்படம் எடுத்து கொண்டார்? இந்த காரில் அப்படி என்ன சிறப்பம்சம் இருக்கிறது? என தேட ஆரம்பித்துள்ளனர். அவ்வாறு இந்த மெக்லாரன் காரை பற்றிய விபரங்களை தேடிக் கொண்டிருக்கிறீர்களா? கவலை வேண்டம், அவற்றை நாங்கள் இந்த செய்தியில் விளக்கி கூறுகிறோம். இது மெக்லாரன் நிறுவனத்தின் 720எஸ் மாடல் ஆகும்.

நடிகர் அஜித் விரும்பி ஃபோட்டோ எடுத்து கொண்ட காரில் இத்தனை ஸ்பெஷல் இருக்கா!! ஃபேன்ஸ் ஆராய்ச்சில இறங்கிட்டாங்க!

இந்தியாவிலும் விற்பனையில் இருக்கும் மெக்லாரன் 720எஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் நம் நாட்டில் ரூ.4.65 கோடி மற்றும் ரூ.5.04 கோடியாக உள்ளன. மறுபடியும் கூறிக்கொள்கிறோம், இது காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகளே. ஆன்-ரோடு விலைகள் இவற்றை காட்டிலும் ரூ.1 கோடியில் இருந்து ரூ.1.5 கோடி வரையில் மாநிலங்களை பொறுத்து அதிகமாக வரலாம்.

நடிகர் அஜித் விரும்பி ஃபோட்டோ எடுத்து கொண்ட காரில் இத்தனை ஸ்பெஷல் இருக்கா!! ஃபேன்ஸ் ஆராய்ச்சில இறங்கிட்டாங்க!

இந்தியாவில் கூபே மற்றும் ஸ்பைடர் என இரு விதமான வேரியண்ட்களில் மெக்லாரன் 720எஸ் கார் விற்பனை செய்யப்படுகிறது. இவை இரண்டும் தங்களது உடலமைப்பில் சிறிய மாற்றங்கள் மூலமாக ஒன்றுடன் ஒன்று வித்தியாசப்படுகின்றன. நம் நாட்டில் ஆனிக்ஸ் கருப்பு, அவ்ரோரா நீலம், ஸ்ட்ரோம் க்ரே, வெர்மிலியன் சிவப்பு, மெக்லாரன் ஆரஞ்ச் மற்றும் சிலிகா வெள்ளை என ஆறு விதமான நிறத்தேர்வுகளில் இந்த மெக்லாரன் கார் விற்பனைக்கு கிடைக்கிறது.

நடிகர் அஜித் விரும்பி ஃபோட்டோ எடுத்து கொண்ட காரில் இத்தனை ஸ்பெஷல் இருக்கா!! ஃபேன்ஸ் ஆராய்ச்சில இறங்கிட்டாங்க!

இந்தியாவில் பெட்ரோல் என்ஜின் மற்றும் மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறான ஸ்போர்ட்ஸ் கார்களை தயாரிப்பதில் இத்தாலி மற்றும் ஜெர்மனி நாடுகளே உலகளவில் முன்னிலை வகிக்கின்றன. லம்போர்கினி, போர்ஷே, ஃபெராரி போன்ற பிரபலமான லக்சரி ஸ்போர்ட்ஸ் கார் பிராண்ட்கள் இந்த இரு நாடுகளை சேர்ந்தவைகளே.

நடிகர் அஜித் விரும்பி ஃபோட்டோ எடுத்து கொண்ட காரில் இத்தனை ஸ்பெஷல் இருக்கா!! ஃபேன்ஸ் ஆராய்ச்சில இறங்கிட்டாங்க!

ஆனால் மெக்லாரன் பக்கா பிரிட்டிஷ் கார் பிராண்ட் ஆகும். இந்த நிறுவனத்தின் 720எஸ் மாடலில் பட்டாம்பூச்சி வடிவில் 2 இருக்கைகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. இதில் பொருத்தப்படுகின்ற 3,994சிசி, இரட்டை-டர்போ வி8 என்ஜின் அதிகப்பட்சமாக 710 பிஎச்பி மற்றும் 770 என்எம் டார்க் திறன் வரையில் இயக்க ஆற்றலை காருக்கு வழங்கக்கூடியதாக உள்ளது.

நடிகர் அஜித் விரும்பி ஃபோட்டோ எடுத்து கொண்ட காரில் இத்தனை ஸ்பெஷல் இருக்கா!! ஃபேன்ஸ் ஆராய்ச்சில இறங்கிட்டாங்க!

இந்த என்ஜின் உடன் டிரான்ஸ்மிஷனுக்கு 7-ஸ்பீடு இரட்டை-க்ளட்ச் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. 4543மிமீ-இல் நீளத்தை கொண்ட இந்த ஸ்போர்ட்ஸ் காரின் அகலம் 2059மிமீ மற்றும் உயரம் 1196மிமீ ஆகும். பெட்ரோல் டேங்கை இந்த கார் 72 லிட்டர்கள் கொள்ளளவில் கொண்டுள்ளது. காரின் க்ரவுண்ட் க்ளியரென்ஸ், அதாவது தரையில் இருந்து காரின் அடித்தளம் வெறும் 10.7 செ.மீ உயரத்தில் உள்ளது.

Article Published On: Saturday, June 25, 2022, 18:10 [IST]
English summary
This is name of the costly mclaren car that actor ajith taken photo in uk
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+