ஆவிகளின் லாரியிடம் தப்பித்தால் அமானுஷ்ய மிருகங்கள் கொல்ல வரும்... நரகத்திற்கு கூட்டி செல்லும் சாலை

நரகத்திற்கு கூட்டி செல்லும் பேய் நெடுஞ்சாலையில், ஆவிகளின் லாரியும், அமானுஷ்ய மிருகங்களும் உலாவி வருகின்றன. உயிரை கையில் பிடித்து கொண்டு தப்பி வந்தவர்கள் கூறிய இந்த தகவல்களை, பயந்த சுபாவம் உள்ளவர்கள் தெரிந்து கொள்ள வேண்டாம்.

ஆவிகளின் லாரியிடம் தப்பித்தால் அமானுஷ்ய மிருகங்கள் கொல்ல வரும்... நரகத்திற்கு கூட்டி செல்லும் சாலை

Image Credit: Ribbet32/Wiki Commons

உலகின் பல்வேறு சாலைகளில் தீய சக்திகள் இருப்பதாக நம்பப்படுகிறது. அவ்வாறு பேய்கள் உலாவுவதாக கூறப்படும் சாலைகளில் பயணம் செய்வதை மக்கள் தவிர்த்து விடுகின்றனர். விபத்துக்களின் வழியாக பேய்கள் நம்மை கொன்று விடும் என்ற அச்சமே இதற்கு காரணமாக உள்ளது. உண்மையில் ஒரு சில சாலைகளில் நடைபெறும் விபத்துக்களில் மக்கள் கொத்து கொத்தாக பலியாகின்றனர்.

ஆவிகளின் லாரியிடம் தப்பித்தால் அமானுஷ்ய மிருகங்கள் கொல்ல வரும்... நரகத்திற்கு கூட்டி செல்லும் சாலை

Image Credit: Daniel Schwen/Wiki Commons

இதற்கு தீய சக்திகள்தான் காரணம் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை. உண்மையில் அந்த சாலைகளின் புவியியல் அமைப்பும் கூட விபத்துக்கள் அதிகமாக நடைபெறுவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் அறிவியில் வளர்ச்சியடைந்து விட்ட இன்றைய கால கட்டத்தில் கூட ஒரு சில சாலைகளில் ஏன் விபத்துக்கள் அதிகமாக நடக்கிறது? என்பதற்கு யாராலும் விடை சொல்ல முடியவில்லை.

ஆவிகளின் லாரியிடம் தப்பித்தால் அமானுஷ்ய மிருகங்கள் கொல்ல வரும்... நரகத்திற்கு கூட்டி செல்லும் சாலை

Image Credit: Smedpull/Wiki Commons

அவ்வாறு புரியாத புதிராக விளங்கும் சாலைகளில் ஆவிகள் நடமாட்டம் இருப்பதாக மக்கள் நம்ப தொடங்கி விடுகின்றனர். அந்த வகையில் மக்களை அச்சுறுத்தி கொண்டிருக்கும் ஒரு திகில் சாலைதான் ஹைவே 666 (Highway 666). இதனை பிசாசுகளின் சாலை (The Devils Highway) எனவும், நரகத்திற்கு கூட்டி செல்லும் சாலை (Highway To Hell) எனவும் மக்கள் கூறுகின்றனர்.

ஆவிகளின் லாரியிடம் தப்பித்தால் அமானுஷ்ய மிருகங்கள் கொல்ல வரும்... நரகத்திற்கு கூட்டி செல்லும் சாலை

Image Credit: hewgill.com

நெடுஞ்சாலை 666-ன் வழியாக பயணம் செய்தால் உயிருடன் திரும்பி வரவே முடியாது என்பது ஒரு சிலரின் நம்பிக்கை. எனவே எந்த நடந்தாலும் இந்த சாலையில் மட்டும் அவர்கள் பயணிக்கவே மாட்டார்கள். இப்படி படுபயங்கரமாக வர்ணிக்கப்படும் நெடுஞ்சாலை 666 அமெரிக்காவில் உள்ளது. இன்னும் சரியாக சொல்வதென்றால், வட அமெரிக்காவில் இருக்கிறது.

ஆவிகளின் லாரியிடம் தப்பித்தால் அமானுஷ்ய மிருகங்கள் கொல்ல வரும்... நரகத்திற்கு கூட்டி செல்லும் சாலை

அமெரிக்காவின் உட்டா (Utah) மாகாணத்தில் உள்ள மாண்டிசெல்லோ எனும் நகரில்தான் நெடுஞ்சாலை 666 தொடங்குகிறது. அங்கிருந்து காலப் நகரம் வரை நெடுஞ்சாலை 666 நீண்டு காணப்படுகிறது. காலப் நகரம் நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் உள்ளது. 200 மைல்களுக்கும் மேலாக நீண்டு காணப்படும் ஹைவே 666 பற்றிய பல்வேறு திகிலூட்டும் கதைகள் உலா வருகின்றன.

ஆவிகளின் லாரியிடம் தப்பித்தால் அமானுஷ்ய மிருகங்கள் கொல்ல வரும்... நரகத்திற்கு கூட்டி செல்லும் சாலை

எதற்கும் பலவீனமான இதயம் கொண்டவர்கள் மேற்கொண்டு படிப்பதை தவிர்க்கலாம். நெடுஞ்சாலை 666-ல் பயணம் செய்தால், உங்களால் அழகான பாறைகளை காண முடியும். பார்ப்பதற்கு ஏதோ பாலைவனம் போன்று காட்சியளிக்கும் நெடுஞ்சாலை 666-ல் உயரமான கற்றாழை தாவரங்களும் அதிகமாக காணப்படுகின்றன.

ஆவிகளின் லாரியிடம் தப்பித்தால் அமானுஷ்ய மிருகங்கள் கொல்ல வரும்... நரகத்திற்கு கூட்டி செல்லும் சாலை

இந்த சாலையில் மேற்கொள்ளும் பயணம் ஒருவருக்கு நிச்சயமாக புதுவிதமான அனுபவத்தை கொடுக்கும். ஆனால் அப்பகுதி மக்களின் நம்பிக்கையின் படி, உயிருடன் திரும்பினால் ஆச்சரியம்தான். உண்மையில் ஹைவே 666 மிகவும் பிரபலமான சாலைதான். ஆனால் பேய் பீதி காரணமாக பலர் இந்த சாலையை தவிர்க்கின்றனர்.

ஆவிகளின் லாரியிடம் தப்பித்தால் அமானுஷ்ய மிருகங்கள் கொல்ல வரும்... நரகத்திற்கு கூட்டி செல்லும் சாலை

நெடுஞ்சாலை 666-ல் நடைபெற்ற ஒரு சில மர்மமான விபத்துக்களுக்கு யாராலும் விடை காண முடியவில்லை. உண்மையில் இங்கு வழக்கத்திற்கு மாறாக அதிக அளவிலான விபத்துக்கள் நடைபெற்று வந்தன. இதில், பலர் மாண்டனர். 666 என்பது துரதிருஷ்டவசமான எண் என்பது அப்பகுதியில் வசிக்கும் மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

ஆவிகளின் லாரியிடம் தப்பித்தால் அமானுஷ்ய மிருகங்கள் கொல்ல வரும்... நரகத்திற்கு கூட்டி செல்லும் சாலை

இதனால் தீய சக்திகளின் ஆதிக்கம் அதிகரித்துதான், இவ்வாறு விபத்துக்கள் நடைபெறுவதாக மக்கள் கூற தொடங்கினர். எனவே ஹைவே 666 என்ற பெயரை அமெரிக்கா கடந்த 2003ம் ஆண்டு மாற்றியது. அதற்கு பதிலாக யுஎஸ் ரூட் 491 (U.S Route 491) என புதிய பெயர் சூட்டப்பட்டது. இந்த சாலையை பற்றி பல திகிலூட்டும் கதைகள் கூறப்படுகின்றன. அவை ஒவ்வொன்றாக இனி பார்க்கலாம்.

ஆவிகளின் லாரியிடம் தப்பித்தால் அமானுஷ்ய மிருகங்கள் கொல்ல வரும்... நரகத்திற்கு கூட்டி செல்லும் சாலை

1. தீய சக்தியின் லாரி

நெடுஞ்சாலை 666 வழியாக பயணம் செய்யும்போது பல்வேறு திகிலூட்டும் அனுபவங்கள் கிடைத்ததாக பலர் கூறுகின்றனர். இதில், ஒன்றுதான் தீய சக்தியின் லாரி. மரகத நாணயம் திரைபடத்தை இங்கே உதாரணமாக குறிப்பிட்டால் உங்களுக்கு நன்றாக புரியும் என நினைக்கிறோம். மரகத நாணயம் படத்தில், டிரைவரே இல்லாத லாரி ஒன்று பலரையும் கொலை செய்ய வந்து கொண்டிருக்கும்.

ஆவிகளின் லாரியிடம் தப்பித்தால் அமானுஷ்ய மிருகங்கள் கொல்ல வரும்... நரகத்திற்கு கூட்டி செல்லும் சாலை

அதேபோன்று ஹைவே 666-ல் தீய சக்தியின் லாரி ஒன்று சுற்றி கொண்டிருப்பதாக பலர் கூறுகின்றனர். இந்த லாரியை தீய சக்திதான் கட்டுப்படுத்துவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். டிரைவரே இல்லாத இந்த லாரியை தீய சக்தி அதிவேகத்தில் இயக்குவதை பார்த்திருப்பதாக பலர் கூறுவது நம்மை திகில் அடைய செய்கிறது.

ஆவிகளின் லாரியிடம் தப்பித்தால் அமானுஷ்ய மிருகங்கள் கொல்ல வரும்... நரகத்திற்கு கூட்டி செல்லும் சாலை

''நாங்கள் இந்த சாலையில் பயணம் செய்யும்போது அந்த லாரி எங்கள் வாகனத்தின் மீது மோதியிருக்கிறது. அல்லது இடிப்பது போல் அருகே வந்துள்ளது'' என பலர் கூறியுள்ளனர். மேலும் அந்த லாரி வேண்டுமென்றே தங்களை குறி வைத்து மிக அதிக வேகத்தில் வந்ததாகவும், உயிரை கையில் பிடித்து கொண்டு தப்பி வந்ததாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆவிகளின் லாரியிடம் தப்பித்தால் அமானுஷ்ய மிருகங்கள் கொல்ல வரும்... நரகத்திற்கு கூட்டி செல்லும் சாலை

இந்த லாரியை கட்டுப்படுத்தும் தீய சக்தி உக்கிரமாக இருப்பதாகவும், உயிர் உள்ள அனைத்தையும் அது வெறுப்பதாகவும் நம்பப்படுகிறது. எனவேதான் வாகனங்களின் மீது லாரியை மோதி மனித உயிர்களை அத்தீய சக்தி பறித்து விடுவதாக மக்கள் நம்புகின்றனர். இந்த கதை உண்மையில் நம்மை பீதியில் ஆழ்த்துகிறது.

ஆவிகளின் லாரியிடம் தப்பித்தால் அமானுஷ்ய மிருகங்கள் கொல்ல வரும்... நரகத்திற்கு கூட்டி செல்லும் சாலை

2. நரகத்தின் வேட்டை நாய்கள்

நரகத்தின் வேட்டை நாய்கள் இந்த சாலையில் உலாவி கொண்டிருப்பதாக பலர் கூறுகின்றனர். வாகனங்கள் என்ன வேகத்தில் சென்றாலும், இந்த அமானுஷ்ய மிருகங்களும் அதற்கு ஈடாக ஓடி வருவதாக கூறப்படுகிறது. இந்த சாலையில் நடைபெறும் பல்வேறு விபத்துக்களுக்கும், உயிரிழப்புகளுக்கும் இந்த நரகத்தின் வேட்டை நாய்கள்தான் காரணமாக தெரிவிக்கப்படுகிறது.

ஆவிகளின் லாரியிடம் தப்பித்தால் அமானுஷ்ய மிருகங்கள் கொல்ல வரும்... நரகத்திற்கு கூட்டி செல்லும் சாலை

இந்த நரகத்தின் வேட்டை நாய்கள் கூர்மையான பற்களுடன் பார்ப்பதற்கே பயங்கரமாக காட்சியளிப்பதாக ஒரு சிலர் தெரிவிக்கின்றனர். வாகனத்தின் விண்டோ மீது திடீரென பாயும் இந்த அமானுஷ்ய மிருகங்கள் உள்ளே இருப்பவரை காயப்படுத்தி விடுவதாக கூறுகின்றனர். இதேபோல் ஹைவே 666 பற்றி இன்னும் பல்வேறு அமானுஷ்ய கதைகள் கூறப்படுகின்றன. அவற்றை இன்னொரு பகுதியில் காண்போம்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
This Is One Of The Most Haunted Road In The World - Highway 666. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more