கார் கதவை இந்த கையில் தான் திறக்கனுமா? இது தெரியமா இவ்வளவு நாள் இருந்திருக்கோமே!

கார்களின் கதவை எப்படி திறக்க வேண்டும் என்ற சரியான புரிதல் பலருக்கு இல்லை. பலர் கதவுகளை திறக்கும் போது சிரமப்படுகின்றனர். கார் கதவை எப்படி திறக்க வேண்டும் என விரிவாக காணலாம் வாருங்கள்.

கார் ஓட்ட தெரியவில்லை என்றாலும் எல்லோருக்கும் காரில் அமர்ந்து செல்ல தெரியும் என நாம் நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் காரில் அமர்ந்து செல்வது என்பது ஒன்றும் அவ்வளவு ஈஸியான காரியம் இல்லை. இதற்கும் சில விதிமுறைகள் இருக்கிறது. முதலில் கார் கதவை எப்படி திறக்க வேண்டும் என்று கூட சில விதிமுறைகள் உள்ளது. நாம் பல நேரங்களில் இதை தவறாக தான் செய்து கொண்டிருக்கிறோம். இதனால் பல்வேறு பிரச்சினைகள் வருகிறது.

car door opening tips

ஆனால் இதையெல்லாம் நாம் ஒரு பிரச்சனை என கருத்தில் கொள்ளாததால் இப்படி ஒரு பிரச்சனை இருப்பதே நமக்கு தெரியவில்லை. கதவை திறப்பதை சரியாக செய்வதன் மூலம் பல்வேறு பலன்களை நாம் பெற முடியும். கார் கதவை வெளியில் இருந்து திறப்பதை விட உள்ளிருந்து வெளியே வருவதற்காக திறக்கப்படும் போதுதான் சில விதிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும்.

பொதுவாக காரில் 4பேர் பயணித்தால் 4 பேருக்கும் தனித்தனியாக கதவுகள் இருக்கும். அந்த கதவு வழியாக தான் உள்ளே ஏறவும் வெளியே வரவும் முடியும். இப்படியாக நாம் காரில் இருந்து வெளியே வர வேண்டும் என்றால் பலர் செய்யும் தவறு கார் கதவின் அருகே இருக்கும் அவர்களது கையை வைத்து கார் கதவை திறப்பது தான். பலர் இதை பழக்கமாகவே கொண்டுள்ளனர். ஆனால் இது ஒரு தவறான பழக்கமாகும்.

car door opening tips

கார் கதவை திறக்கும் போது கால் கதவுக்கு அருகே இருக்கும் கைக்கு பதிலாக அதற்கு மறுபுறம் இருக்கும் கையை தான் நாம் பயன்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் காருக்குள் ஏறுவதும் இறங்குவதும் பாதுகாப்பாக இருக்கும். அதாவது டிரைவர் சீட் அல்லது டிரைவர் சீட்டிற்கு பின்புறம் இருப்பவர்கள் தங்கள் இடது கையையும் பயணிகள் முன்பக்க பயணிகள் சீட்டிற்கு பின் சீட்டில் இருப்பவர்கள் தங்கள் வலது கையையும் காரை திறப்பதற்காக பயன்படுத்த வேண்டும்.

இப்படி நாம் கையை சரியாக பயன்படுத்துவதால் என்ன பலன் கிடைக்கும் என நீங்கள் கேட்கலாம். இப்படியாக மறுபுறம் இருக்கும் கையை பயன்படுத்துவதன் மூலம் தான் காரின் கதவை பாதுகாப்பாக திறக்க முடியும் என ஆய்வுகள் சொல்கிறது. இப்படியாக மறுபுறம் இருக்கும் கையை வைத்து நீங்கள் கதவை திறக்க வேண்டும் என்றால் நீங்கள் உங்கள் உடலை சற்று வளைத்து தான் திறக்க வேண்டும்.

car door opening tips

அந்த நேரத்தில் உங்கள் கண் ஆட்டோமேட்டிக்காக காரின் ஓஆர்விஎம் பக்கம் திரும்பிவிடும் இதனால் வாகனத்தின் பின்புறம் இருந்து யாராவது வருகிறார்களா அல்லது வேறு வாகனம் வருகிறதா என்பதை நீங்கள் உடனடியாக தெரிந்து கொள்ள முடியும். இதன் மூலம் வேறு யாரும் வருவதை நீங்கள் உணர்ந்தால் உடனடியாக கதவை திறக்காமல் நிறுத்தி விட முடியும்.

இது மட்டுமல்ல மற்றொரு முக்கியமான அட்வான்டேஜும் இதன் இதை பின்பற்றுவது மூலம் கிடைக்கிறது. இப்படி மறுபுறம் இருக்கும் கையை நீங்கள் பயன்படுத்தி காரின் கதவை திறப்பதால் கதவை திறக்கும் போது அதிகமான தள்ளு சக்தியை நீங்கள் பயன்படுத்த வேண்டியது இல்லை. இதனால் கதவு மெதுவாக திறக்கும் இதன் மூலம் விபத்து ஏற்படும் வாய்ப்பு குறையும். கதவு திறக்கப்படுவதை பார்த்து காருக்கு பின்னால் வருபவர்கள் உடனடியாக சுதாரித்துக் கொள்ள முடியும்.

இது மட்டுமல்லாமல் கதவில் அதிக அழுத்தம் கொடுப்பது கதவு திறக்கும் பகுதியில் அதிக தேய்மானத்தை ஏற்படுத்தும் மறுபக்கம் இருக்கும் கையை பயன்படுத்துவதால் கதவின் தேய்மானம் குறைவாக இருக்கும். இதனால் காரின் பராமரிப்பு செலவும் குறையும். ஆனால் இதை நீங்கள் ஒரு பழக்கமாகக் கொண்டு இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பலர் இதை ஒரு சின்ன விஷயம் தான் என நினைப்பார்கள். ஆனால் இந்த சின்ன விஷயம்தான் மிகப்பெரிய ஆபத்தை தடுக்கும். அதே நேரம் உங்களுக்கு மிகப்பெரிய அளவில் பலனை தரும். இதனால் இனிமேல் நீங்கள் காரில் இருந்து இறங்கும்போது சரியாக கதவின் மறுபக்கம் இருக்கும் கையை பயன்படுத்தி கதவை திறந்து பழகுங்கள். அதுதான் சரியான விஷயமாக இருக்கும்

More from DriveSpark

Article Published On: Wednesday, October 25, 2023, 16:29 [IST]
English summary
This is the correct method for opening your car door from inside
மேலும்... #எப்படி #how to
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X