கோவையில் நடந்த கூத்து... ஹெட்போனுடன் வீடியோவை பாருங்க!!
பிற மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டுகளை காட்டிலும், ராலி ரேஸ் சற்று வித்தியாசமானது. இந்த விளையாட்டுப் போட்டிகளில் டிரைவர் மட்டும் இல்லாமல், டிரைவர் சரியான பாதையில் விரைவாக காரை செலுத்துவதற்கு உறுதுணையாக நேவிகேட்டர் என்ற அழைக்கப்படும் வழிகாட்டியும் அந்த காரில் உடன் செல்வார்.
இருவரும் இணைந்து சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே எளிதாக வெற்றி பெறும் வாய்ப்பு உண்டு. இந்தநிலையில், தேசிய ராலி ரேஸ் பந்தயத்தின் ஒரு சுற்று கோவையில் கடந்த மார்ச்சில் நடந்தது.
இதில், ஜேசிடி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான சமீர் தபார் இந்த போட்டியில் தனது சொந்த ஜேசிடி அணி சார்பில் வீரராக களமிறங்கினார். அவருக்கு உறுதுணையாக விவேக் பொன்னுச்சாமி வழிகாட்டியாக இருந்தார். சமீர் தபார் தனது மிட்சுபிஷி எவோ எக்ஸ் காருடன் பங்கேற்றார்.
இந்த நிலையில், போட்டியில் காரில் செல்லும்போது இருவரும் பேசிக் கொண்ட விஷயங்கள் யூ டியூபில் வெளியாகியுள்ளது. வழிகாட்டி விவேக் சொல்லும் யோசனைகளை காதில் வாங்காமல் செயல்படும் சமீர் தபார், அதற்கு விவேக் தவிதவியாய் தவித்து அறிவுரை கூறும் காட்சிகளும் மோட்டார் ஸ்போர்ட் உலகில் பெரும் சுவாரஸ்யமாக மாறியுள்ளது. வீடியோவை ஸ்பீக்கர் அல்லது ஹெட்போனுடன் கேளுங்கள்.
<center><iframe width="600" height="450" src="//www.youtube.com/embed/UtziWbDCNNs" frameborder="0" allowfullscreen></iframe></center>


Click it and Unblock the Notifications








