நிலவில் தரையிறங்கியதும் சந்திரயான் 3 செய்யப்போவது இது தான்! இதுல இந்தியாவுக்கு இவ்வளவு லாபம் இருக்குதா?

இஸ்ரோ வெற்றிகரமாக சந்திரயான் - 3 விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பியுள்ள நிலையில் இது விண்ணில் தரையிறங்கியதும் என்னென்ன செய்யப் போகிறது என்பதை தான் இங்கே பார்க்கப் போகிறோம். பலருக்கும் இது பற்றி தெரியாத நிலையில் இதை தான் இப்பொழுது விரிவாக காணப் போகிறோம்.

இந்தியாவின் பெரும் கனவான சந்திரயான் திட்டத்தில் முக்கிய மைல் கல்லாக இஸ்ரோ என்று சந்திரயான் - 3 விண்கலத்தை விண்ணில் ஏவியுள்ளது. வெற்றிகரமாக ராக்கெட்டில் இருந்து பிரிந்த சந்திரயான் - 3 களம் நிலவை நோக்கி தனது பயணத்தை துவங்கி விட்டது. ஒரு ஆகஸ்ட் மாதம் 23வது 24ஆம் தேதி சந்திரயான் - 3 விண்களம் நிலவில் தரையிறங்க தயாராகிவிடும்.

Chandrayaan 3 After landing plan

தற்போது புரோபல்ஷன் மாடுல் சந்திரயான் - 3 விண்களத்தை நிலவிற்கு எடுத்துச் சென்று வருகிறது. நிலவில் 100 கிலோ மீட்டர் உயரம் வரை இந்த புரோபல்ஷன் மாடுல் செல்லும். அங்கிருந்து புரோபல்ஷன் மாடுல் உள்ளே உள்ள லேண்ட் பிரிந்து வரும். அது ஃப்ரீ ஃபாலாக நிலவை நோக்கி செல்லும். நிலவிலிருந்து 30 கிலோமீட்டர் உயரத்தில் இந்த லேண்டர் வரும்போது இதன் இஞ்சின் ஸ்டார்ட் ஆகிவிடும்.

பின்னர் மெல்ல மெல்ல இந்த லேண்டர் நிலவில் தரையிறங்க துவங்கிவிடும். சாஃப்பிட்டானா லேண்டிங் நடந்து விட்டால் கிட்டத்தட்ட சந்திரயான் 3 திட்டம் வெற்றிகரமான திட்டமாக மாறிவிடும். வெறும் லேண்டிங் மட்டும் செய்தால் போதுமா சந்திரயான் 3 நிலவுக்கு சென்று என்ன செய்யப் போகிறது அதில் அப்படி என்னதான் இருக்கிறது? இதை விரிவாக காணலாம் வாருங்கள்.

Chandrayaan 3 After landing plan

சந்திரயான் 3 நிலவின் தென் துருவத்தில் தான் தரையிறங்க போகிறது. அங்கு சாப்பிடவும் இத்தனை ஆய்வு பணிகளை மேற்கொள்ளும். ஆய்வு பணியை வெறும் ரோவர் மட்டும் மேற்கொள்ளாது லேண்டரில் அதற்கான சில சாதனங்கள் உள்ளது. சந்திராயன் 3 லேண்டரில் மட்டும் மொத்தம் நான்கு விதமான கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.

முதல் கருவி chasTE, இது நிலவில் உள்ள தட்பவெட்ப நிலையை ஆய்வு செய்யும். நிலவில் உள்ள வெப்பநிலை எவ்வளவு? எவ்வளவு வெப்பத்தை கொடுத்தால் நிலவு தாங்கும் ஒவ்வொரு வெப்ப நிலைக்கும் என்ன மாதிரியான ரியாக்ஷன் நடக்கிறது. என்பதை ஆய்வு செய்து அந்த தகவல்களை பூமிக்கு அனுப்பும்.

Chandrayaan 3 After landing plan

இரண்டாவது கருவி rambha இது நிலவின் வெளி மண்டலத்தில் உள்ள வாயு மற்றும் பிளாஸ்மா ஆகியவற்றை ஆய்வு செய்யும். நிலவின் வெளிமண்டலத்தில் என்ன வகையான காற்று இருக்கிறது காற்றில் என்னென்ன வகையான பிளாஸ்மா எல்லாம் கலந்துள்ளன இது மனிதன் சுவாசிக்க ஏற்ற காற்றா இல்லையா என்பதை எல்லாம் ஆய்வு செய்யும்.

அடுத்த கருவி ILSA. இது நிலவில் உள்ள நில அதிர்வுகள் குறித்து ஆய்வுகள் செய்யும். இந்த லேண்டர் தரையிறங்கிய இடத்தை சுற்றி உள்ள பகுதிகளில் ஏதாவது நில அதிர்வுகள் ஏற்படுகிறதா நில அதிர்வுகள் ஏற்பட்டால் என்ன வகையான அதிர்வுகள் ஏற்படுகிறது? அதன் அளவுகள் என்ன? எவ்வளவு நேரம் அந்த அதிர்வுகள் நீடிக்கிறது? உள்ளிட்ட விபரங்களை எல்லாம் சேகரிக்கும்.

Chandrayaan 3 After landing plan

நான்காவது கருவி LRA இந்தக் கருவி நிலவிற்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரத்தை மிகத் துல்லியமாக அளந்து பார்ப்பதற்காக பொருத்தப்பட்டுள்ளது. இது நிலவிலிருந்து பூமி எவ்வளவு தூரம் என்பதை கம்யூனிகேஷன் சிஸ்டம் மூலம் அளந்து பார்க்கும். இதிலிருந்து வெளியாகும் சிக்னல் குறிப்பிட்ட நேரத்திற்கு குறிப்பிட்ட தூரம் வரை பயணிக்கும் என்பதை வைத்து நிலவிலிருந்து அந்த சிக்னல் புறப்பட்டு பூமிக்கு வர எவ்வளவு நேரம் ஆகிறது என்பதை வைத்து தூரம் கணக்கிடப்படும்.

அடுத்தது பிரக்யன் ரோவர்: பிரக்யான் ரோவர் நிலவில் தரையிறங்கிய பின்பு லேண்டர் உள்ளே இருந்து வெளியே வந்து தனது ஆய்வு பணிகளை மேற்கொள்ளும். இந்தப் பிரக்யான் ரோவர் மொத்தம் ஆறு வீல்கள் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஆய்வு செய்வதற்காக இரண்டு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கருவிகளை பற்றி விரிவாக காணலாம்.

முதல் கருவி APXS. அப்படி என்றால் ஆல்ஃபா பார்ட்டிக்கள் எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோமீட்டர். இந்த கருவி எக்ஸ்ரே கதிர்களை வெளியிட்டு நிலவில் உள்ள மண் மற்றும் பாறைகள் குறித்து தகவல்களை சேகரிக்கும். இந்தத் தகவல்கள் நேரடியாக லேண்டனுக்கு தெரிவிக்கப்பட்டு லேண்டர் மூலம் இஸ்ரோவிற்கு கிடைக்கும். இது நிலவில் உள்ள மண்ணில் மெக்னீசியம் , அலுமினியம், சிலிக்கான், பொட்டாசியம், கால்சியம், டைட்டானியம்,இரும்பு சத்து எவ்வளவு உள்ளது என்பதை கண்காணிக்கும்.

இரண்டாவது கருவிLIBS. இதன் விரிவாக்கம் லேசர் இன்டக்டர் பிரேக் டவுன் ஸ்பெக்ட்ரோஸ்கோப் இது நிலவில் உள்ள மினரலாஜிக்கல் காம்போசிஷன் மற்றும் கெமிக்கல் காம்போசிஷன் ஆகியவற்றை குவாலிட்டேட்டிவ் மற்றும் குவான்டிடேட்டிவ் முறையில் ஆய்வுகளை செய்கிறது. இது போக லேண்டரையும் ரோடவை எடுத்து சென்ற புரோபல்சன் மாடுல் நிலவின் நீற்வட்ட பாதையில் நிலை கண்காணிக்கும் செயற்கைகோளாக செயல்படும்.

இந்த செயற்கைகோளில் SHAPEஎன்ற கருவி இருக்கிறது. அது நிலவிலிருந்து பூமியை ஸ்போக்டரல் பாலிமெட்ரிக் மெஷர்மென்ட் ஆய்வுகளை செய்யும்.அந்த தகவல் பூமி குறித்த ஆய்விற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பயன் கிடைக்கும். நிலவில் தரையிறங்கிய லேண்டர் மற்றும் ரோவர் சூரிய வெளிச்சத்தில் இயங்கும் திறன் கொண்டது. இந்த லேண்டர் மற்றும் ரோவர் தரையிறங்கியது முதல் 14 நாட்களுக்கு தொடர்ந்து அங்கே வெளியில் இருக்கும்.

அதனால் தொடர்ந்து 14 நாட்கள் இந்த ரோவர் தனது பணியை நிலவில் செய்து கொண்டே இருக்கும். அந்த தகவலை பூமிக்கு அனுப்பும், அங்கு இருட்டான பின்பு தனது செயல்பாட்டை நிறுத்திவிடும். இதன் பேட்டரி அடுத்த 14 நாட்களுக்கு இதை உயிர்ப்புடன் வைத்திருந்தால் இந்தியாவிற்கு அடுத்து வெளியில் வரும் போது மீண்டும் 14 நாட்கள் ஆய்வு செய்வதற்கு கிடைக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சந்திரயான் 3 திட்டத்தின்படி அதில் வடிவமைக்கப்பட்டுள்ள ரோவர் நிலவில் பல பகுதிகளில் பயணிக்கவுள்ளது. இதனால் அதன் வீலை டிசைன் செய்யும் போது இஸ்ரோவின் லோகோ நிலவில் பதிவும் படி வடிவமைத்துள்ளனர். இதனால் இன்னும் 40 நாட்களில் இஸ்ரோவின் லோகோ நிலவில் பதியவுள்ளது.

Article Published On: Friday, July 14, 2023, 20:11 [IST]
English summary
This is the whole plan of chandrayaan 3 after landing
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X