உலகிலேயே சின்ன கார் இது தான்! வீலே இல்லாமல் அசால்டாக ஓடுகிறது!

வீலே இல்லாமல் கார் ஒன்று ஓடும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பலர் ஆச்சரியமாக இது எப்படி சாத்தியம் எனப் பார்த்து வருகின்றனர். உலகிலேயே சிறிய கார் என இந்த காரின் வீடியோ பகிரப்பட்டு வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

மனித இனத்தின் கண்டுபிடிப்புகளிலேயே மிகச் சிறந்த கண்டு பிடிப்பு வீல் தான். மனிதன் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வேகமாகப் பயணிக்க வீல் என்ற ஒன்று மி முக்கியமான தேவையாக இருக்கிறது. இன்று உலகில் தரையில் ஓடும் அத்தனை விதமான வாகனங்களுக்கும் வீல் மிக அடிப்படைத் தேவையான ஒன்று.

world lowest car viral video

ஆனால் இந்த வீலே இல்லாமல் ஒரு கார் ஓடுகிறது என்று சொன்னால் நம்புவீர்களா? நீங்கள் நம்பவில்லை என்றாலும் அப்படியான ஒரு விஷயம் சமீபத்தில் நிகழ்ந்துள்ளது. carmagheddon என்ற யூடியூப் சேனலை சேர்ந்த இருவர், பீல் இன்ஜினியரிங் கம்பெனிக்காக, வீலே இல்லாமல் காரை தயாரித்துள்ளனர். அந்த வீடியோ தான் தற்போது பவரை கவனத்தை ஈர்த்து வைரலாக பரவி வருகிறது.

வீலே இல்லை என்றால் அவர் வீலை பயன்படுத்தாமல் தயாரிக்கவில்லை. வீல் வெளியில் தெரியாதபடி இந்த காரை வடிவமைத்துள்ளனர். உலகிலேயே சிறிய காரை வடிவமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த காரை வடிவமைக்கத் திட்டமிட்டனர். என்னதான் சின்ன காரை வடிவமைத்தாலும் காரின் வீல் உயரமாக வந்துவிடும். இதனால் வீலை காருக்குள் வைத்தபடி வடிவமைத்துள்ளனர். இந்த காருக்கு பில்பி50 எனப் பெயரிட்டுள்ளனர்.

world lowest car viral video

இதற்காக ஒரு காரின் மேல் பாகத்தை மட்டும் கட் செய்து அதை மட்டும் வைத்து வீலை காருக்குள் இருக்கும்படி செட் செய்துள்ளனர். இந்த காரை ஓட்ட ஸ்டியரிங் எதுவும் கிடையாது. மாறாக காரில் ஜாஸ்ஸ்டிக்கை பயன்படுத்தி கார் செயல்படும்படி வடிவமைத்துள்ளனர். இந்த காருக்குள் ஒருவர் அமர்ந்து செல்வதே கஷ்டம் தான்.

இது மொத்தமே 52.8 இன்ச் நீளம், 39 இன்ச் அகலம் மற்றும் 39.4 இன்ச் உயரம் கொண்டது தான். இந்த காரை தயாரித்தவரே இந்த காருக்குள் கஷ்டப்பட்டு அமர்ந்து செல்லும் படி வீடியோவை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட இந்த வீடியோவில் அவர் இந்த உலகிலேயே சிறிய காரை எப்படி வடிவமைத்தார் என்பதையும் குறிப்பிட்டுள்ளார். இந்த காரை முழுவதும் தயாரித்தவுடன் மக்கள் மத்தியில் இதை ஓட்டியும் காண்பித்துள்ளனர்.

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் 1 மில்லியனிற்கும் அதிகமான பார்வைகளை பெற்றள்ளது. பலர் இந்த காரை வடிவமைத்தவர்களை பாராட்டி வருகின்றனர். இந்த கார் சியான் நிறத்தில் இருந்தது பலரை கண்களை கவரும் வகையில் இருந்தது. இது போன்ற காரை தனக்கும் வடிவமைத்து தரும்படி பலர் கமெண்ட் செய்திருந்தனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார்களில் சிறிய கார்களுக்கு மவுசு இருக்கிறது தான் என்றாலும் இந்த காரை மக்கள் தங்களின் தினந்தோறும் பயன்பாட்டிற்காகப் பயன்படுத்த முடியாது. இந்த கண்டு பிடிப்பு மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். இது மட்டுமல்ல இது கார்கள் மீதான ஆர்வத்தையும், இவர்களின் வித்தியாசமான ஐடியாவையும் காட்டுவதற்காக மட்டுமே பயன்படும்.

More from DriveSpark

Article Published On: Thursday, June 29, 2023, 16:11 [IST]
English summary
This is the worlds lowest car video gone viral here are the full details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+