Just In
- 1 hr ago
டாடாவுக்கு போட்டியாக மஹிந்திரா செய்யப்போகும் அதிரடியான காரியம்! சுதந்திர தினத்தில் சர்ப்ரைஸ் குடுக்க திட்டம்?
- 2 hrs ago
ராயல் என்பீல்டு கிளாசிக் 350-ஐ காட்டிலும் புதிய ஹண்டர் 350 எந்த அளவிற்கு சிறந்தது? ஒற்றுமைகள் & வேற்றுமைகள்...
- 2 hrs ago
கமிஷன் பாத்தே இவ்ளோ சம்பாதிச்சிட்டாரா... சொமேட்டோ சிஇஓ இடத்தில் இருக்கும் மிக விலையுயர்ந்த இரு கார்கள்!
- 3 hrs ago
இளைஞர்களைக் கவரும் குறைந்த விலை ராயல் என்ஃபீல்டு ஹன்டர் 350 பைக் - ரிவியூ
Don't Miss!
- Movies
குஷி, வாலி போல யாராலும் படம் எடுக்க முடியாது.. எஸ்.ஜே.சூர்யாவை பாராட்டிய தயாரிப்பாளர்!
- News
சிதம்பரம் நடராஜர் கோயில் மீதான குற்றச்சாட்டு.. ஆதாரமற்றது என அறநிலையத்துறைக்கு தீட்சிதர்கள் பதில்
- Finance
தங்கம் விலை சரிவு.. இன்று வாங்க சரியான வாய்ப்பு தான்..எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா?
- Technology
அடேங்கப்பா பட்ஜெட் விலையில் இப்படியொரு Redmi 5G போன் வருதா? காத்திருப்போம்.!
- Sports
செஸ் ஒலிம்பியாட்டில் கலக்கிய தமிழக வீரர்கள்.. உலக சாம்பியனாக மாற வாய்ப்பு.. முழு விவரம்
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்க பிரச்சனைனாவே ஓடி ஒழிஞ்சிப்பாங்களாம்... இவங்கள நம்பி சண்டைக்கு போகாதீங்க!
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
விமான இருக்கைகளை இந்த பொசிஷனில் பார்ப்பது மிகவும் அரிது!! எல்லாம் காசை மிச்சப்படுத்த தான்...
சில விமானங்களில் பின்பக்கமாக பார்க்கப்பட்டவாறான இருக்கைகள் இருக்கும். மிகவும் சில விமானங்களில் மட்டுமே பார்க்க முடியும் இந்த இருக்கைகள் எதற்காக? யாருக்காக? என்பது பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

விமானங்களை பற்றிய விஷயங்கள் எப்போதும் நமக்கு சுவாரஸ்யமானவைகளாக விளங்கியுள்ளன. அளவில் பெரிய வாகனங்களை பற்றி படித்தாலே தனி ஆர்வம் இருக்கத்தானே செய்யும். விமானங்கள் அதிகப்பட்சமாக எவ்வளவு உயரத்திற்கு பறக்கின்றன? விமானங்களின் ஜன்னல்கள் ஏன் வட்ட வடிவில் உள்ளன? விமானங்களில் ஏன் மிகவும் குளிர்ச்சியாக உள்ளது? என விமானங்களை பற்றிய பல கேள்விகளுக்கு பதில்களை பார்த்துள்ளோம்.

ஆனால் இருக்கைகள் அமைப்பை பற்றி சற்று குறைவாகவே பார்த்திருக்கிறோம். விமானத்தினுள் இருக்கைகள் அதன் இயக்கத்திற்கு நேர் திசையில் முன்பக்கமாக பார்த்தவாறே இருக்கும் என பலரும் நினைத்து கொண்டிருக்கிறீர்கள். ஆனால் நம் எண்ணத்திற்கு மாற்றாக, சில விமானங்கள் பின்பக்கமாக பார்க்கப்பட்டவாறான இருக்கைகளையும் கொண்டுள்ளன.

இதுகுறித்து 1950களில் இருந்து தற்போதைய மாடர்ன் விமானங்கள் வரையிலானவற்றின் இருக்கை அமைப்பை ஆராய்ச்சி செய்த ஏர்க்ராஃப்ட் சீட் கமிட்டி என்ற நிறுவனம், விமானத்தில் அதன் இயக்கத்திற்கு எதிர் திசையில் அமர்வதும் பாதுகாப்பானதே என்பதை கண்டறிந்ததுடன், பின்பக்கமாக பார்க்கப்பட்டவாறான இருக்கைகளில் அமரும் பயணிகளின் தலை மற்றும் உடற்பகுதி மிகவும் பாதுகாக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

மேலும், முன்பக்கமாக பார்க்கப்பட்டவாறான இருக்கைகளில் அமரும் பயணிகளின் மார்புப்பகுதி குலுக்கலின்போது தொடர்ச்சியாக முன்பக்கமாக சாய்வதாக குறிப்பிடுகின்ற இந்த நிறுவனம், அதுவே பின்பக்கமாக பார்க்கப்பட்டவாறான இருக்கைகளில் அமரும்போது அவ்வாறான பிரச்சனை இல்லை எனவும், இதனாலேயே கார்களில் குழந்தை இருக்கைகள் காரின் இயக்கத்திற்கு எதிர் திசையில் பொருத்தப்படுவதாகவும் கூறியுள்ளது.

இவ்வாறான இருக்கைகளை கொண்ட விமானங்கள் தற்சமயம் குறைவே உள்ளன என்றாலும், முந்தைய காலங்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இருந்தன. ஏன் தற்போதைய மாடர்ன் விமானங்களில் பொருத்தப்படுவதில்லை என்றால், பொதுவாகவே பின்பக்கமாக பார்க்கப்பட்டவாறான இருக்கைகள் அதிக எடையில் உருவாக்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி, மோதலின்போது பயணிகளை அதிக சிரமத்திற்கு இத்தகைய இருக்கைகள் உட்படுத்துகின்றனவாம்.

மேலும், இவ்வாறான இருக்கைகளை பொருத்தினால் குலுக்கலின் போது பயணிகள் தரையில் விழுவதற்கு வாய்ப்புள்ளதாகவும், இதன் காரணமாக அதற்கேற்ப தரைப்பகுதியையும் கூடுதல் சவுகரியமானதாக அமைக்க வேண்டி உள்ளதாகவும் சர்வதேச ஏர்லைன் ஒன்றில் பணியாற்றிய விமானி தெரிவிக்கிறார். இருக்கையின் எடை அதிகமாகினால் விமானத்தின் எடை அதிகமாகும்.

விமானத்தின் எடை அதிகமாகினால் அது உறிஞ்சும் எரிபொருளின் அளவு அதிகமாகும். இதன் காரணமாக ஏர்லைன் அதிக பணத்தை செலவு செய்ய வேண்டி வரும். இதனால் விமான டிக்கெட்களின் விலைகள் உயர்த்தப்படும் - இவ்வாறு ஒன்றை தொட்டு ஒன்று என தற்போதைய விமானங்களில் பின்பக்கமாக பார்க்கப்பட்டவாறான இருக்கைகள் வழங்கப்படாததற்கு காரணங்கள் தொடர்கின்றன.

உலகளவில் பயன்பாட்டில் இருக்கும் எந்தவொரு விமானத்திலும் இத்தகைய இருக்கைகள் இல்லையென கூறிவிட முடியாது. ஏனெனில் ஏற்கனவே கூறியதுபோல், அமெரிக்கன், யுனிடெட், கத்தார் மற்றும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் என மிகவும் சில ஏர்லைன்கள் பின்பக்கமாக பார்க்கப்பட்டவாறான இருக்கைகளை கொண்ட விமானங்களை தற்போதும் பயன்படுத்துகின்றன.

அத்தகைய விமானங்களில் பெரும்பாலான இருக்கைகள் முன்பக்கமாக பார்க்கப்பட்டதாகவே இருக்கும். ஆனால் பிஸ்னஸ் கிளாஸில் பார்த்தோமேயானால், விஐபிகளும், தொழிலதிபர்களும் ஒருவரையொருவர் நேருக்குநேர் பார்த்து பேசி கொள்வதற்கு ஏதுவாக பின்பக்கமாக பார்க்கப்பட்டவாறான இருக்கைகளும் இருக்கும்.

இத்தகைய இருக்கைகள் பெரும்பாலும் இவ்வாறான பயன்பாட்டிற்காக மட்டுமே பயன்படுத்துகின்றனர். ஆனால் இதற்கும் விமான பணிப்பெண்கள் விமானத்தின் இயக்கத்திற்கு எதிர் திசையில் அமர்வதற்கும் எந்த சம்மந்தமும் கிடையாது.

விமான பணிப்பெண்கள் அவ்வாறு அமர்வதற்கு காரணம், பயணிகளை நேரடியாக கண்காணிப்பதற்கும், அவர்களது தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்வதற்காகவுமே ஆகும். பெரும்பாலும் விமான பணிப்பெண்கள் பிஸ்னஸ் கிளாஸிலேயே விமானத்திற்கு பின்பக்கமாக பார்த்தவாறு அமர்வர்.
-
என்ன சொல்றீங்க... விமானங்களுக்குச் சாவியே கிடையாதா? அப்ப எப்படி விமானத்தை ஸ்டார்ட் பண்ணுறாங்க?
-
என்னதான் இருந்தாலும் மாருதி மாருதிதான்... இங்க அவங்கதான் கெத்து... டாடா, ஹூண்டாய் எல்லாம் நெருங்க கூட முடியாது
-
225 எச்பி திறனை வெளியேற்றும் ஆஃப்-ரோடு வாகனம் இந்தியாவில் அறிமுகம்... நீங்க நினைக்கிற விலையில இது கிடைக்காது!