விமானத்தை லேண்டிங் செய்யும்முன் இவ்ளோ விஷயங்கள் பண்ணனுமா!! பைலட் வேலை ரொம்ப கஷ்டம்ப்பா...
பொதுவாக விமானங்கள் லேண்டிங் ஆக வேண்டிய விமான நிலையத்தை அடைந்த பின்பும், உடனடியாக தரையிறங்காமல் வானத்திலேயே சில நிமிடங்களுக்கு சுற்றும். இதற்கான காரணம் என்னவென்று தெரியுமா? வாருங்கள் இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

விமானங்கள், அவற்றின் உருவத்திற்கு ஏற்ப, அவற்றை பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளமானவை உள்ளன. அவற்றை அவ்வப்போது ஒன்றன்பின் ஒன்றாக நமது ட்ரைவ்ஸ்பார்க் தமிழ் செய்திதளத்தில் பார்த்து வருகிறோம். இந்த வகையில் இந்த செய்தியில், விமானங்கள் லேண்டிங்கிற்கு முன்பாக ஏன் வானில் வட்டமிடுகின்றன என்பதை பற்றி பார்க்கலாம்.

தரையிறங்க வேண்டிய ஏர்போர்ட் வந்துவிட்டது, அடுத்து நாம் விமானத்தில் இருந்து கீழிறங்க வேண்டும் என நினைத்து கொண்டிருக்கும்போது விமானம் லேண்டிங் ஆகாமல் வலப்புறமோ அல்லது இடப்புறமோ திரும்பி தொடர்ந்து வானத்தில் வட்டமடித்து கொண்டிருந்தால், முதல்முறையாக விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு சற்று நேரத்தில் பயம் தொண்டை கவ்விவிடும்.

முதல்முறையாக விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு மட்டுமல்ல, அவ்வப்போது விமான பயணம் மேற்கொள்பவர்களில் சிலர் கூட சற்று நேரத்திற்கு என்ன நடக்கிறது என புரியாமல் குழம்பக்கூடும். ஆனால் இதில் நீங்கள் பயப்படும் அளவிற்கு எதுவும் இல்லை. லேண்டிங்கிற்கு முன்பாக விமானங்கள் வானில் வட்டமடிப்பது வழக்கமான ஒன்றுதான்.

வானிலை எவ்வாறு உள்ளது, ரன்வே தரையிறங்குவதற்கு தயார் நிலையில் உள்ளதா, விமான நிலையத்தில் உள்ள மற்ற வாகனங்கள் என்ன செய்கின்றன என்பது உள்ளிட்ட விபரங்களை அறியவே விமானிகள் தொடர்ந்து விமானத்தை வானில் பறக்க வைக்கும் விதமாக லேண்டிங் ஆக உள்ள ஏர்போர்டை சுற்றி வட்டமிடுகின்றனர்.

வானிலையோ அல்லது லேண்டிங் ஆக வேண்டிய விமான நிலையத்தில் சூழல் சரியில்லை எனில், விமானி லேண்டிங்கை ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் கூட ஏற்படலாம். லேண்டிங் ரத்து செய்யப்பட்டால், பயணிகள் பாராசூட் மூலமாக கீழே குதிக்க வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை. லேண்டிங் ரத்து செய்யப்பட வேண்டும் என அறிவிப்பு வெளிவந்த பின்னரும் விமானி தொடர்ந்து விமானத்தை வட்டமடிக்க வைத்து கொண்டிருப்பார்.

ஏனெனில் சில நிமிடங்களில் கூட விமானம் லேண்டிங் ஆகுவதற்கு சூழல் சரியாக அமையலாம். ஆதலால்தான், இறுதிக்கட்ட அறிவிப்பு வெளிவரும் வரையில் விமானம் வானிலேயே சுற்றி கொண்டிருக்கும். ஆனால் ஓர் விமானம் லேண்டிங் ஆகுவதற்கு முன் நீண்ட நேரத்திற்கு வானில் வட்டமடிப்பது மிகவும் அரிதானதே. சில நிமிடங்களிலேயே லேண்டிங்கிற்கான அனுமதி கிடைத்து விமானம் லேண்டிங் ஆகிவிடும்.

ஏனென்றால், ஒரு பேருந்து வட்டமடிப்பதற்கே பெரிய இடம் தேவை. அப்படி இருக்கையில், மிக பெரிய விமானம் வட்டமடித்து கொண்டிருந்தால், அது மற்ற விமானங்களின் டேக்-ஆஃப் & லேண்டிங்கிற்கு இடையூறாக அமையக்கூடும். லேண்டிங் ரத்து செய்யப்பட்டாலும் விமானிக்கு பெரிய அதிர்ச்சியாக இருக்காது. ஏனெனில் அவருக்கு இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறக்கூடும் என்பது பயிற்சிகளின் போதே தெரிந்திருக்கும்.

ஆனால் உட்புறத்தில் அமர்ந்திருக்கும் பயணிகளின் நிலைமை தான் வேறு. லேண்டிங் செய்வதற்கான அனுமதி கிடைக்கும் வரையில் விமானம் ஏன் தரையிறங்கவில்லை என குழம்பி போய் அவர்களுக்கு உள்ளாகவே ஒரு கற்பனையை வளர்த்து கொள்வார்கள். ஒரு குறிப்பிட்ட இடத்தில் தரையிறங்க வேண்டிய விமானத்தின் லேண்டிங் சில காரணங்களால் முற்றிலுமாக ரத்து செய்யப்படுவது ஏற்கனவே கூறியதுபோல் அரிதானதே.

ஆனால் உடனடியாக லேண்டிங்கிற்கு அனுமதி கிடைக்காமல் சில வினாடிகளுக்கு விமானங்கள் வானில் வட்டமடிப்பது ஒவ்வொரு விமான நிலையத்திலும் ஒரு நாளைக்கு குறைந்தப்பட்சம் 1 முறையாவது நடக்கக்கூடிய நிகழ்வாகும். விமான நிலையம் பெரியதாக இருந்தால் இந்த பிரச்சனை வராது என நினைத்துவிட வேண்டாம்.

ஏனெனில் இந்த விஷயத்தில் விமான நிலையத்தின் அளவு முக்கியமானது அல்ல. உலகின் மிக பெரும் விமான நிலையங்களில் கூட இத்தகைய நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன. லேண்டிங் முற்றிலுமாக ரத்து செய்யப்படும் விமானங்கள் பொதுவாக அருகில் உள்ள மற்றொரு விமான நிலையத்தில் தரையிறக்கப்படுகின்றன.


Click it and Unblock the Notifications