காட்டுக்குள்ள திறந்த வெளி ஜீப்ல சஃபாரி போறவங்கள மட்டும் விலங்குகள் தாக்காது ஏன் தெரியுமா?

நாம் பல சந்தர்ப்பங்களில் செய்திகளில் விலங்குகள் மனிதர்களைத் தாக்கும் சம்பவத்தைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். காட்டுப்பகுதியில் உள்ள சாலை வழியாகச் செல்லும் வாகனங்களில் பயணிப்பவர்களை விலங்குகள் தாக்கியிருக்கும். சில நேரம் ஊருக்குள் ஏதாவது விலங்கு நுழைந்து ஊருக்குள் இருப்பவர்களைத் தாக்கும். இப்படியாகத் தாக்குதல்களில் பலர் பலியாகியுள்ளனர். சிலர் காயமடைந்துள்ளனர். வெகு சிலர் மயிரிழையில் உயிர் தப்பியும் உள்ளனர்.

ஆனால் இது எல்லாம் ஆங்காங்கே நடக்கும் சம்பவம் தான் ஆப்ரிக்கா மாதிரியான நாடுகள் ஏன் இந்தியாவில் கூட சில பகுதியில் தேசிய பூங்காக்களில் சஃபாரி என்ற பெயரில் மனிதர்கள் ஒரு பெரிய வாகனத்தில் ஏறி சுற்றிலும் பாதுகாப்பு வசதி கூட இல்லாமல் சிங்கம், புலி போன்ற கொடூரமான வன விலங்குகள் அருகில் கூட செல்லுவார்கள். ஆனால் அப்பொழுதும் அவை காரில் இருப்பவர்களைத் தாக்காமல் இருக்கும்.

காட்டுக்குள்ள திறந்த வெளி ஜீப்ல சஃபாரி போறவங்கள மட்டும் விலங்குகள் தாக்காது ஏன் தெரியுமா?

பலருக்கு இது ஆச்சரியமாக இருக்கும். இது எப்படி வன விலங்குகள் திறந்த வெளி வாகனத்தில் சஃபாரி செல்பவர்கள் அருகில் சென்றாலும் தாக்காமல் இருக்கிறது என்ற சந்தேகம் இருக்கும். இதற்குப் பின்னால் இருக்கும் உளவியல் ரகசியம் அந்த வாகனம் தான். இது குறித்து வைல்டு திங்க் என்ற யூடியூப் சேனலில் ஒரு வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில் சிங்கம், சிறுத்தை, புலி உள்ளிட்ட கொடூரமான வன விலங்குகள் ஏன் சஃபாரி ரக வாகனங்களில் உள்ளவர்களை தாக்குவதில் எனப் பேசுகிறது.

இது கிட்டத்தட்ட உண்மை தான் சஃபாரி செல்லும் வாகனங்கள் திறந்த நிலையிலிருந்தாலும் மிருகங்கள் அதில் உள்ளவர்களைத் தாக்கிய சம்பவம் மிகக் குறைவு தான். இந்த சஃபாரி வாகனங்களில் பயணிப்பவர்கள் 360 டிகிரி பார்க்கும்படி பெரிய பாதுகாப்பு வளையங்கள் அல்லது கண்ணாடி கூண்டுகள் ஏதும் இல்லாமல் திறந்த வெளியில் தான் இருக்கும். சில நேரங்களில் இந்த வாகனங்கள் சிங்கம், புலி போன்ற மிருகங்களுக்கு மிக அருகில் கூட செல்லும்.

இப்படியான வாகனங்களை அந்த மிருகங்கள் தாக்காது. ஆனால் யானை மற்றும் காட்டெருமை போன்ற மிருகங்கள் இந்த வாகனங்களைத் தாக்கும். அதனால் சஃபாரி சேவையை வழங்குபவர்கள் இந்த இரு விலங்கு இருக்கும் பகுதியில் மட்டும் வாகனத்தை நிறுத்தமாட்டார்கள். ஆனால் மற்ற விலங்குகள் இருந்தால் வாகனங்களை நிறுத்திவிடுவார்கள்.

இதற்கான காரணம் என்ற என்றால் சஃபாரி செல்லும் வாகனத்தின் சைஸ் தான். விலங்குகளின் பார்வைக்கு அது ஒரு வாகனம் எனத் தெரியாது. அதுவும் ஒரு விலங்கு என்று தான் தெரியும். அதனால் இந்த விலங்குகள் எல்லாம் தன்னை விடப் பெரிய விலங்குகளை அடித்துச் சாப்பிட யோசிக்கும். அல்லது பயப்படும். அதனால் தன்னை அந்த பெரிய விலங்கு சீண்டாத வரை தானும் அதைச் சீண்ட வேண்டாம் என்று தான் அந்த விலங்குகளுக்குத் தோன்றும்.

ஆனால் யானை, காட்டெருமை போன்ற விலங்களுக்களை விட இந்த சஃபாரி கார் சிறியதாக இருக்கும் என்பதால் அவை இரண்டும் சஃபாரி காரை தாக்குகிறது. விலங்குகளின் இந்த உளவியலைப் புரிந்து கொண்டு தான் சஃபாரி சேவை வழங்குபவர்கள் விலங்குகளுக்கு அருகே வாகனத்தைக் கொண்டு செல்கின்றனர். ஆனால் சஃபாரியை துவங்கும் முன்பே எக்காரணத்தைக் கொண்டும் விலங்குகளைக் காணக் கீழே இறங்கக்கூடாது, தலை, கை கால்களை வெளியே நீட்டக்கூடாது என எச்சரித்து அனுப்புவார்கள்.

சஃபாரி காரிலிருந்து கீழே இறங்கினால் நாம் சிங்கம், புலி போன்ற விலங்குகளை விடச் சிறிய விலங்காக மாறிவிடுவோம். அதனால் அவை நம்மைத் தாக்கி நம்மை இரையாக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால் தான் இப்படியான ஒரு எச்சரிக்கையை முன்னரே செய்கின்றனர். அதேபடி எல்லாம் நேரமும் இப்படியாக இருக்காது. சில நேரங்களில் விலங்குகள் கோபமாக ஆக்ரோஷமாக இருக்கும் போது இப்படியான அமைதியாக இருக்காது.

அந்த நேரத்தில் அதன் மன நிலை பெரிய மிருகத்துடன் சண்டை போடும் மன நிலையில் இருக்கும். இந்த நேரங்களில் சஃபாரி காரை ஓட்டி செல்லும் ஊழியர்கள் காரை ஒரு ஓரமாக நிறுத்திவிடுவார். காரிலிருந்து எந்த சத்தம் வராமல் இருக்கும்படி பார்த்துக்கொள்வார்கள். விலங்குகள் ஆக்ரோஷமாக இருக்கும் போது அதன் இரையைத் துரத்திச் சென்று பிடிக்கும் மன நிலையில் இருக்கும்.

அதனால் விலங்குகள் முன் வேகமாக வாகனத்தை ஓட்ட மாட்டார்கள். அப்படி ஓட்டினால் வாகனம் பிடிபடும் வரை விலங்குகள் வாகனத்தைத் துரத்திக்கொண்டே வரும் என்பதை அந்த தவரை செய்ய மாட்டார்கள். ஆனால் சத்தம் இல்லாமல் ஒரு ஓரமாக வாகனத்தை நிறுத்திவிட்டால் அந்த விலங்கு சிறிது நேரம் வாகனத்தைச் சுற்றிச் சுற்றி வந்துவிட்டுவிட்டு பின்னர் எந்த பலனும் இல்லை எனத் திரும்பச் சென்றுவிடும். இதனால் சஃபாரி செல்பவர்களை மட்டும் விலங்குகள் தாக்காமல் இருப்பதற்கான காரணம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 8, 2023, 12:20 [IST]
English summary
This is why wild animals dont attack people in safari vehicle
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+