சொந்தமாக ஹெலிகாப்டர் தயாரித்த வெல்டிங் பட்டறை உரிமையாளர்!

Written By:

நம் நாட்டில் பறக்கும் வாகனங்களை சொந்தமாக தயாரிக்கும் கனவை நனவாக்கும் முயற்சிகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபத்தில் பழனி அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் பாரா கிளைடர் தயாரித்தது குறித்து செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில், கேரளாவை சேர்ந்த ஒருவர் சொந்தமாக ஹெலிகாப்டர் ஒன்றை உருவாக்கி சாதித்துள்ளார். கூடுதல் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

சொந்தமாக ஹெலிகாப்டர் தயாரித்த வெல்டிங் பட்டறை உரிமையாளர்!

கேரள மாநிலம், கோட்டயம் அருகே உள்ள கஞ்சிரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சதாசிவன்[54]. பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள இவர் அதே பகுதியில் வெல்டிங் பட்டறை ஒன்றை நடத்தி வருகிறார்.

சொந்தமாக ஹெலிகாப்டர் தயாரித்த வெல்டிங் பட்டறை உரிமையாளர்!

இந்த நிலையில், மாணவர்களுக்கு செயல் விளக்கம் செய்து காண்பிப்பதற்காக, ஹெலிகாப்டர் மாதிரி ஒன்றை உருவாக்கி தருமாறு அங்குள்ள தனியார் பள்ளியின் முதல்வர் சதாசிவனிடம் கேட்டுள்ளார். இதற்கு ஒப்புக் கொண்ட சதாசிவனுக்கு திடீரென ஒரு யோசனை உதித்தது.

சொந்தமாக ஹெலிகாப்டர் தயாரித்த வெல்டிங் பட்டறை உரிமையாளர்!

அந்த ஹெலிகாப்டரை மாதிரி மாடலாக இல்லாமல், பறப்பதற்கு ஏதுவான அம்சங்களுடன் உருவாக்கினால் என்ன என்ற எண்ணம் அவருக்கு எழுந்துள்ளது. அதன்படி, அந்த ஹெலிகாப்டரை பறப்பதற்கு தகுதியான அம்சங்களுடன் வடிவமைத்து உள்ளார். தற்போது அந்த தனியார் பள்ளியில் இந்த ஹெலிகாப்டர் பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கிறது.

சொந்தமாக ஹெலிகாப்டர் தயாரித்த வெல்டிங் பட்டறை உரிமையாளர்!

இந்த ஹெலிகாப்டரை 4 ஆண்டுகள் அயராத முயற்சியில் சதாசிவன் உருவாக்கி உள்ளார். இந்த ஹெலிகாப்டரில் மாருதி 800 காரின் எஞ்சினை பொருத்தி இருப்பதாக சதாசிவன் தெரிவித்துள்ளார். உட்புறத்தில் இரும்பு பாகங்களும், வெளிப்புறத்தில் அலுமினிய பாகங்களும் பயன்படுத்தி இருக்கிறார்.

சொந்தமாக ஹெலிகாப்டர் தயாரித்த வெல்டிங் பட்டறை உரிமையாளர்!

இதில், வேடிக்கையான விஷயம் ஆட்டோரிக்ஷாவின் முன்பக்க கண்ணாடியை வாங்கி இந்த ஹெலிகாப்டரில் விண்ட்ஷீல்டாக பொருத்தி இருக்கிறார் சதாசிவன். இந்த ஹெலிகாப்டர் பறப்பதற்கு உண்டான அனைத்து தகுதிகளையும் பெற்றிருப்பதாக கூறியிருக்கும் அவர், பறக்கவிட்டு சோதனை செய்வதற்கான அனுமதி கோரி விண்ணப்பித்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சொந்தமாக ஹெலிகாப்டர் தயாரித்த வெல்டிங் பட்டறை உரிமையாளர்!

இன்னும் ஒரு மாதத்தில் இந்த ஹெலிகாப்டரை சோதனை ஓட்டம் நடத்தும் திட்டத்துடன் அனுமதி பெறுவதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் சதாசிவன். கஞ்சிரப்பள்ளியில் உள்ள பள்ளிக்கூட மைதானத்தில் பறக்கவிட்டு சோதனை செய்யவும் திட்டமிட்டு இருக்கிறார்.

சொந்தமாக ஹெலிகாப்டர் தயாரித்த வெல்டிங் பட்டறை உரிமையாளர்!

மேலும், ஹெலிகாப்டர் மாதிரியை செய்யச் சொல்லி கேட்ட அதே பள்ளியில்தான் சதாசிவனின் மகளும் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பத்தாம் வகுப்பு வரை படித்து, தற்போது சுயமாக ஹெலிகாப்டர் தயாரித்து காட்டி இருக்கும் சதாசிவனை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Read in Tamil: This Kerala Welder Built Own Helicopter.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark