நண்டுபோல நகரும் மாருதி சுஸுகி ஜிப்ஸி.. இந்த மாதிரி காரை வாங்கி போட்ட ரிவர்ஸ் எடுக்கும்போது பிரச்னையே இருக்காது

நண்டு நகரும் வாகனங்கள் இப்போது வேண்டுமானால் அதிசயமாக தென்படலாம். ஆனால், விரைவில் இந்த வாகனங்கள் தற்போது பயன்பாட்டில் இருக்கும் வாகனங்களைப் போல அவை மிகவும் சாதாரணமாக மாற இருக்கின்றன. இதற்கு வித்திடும் விதமாக உலக புகழ்பெற்ற ஜெனரல் மோட்டார்ஸ் அதன் ஹம்மர் காரின் மின்சார பதிப்பை நண்டை போல நகரும் வாகனமாக வடிவமைத்து இருக்கின்றது.

முன்னோக்கி மற்றும் பின்னோக்கி நகர்வதைப் போல இந்த கார் பக்கவாட்டிலும் சர்வ சாதாரணமாக நகரும். இத்தகைய வசதியுடனே வருங்காலத்திற்கான ஹம்மரை ஜெனரல் மோட்டார்ஸ் வடிவமைத்து இருக்கின்றது. இந்த நிறுவனம் மட்டுமில்லைங்க ஹூண்டாய் நிறுவனம் இதே வசதிக் கொண்ட காரை வடிவமைத்து இருக்கின்றது.

Gypsy crab walk

ஐயோனிக் 5 இவி-க்கே இந்த வசதியை ஹூண்டாய் நிறுவனம் கொடுத்திருக்கின்றது. தன்னுடைய இந்த நண்டு போல் நகரும் தொழில்நுட்பத்திற்கு நிறுவனம் இ-கார்னர் சிஸ்டம் எனும் பெயரை வைத்திருக்கின்றது. ஆனால், இந்த அம்சம் கொண்ட ஒரு கார் மாடல் கூட விற்பனையில் இல்லை.

மேலும், நண்டு போல் நகரும் வசதிக் கொண்ட கார்கள் விற்பனைக்கு வரும் இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே மாருதி சுஸுகியின் ஜிப்ஸி காரில் நண்டு போல நகரும் வசதி வழங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது மாருதி சுஸுகி நிறுவனத்தால் வழங்கப்பட்ட அம்சம் அல்ல என்பது குறிப்பிடத்தகுந்தது. கார் மாடிஃபிகேஷன் நிறுவனம் ஒன்றால் வழங்கப்பட்ட அம்சமே அது ஆகும். ஆஃப்-ரோடை சமாளிக்கும் நோக்கிலேயே இந்த காருக்கு இத்தகைய அம்சத்தை அவர்கள் வழங்கி இருக்கின்றனர். இதுதவிர, இன்னும் பல அம்சங்கள் மாருதி சுஸுகி ஜிம்னியில் வழங்கப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

கோட்6 கோவா மற்றும் மேவ்லான்கர்ஸ் எனும் நிறுவனங்கள் வாயிலாகவே ஜிம்னி மாடிஃபை செய்யப்பட்டு இருக்கின்றது. மாடிஃபிகேஷனின் ஒரு பகுதியாக 1.6 லிட்டர் மோட்டார் இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது பலினோவில் இருந்து பெறப்பட்ட எஞ்சின் ஆகும். இத்துடன், இதன் டோர்களும் மாற்றப்பட்டு இருக்கின்றன.

இந்த டோர் மெட்டல் ஷீட்டால் தயார் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், பக்கெட் இருக்கை, ராக் ஸ்லைடர்கள், அன்டர் பாடி ஸ்கிட் பிளேட், 31 அங்குல கஸ்டம் ஸ்டீல் ரிம் உள்ளிட்ட அம்சங்களும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, இந்த காரை 2 அங்குலம் கூடுதல் உயரத்திற்கு மாடிஃபிகேஷன் நிறுவனங்கள் உயர்த்தி இருக்கின்றன.

மேலும், எந்த மாதிரியான சாலையாக சமாளிக்கும் வசதிக் கொண்ட டயர்கள், இதன் ரியர் வீலையும் கன்ட்ரோல் செய்யும் வசதி என ஏகப்பட்ட அம்சங்கள் ஜிப்ஸியில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இவற்றுடனேயே நண்டை போல நகரும் வசதி வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுவே இந்த காரின் மிக முக்கியமான ஸ்பெஷலாகக் காட்சியளிக்கின்றது.

ஒரு வேளை இந்த காரால் முன்னோக்கியோ அல்லது பின்னோக்கியோ நகர முடியவில்லை என்றால் பக்கவாட்டை நோக்கி பயணித்துக் கொள்ள முடியும். இத்தகைய சூப்பரான வசதிக் கொண்டதே நண்டுபோல் நகரும் வசதி ஆகும். இந்த அம்சங்களை பெற்றிருப்பதால் அந்த மாருதி ஜிம்னியின் தரம் மேலும் உயர்ந்திருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த காலங்களில் தானாக இயங்கும் கார்களே பலருக்கு அதிசயமாக தோன்றியது. ஆனால், இப்போது அமெரிக்கா போன்ற உலக நாடுகள் சிலவற்றில் ஆளே இல்லாமல் இயங்கும் வாகனங்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. இந்தியாவிலும் எதிர்காலத்தில் ஓட்டுநர் தேவைப்படா வாகனங்கள் பயன்பாட்டிற்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதைப்போலவே, வரும் காலத்தில் இந்த நண்டு போல் நகரும் வாகனங்களும் வழக்கமான வாகனங்களில் ஒன்றாக மாறும் சூழல் உருவாகும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, December 23, 2023, 5:00 [IST]
English summary
This maruti gypsy can move like crab
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+