10 லட்சம் கிமீ ஓடிய பிறகும் ஷோரூம் கண்டிஷனில் உள்ள இன்னோவா! நேத்துதான் வாங்கன மாதிரி மெயின்டெயின் பண்றாங்க!

இந்தியாவில் டொயோட்டா கார்களுக்கு (Toyota Cars) என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. அதிலும் குறிப்பாக பழைய டொயோட்டா இன்னோவா (Toyota Innova) என்றால் சொல்லவே வேண்டாம். பழைய டொயோட்டா இன்னோவா கிடைத்தால் வாங்கி விட வேண்டும் என்ற எண்ணம் இன்றளவும் பலரிடம் காணப்படுகிறது. பழைய டொயோட்டா இன்னோவா நம்பகத்தன்மை வாய்ந்த கார் என்பதுதான் இதற்கு காரணம். இந்திய சந்தையை பொறுத்தவரை டொயோட்டா குவாலிஸ் (Toyota Qualis) காருக்கு மாற்றாக வந்ததுதான், டொயோட்டா இன்னோவா.

கடந்த 2005ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவில் டொயோட்டா இன்னோவா கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போதில் இருந்து, கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் வரை, இந்திய சந்தையில் டொயோட்டா இன்னோவா காரின் முதல் தலைமுறை மாடல் விற்பனை செய்யப்பட்டது.

This Old Toyota Innova Has Run 1 Million Kilometres

அதற்கு பிறகுதான் தற்போது விற்பனையில் இருந்து வரும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta) எல்லாம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கவே செய்கிறது. அதை மறுக்க முடியாது.

ஆனால் பழைய டொயோட்டா இன்னோவா தனி ரகம். இன்றளவும் இந்திய சாலைகளில், ஷோரூம் கண்டிஷனில் பராமரிக்கப்படும் பழைய டொயோட்டா இன்னோவா கார்களை நீங்கள் அதிகளவில் பார்க்கலாம். பல லட்சம் கிலோ மீட்டர்கள் கடந்த பிறகும், ஏராளமான பழைய டொயோட்டா இன்னோவா கார்கள் இன்றளவும் எவ்விதமான பிரச்னையும் இல்லாமல் ஓடி கொண்டுள்ளன.

Toyota Innova Interior

இதை நிரூபிக்கும் வகையிலான வீடியோ (Video) ஒன்று, யூடியூப் (YouTube) தளத்தில் தற்போது பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில், 1 மில்லியன் (10 லட்சம்) கிலோ மீட்டர்களை கடந்த பிறகும் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் பழைய டொயோட்டா இன்னோவா காரை பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த டொயோட்டா இன்னோவா காரின் உரிமையாளரான சதார், தனது 'ஒனர்ஷிப்' அனுபவங்களையும் இந்த வீடியோவில் பகிர்ந்துள்ளார். இவர் கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர் ஆவார். எனவே இந்த வீடியோவில் மலையாள மொழியில் பேசியுள்ளனர். இருப்பினும் இந்த வீடியோவில் பேசப்பட்டுள்ள விஷயங்களின் சுருக்கமான தமிழ் மொழி பெயர்ப்பு பின்வருமாறு:

நாம் இங்கே பேசி கொண்டுள்ள டொயோட்டா இன்னோவா காரின் உரிமையாளரான சதார், டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். அவரிடம் இந்த டொயோட்டா இன்னோவா தவிர, டொயோட்டா எட்டியோஸ் (Toyota Etios) மற்றும் ஃபோர்ஸ் டிராவலர் (Force Traveller) ஆகிய 2 வாகனங்களும் உள்ளன.

இந்த அனைத்து வாகனங்களையும் அவர் நன்றாக பராமரித்து வருகிறார். இருப்பினும் இதில் டொயோட்டா இன்னோவா மட்டும் தனித்து தெரிகிறது. அந்த கார் 10 லட்சம் கிலோ மீட்டர்களை கடந்திருப்பதுதான் இதற்கு காரணம். இன்ஜின் மட்டுமல்லாது, இந்த டொயோட்டா இன்னோவாவின் வெளிப்புறம் மற்றும் உட்புறம் என அனைத்தும் இன்னமும் நன்றாக உள்ளன.

முதல் 7 லட்சம் கிலோ மீட்டர்கள் வரை டொயோட்டா ஷோரூமிலேயேதான், சதார் இந்த இன்னோவா காரை சர்வீஸ் செய்து வந்துள்ளார். ஆனால் அதற்கு பிறகு லோக்கல் மெக்கானிக் ஷாப்பில் சர்வீஸ் செய்வதை வழக்கமாக்கி கொண்டுள்ளார். அது டொயோட்டாவின் முன்னாள் டெக்னீசியன் மூலம் நடத்தப்படும் மெக்கானிக் ஷாப் ஆகும்.

தற்போதெல்லாம் முன்னணி நிறுவனங்களில் பணியாற்றிய டெக்னீசியன்கள் பலர், சொந்தமாக மெக்கானிக் ஷாப் ஆரம்பிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அங்கு சர்வீஸ் செய்தால், ஓரளவிற்கு பணத்தை சேமிக்க முடியும். பணம் சேமிக்கப்படுகிறது என்பதற்காக, தரத்தில் எவ்விதமான சமரசத்தையும் நாம் செய்து கொள்ள வேண்டிய தேவையில்லை.

ஷோரூம் அளவிற்கு அவர்களும் காரை நன்றாகவே சர்வீஸ் செய்கின்றனர். இந்த டொயோட்டா இன்னோவா காரை பொறுத்தவரை, ஒவ்வொரு 10 ஆயிரம் கிலோ மீட்டருக்கும் ஒரு முறை சர்வீஸ் செய்யப்பட்டுள்ளது. ஆனால் பாகங்களை மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்ட சமயங்களில் எல்லாம், ஒரிஜினல் டொயோட்டா ஸ்பேர் பார்ட்ஸ்கள்தான் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த டொயோட்டா இன்னோவா காரில் பிரேக் பேடுகள் 1 லட்சம் கிலோ மீட்டர் வரை உழைத்துள்ளன. அதே நேரத்தில் டயர்கள் 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் கிலோ மீட்டர் வரை உழைத்துள்ளன. அதற்கு பிறகு அவை மாற்றப்பட்டுள்ளன. இந்த டொயோட்டா இன்னோவா கார் இன்னமும் சிறப்பாக உழைத்து கொண்டுள்ளது.

எனவே இதற்கு அடுத்தபடியாகவும் ஒரு டொயோட்டா தயாரிப்பையே வாங்குவதற்கு சதார் திட்டமிட்டுள்ளார். அனேகமாக அவரது அடுத்த கார் புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவாக இருக்கலாம். கூடிய விரைவில் அவர் புத்தம் புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரை வாங்குவதற்கு நமது வாழ்த்துக்கள்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: உண்மையை சொல்ல வேண்டும் என்றால், இந்த டொயோட்டா இன்னோவா 10 லட்சம் கிலோ மீட்டர்கள் ஓடியிருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஏனெனில் இதற்கு முன்பாகவே நிறைய டொயோட்டா இன்னோவா கார்கள் 10 லட்சம் கிலோ மீட்டர்கள் கடந்த செய்தியை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வாசகர்களுக்கு வழங்கியுள்ளது.

இருப்பினும் தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோ, பழைய டொயோட்டா இன்னோவா கார்கள் எந்த அளவிற்கு நீடித்து உழைக்கும்? என்பதை நிரூபிப்பதற்கான ஒரு கூடுதல் ஆதாரமாக பார்க்கப்படுகிறது. சர்வீஸை மட்டும் சரியாக மேற்கொண்டு வந்தால், டொயோட்டா இன்னோவா கார்கள் இன்னும் அதிக காலத்திற்கு உழைக்கும்.

More from DriveSpark

Article Published On: Monday, December 23, 2024, 12:16 [IST]
English summary
This old toyota innova has run 1 million kilometres video know all details here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+