சும்மா கண் துடைப்புக்காக நடத்துறாங்க! ஓட்ட தெரியாதவனுக்கு லைசென்ஸ் கொடுக்குறாங்க! நிபுணர்கள் எச்சரிக்கை!

மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஓட்டுநர் லைசென்ஸ் வாங்குவது எளிமையாக இருப்பதாகவும். இதனால் சாலை விபத்துகள் அதிகமாக இருப்பதாகவும் தற்போது புதிய செய்தி ஒன்று கிளம்பியுள்ளது. இதைப் பற்றி விரிவாகக் காணலாம் வாருங்கள்.

இந்தியா முழுவதும் பொதுமக்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கும் பொறுப்பு மாநில அரசுக்கு இருக்கிறது. இவர்கள் போக்குவரத்துத் துறை மூலம் மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி ஓட்டுநர் உரிமங்களை வழங்கி வருகின்றனர். ஓட்டுநர் உரிமம் வழங்க ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான நடைமுறை செயல்பாட்டில் உள்ளது. அதற்கான சோதனை மத்திய அரசின் வழிகாட்டுதலிலிருந்தாலும் செயல்பாட்டில் இது இருக்கிறதா என்பது மாநிலத்திற்கு மாநிலம் மட்டுமல்ல ஒவ்வொரு போக்குவரத்துத் துறை அலுவலகத்திற்கு அலுவலகம் மாறுபடுகிறது.

Driving license

இந்நிலையில் இந்தியாவிலேயே ஓட்டுநர் உரிமம் வழங்குவதில் அதிகமான சக்ஸஸ் ரேட் கொண்ட மாநிலம் என்றால் மஹாராஷ்டிரா மாநிலம் என்று சொல்லலாம். இங்கு ஆண்டிற்கு 32.04 லட்சம் மக்கள் ஓட்டுநர் உரிமத்திற்காக விண்ணப்பிக்கின்றனர். அதில் 97.24 சதவீத மக்களுக்கு விண்ணப்பம் வழங்கப்படுகிறது. வெறும் 2.4 சதவீத மக்கள் தான் ஓட்டுநர் உரிம சோதனையில் தோல்வியடைந்துள்ளனர். அதில் 0.36 சதவீத மக்கள் தான் மீண்டும் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்காமலிருந்துள்ளது.

இவ்வளவு அதிகமான சக்ஸஸ் ஆபத்தானதாக இருக்கும்.சாலையில் விபத்துகள் அதிகரிக்கக் காரணமாக மாறிவிடும் என நிபுணர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். மேலும் மஹாராஷ்டிரா மாநிலத்தில் 50 போக்குவரத்துத் துறை அலுவலகங்கள் இருக்கிறது அதில் 14 அலுவலகங்களில் தோல்வியடைபவர்களின்
எண்ணிக்கை 1 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதாகவும் 6 போக்குவரத்துத் துறை அலுவலகங்களில் மட்டுமே 6 சதவீதத்திற்கும் அதிகமான தோல்வி ரேட் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Driving license

அதே நேரத்தில் நிபுணர்கள் கூறும் போது மஹாராஷ்டிராவில் அதிகமான நபர்கள் எப்படி இந்த சோதனையில் வெற்றி பெறுகிறார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் இவ்வளவு நபர்கள் வெற்றி பெற்றால் எப்படி மஹாராஷ்டிரா மாநிலத்தில் அதிகமான விபத்துக்கள் நடக்கிறது எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கான விதிமுறைகள் மேம்படுத்தப்பட வேண்டும். ஓட்டுநர் உரிம சோதனைகளை மேலும் கடினமாக்க வேண்டும். திறனுள்ள டிரைவர்களுக்கு மட்டுமே ஓட்டுநர் உரிமத்தை வழங்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போக்குவரத்துத் துறை அலுவலகங்களில் நடக்கும் சோதனைகள் பெரும்பாலும் பெயர்க்கும் நடக்கும் சோதனையாக நடப்பதாகப் புகார் கூறியுள்ளனர்.

Driving license

இதனால் தகுதியில்லாத டிரைவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ளனர். இதனால் தான் மஹாராஷ்டிராவில் அதிக வாகன விபத்துகள் நடப்பதாகவும், நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது மஹாராஷ்டிரா மாநில அரசுக்கு அறிக்கையாக வழங்கப்பட்டுள்ளது. இதன் பின் மாநில அரசு இது குறித்து நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் கடந்த 2022ம் ஆண்டு மொத்தம் வந்த 18.80 லட்சம் பயிற்சி ஓட்டுநர் உரிமத்திற்கு வந்த விண்ணப்பத்தில் 9.23 சதவீதம் அதாவது 1.73 லட்சம் விண்ணப்பம் தோல்வியடைந்துள்ளது. சாலை விபத்துக்களைப் பொருத்தவரை கடந்த 2022ம் ஆண்டு மட்டும் மொத்தம் 14,883 பேர் சாலை விபத்தில் மரணமடைந்துள்ளனர். 27,218 பேர் காயமடைந்துள்ளனர். மொத்தம் 33,069 சாலை விபத்துக்கள் நடந்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹாராஷ்டிரா மாநிலம் மட்டுமல்ல இந்தியாவிலுள்ள அத்தனை மாநிலங்களிலும் உள்ள சில போக்குவரத்துத் துறை அலுவலகங்களில் இப்படியாக ஓட்டுநர் உரிமம் வழங்குவதில் மெத்தனமான போக்கு இருக்கிறது. இது சாலை விபத்துக்கள் அதிகரிக்க முக்கியமான காரணமாக இருக்கும். இதனால் அரசு இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

Article Published On: Monday, May 8, 2023, 10:05 [IST]
English summary
This state in india have a high success rate in granting driving license in full detail
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X