சூப்பர்... இன்ஜின் வேலை எதுவுமே செய்யாமல் இந்த டாடா கார் எவ்வளவு கிலோ மீட்டர் ஓடியுள்ளது தெரியுமா?

இன்ஜின் வேலை எதுவுமே செய்யாமல் டாடா இன்டிகா கார் ஒன்று அதிக கிலோ மீட்டர்கள் ஓடியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சூப்பர்... இன்ஜின் வேலை எதுவுமே செய்யாமல் இந்த டாடா கார் எவ்வளவு கிலோ மீட்டர் ஓடியுள்ளது தெரியுமா?

இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை வரலாற்றில் மிக முக்கியமான கார்களில் ஒன்று டாடா இன்டிகா. இதுதான் இந்தியாவின் முதல் டீசல் பாசஞ்சர் வாகனம் (Passenger Vehicle). இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட உடனேயே டாடா இன்டிகா கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் நன்கு பிரபலம் அடைய தொடங்கி விட்டது.

சூப்பர்... இன்ஜின் வேலை எதுவுமே செய்யாமல் இந்த டாடா கார் எவ்வளவு கிலோ மீட்டர் ஓடியுள்ளது தெரியுமா?

திறன் மிக்க டீசல் இன்ஜின் மற்றும் விசாலமான கேபின் உள்ளிட்ட காரணங்களால்தான் டாடா இன்டிகா காரை வாடிக்கையாளர்களுக்கு பிடித்து போனது. இந்த சூழலில் 10 வயதான டாடா இன்டிகா கார் ஒன்று, 5.85 லட்சம் கிலோ மீட்டர்களை நிறைவு செய்த செய்தியை உங்களுக்காக கொண்டு வந்துள்ளோம். இந்த மைல்கல்லை எட்டியதற்காக அந்த காரின் உரிமையாளர் ஹைசன் சாலக்குடி டாடாவால் பாராட்டப்பட்டுள்ளார்.

சூப்பர்... இன்ஜின் வேலை எதுவுமே செய்யாமல் இந்த டாடா கார் எவ்வளவு கிலோ மீட்டர் ஓடியுள்ளது தெரியுமா?

இந்த டாடா இன்டிகா டிஎல்எஸ், கடந்த 2009ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி கேரளாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கார் ஒரு ஆண்டுக்கு சராசரியாக 60 ஆயிரம் கிலோ மீட்டர்கள் ஓடியுள்ளது. ஆவணங்களின் அடிப்படையில் பார்த்தால் இந்த காரின் உரிமையாளர் பெயர் வரதராஜன் என்பது தெரியவருகிறது. அவர் இந்த காரை அருமையாக பராமரித்துள்ளார்.

சூப்பர்... இன்ஜின் வேலை எதுவுமே செய்யாமல் இந்த டாடா கார் எவ்வளவு கிலோ மீட்டர் ஓடியுள்ளது தெரியுமா?

இது தொடர்பாக Vandibranthanmar என்ற பேஸ்புக் குழுவில் அப்துல் பாஷித் என்பவரால் பதிவிடப்பட்டுள்ளது. அவரது பதிவின் படி பார்த்தால், இன்ஜினில் எந்தவிதமான வேலையும் செய்யாமல், இந்த டாடா இன்டிகா கார் 5.85 லட்சம் கிலோ மீட்டர்கள் ஓடியுள்ளது. ஆனால் க்ளட்ச் அசெம்பிளி உள்ளிட்ட இதர பாகங்கள் குறித்த தகவல்கள் எதுவும் தெரியவில்லை.

சூப்பர்... இன்ஜின் வேலை எதுவுமே செய்யாமல் இந்த டாடா கார் எவ்வளவு கிலோ மீட்டர் ஓடியுள்ளது தெரியுமா?

பொதுவாக பெட்ரோல் இன்ஜின்களை காட்டிலும் டீசல் இன்ஜின்களின் ஆயுட்காலம் அதிகம். அவற்றை முறையாக பராமரித்தால், ஆயுட்காலம் முழுமைக்கும் சிறப்பாக செயல்படும். ஆனால் டீசல் கார் ஒன்று இந்த மைல்கல்லை எட்டுவது இது முதல் முறை கிடையாது. கடந்த காலங்களில் மஹிந்திரா ஸ்கார்பியோ உள்ளிட்ட டீசல் கார்களும் 5 லட்சம் கிலோ மீட்டர்களை கடந்துள்ளன.

சூப்பர்... இன்ஜின் வேலை எதுவுமே செய்யாமல் இந்த டாடா கார் எவ்வளவு கிலோ மீட்டர் ஓடியுள்ளது தெரியுமா?

அவ்வளவு ஏன்? 10 லட்சம் கிலோ மீட்டர்களுக்கு நெருக்கமாக வந்த டீசல் வாகனங்களும் கூட இருக்கின்றன. இதனிடையே 5.85 லட்சம் கிலோ மீட்டர்கள் ஓடிய டாடா இன்டிகா கார் எதற்காக பயன்படுத்தப்படுகிறது? என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால் இந்த கார் ஓடிய கிலோ மீட்டர்களை வைத்து பார்த்தால், இது டிராவல்ஸ் நிறுவனத்திற்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என யூகிக்க முடிகிறது.

சூப்பர்... இன்ஜின் வேலை எதுவுமே செய்யாமல் இந்த டாடா கார் எவ்வளவு கிலோ மீட்டர் ஓடியுள்ளது தெரியுமா?

உங்கள் காரையும் கூட நீங்கள் இவ்வளவு அதிகமான கிலோ மீட்டர்கள் ஓட்ட முடியும். அதற்கு தேவையான டிப்ஸ்களை உங்களுக்கு வழங்குகிறோம். எப்போதும் ஸ்டார்ட் செய்த உடன் காரை ஓட்டாதீர்கள். கொஞ்ச நேரம் வார்ம் அப் செய்யுங்கள். இது மிகவும் அவசியமானது. காரை ஸ்டார்ட் செய்த பின் சுமார் ஒரு நிமிடம் ஐடிலிங்கில் விடலாம். அதன்பிறகு புறப்படுங்கள்.

சூப்பர்... இன்ஜின் வேலை எதுவுமே செய்யாமல் இந்த டாடா கார் எவ்வளவு கிலோ மீட்டர் ஓடியுள்ளது தெரியுமா?

அதேபோல் காரை சர்வீஸ் செய்வதை எப்போதும் தள்ளி போடதீர்கள். குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தவறாமல் சர்வீஸ் செய்து விடுங்கள். அதேபோல் காரை கனிவாக ஓட்டுங்கள். நீங்கள் கரடுமுரடாக காரை ஓட்டுபவர் என்றால், இன்றே அப்பழக்கத்தை விட்டு விடுங்கள். நீங்கள் காரை ஓட்டும் சாலையை பொறுத்து ஒவ்வொரு சில ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கு ஒரு முறை வீல் அலைன்மெண்ட் செய்து கொள்ளுங்கள்.

சூப்பர்... இன்ஜின் வேலை எதுவுமே செய்யாமல் இந்த டாடா கார் எவ்வளவு கிலோ மீட்டர் ஓடியுள்ளது தெரியுமா?

அத்துடன் ஒன்றிரண்டு கிலோ மீட்டர்கள் மட்டும் பயணிப்பதற்காக எல்லாம் காரை எடுக்காதீர்கள். அதிக தூரம் பயணிக்க வேண்டியதாக இருந்தால் மட்டும் காரை எடுங்கள். இதை எல்லாம் நீங்கள் கடைபிடித்தால் உங்கள் காரும் பல லட்சம் கிலோ மீட்டர்களுக்கு ஓடும். உங்கள் காரோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள் காரோ இது போல் பல லட்சம் கிலோ மீட்டர்கள் ஓடியிருந்தால், கமெண்ட் பாக்ஸ் மூலம் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

Image Courtesy: Abdul Basith/Facebook

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
This Tata Indica Diesel Covered 5.85 Lakh Kilometres. Read in Tamil
Story first published: Monday, September 2, 2019, 12:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X