எந்த ஊரு எம்எல்ஏ-ங்க இவரு.. அம்பானிக்கே டஃப் கொடுக்கிற அளவுக்கு இவ்ளோ சொகுசு கார்களை வச்சிருக்காரு!

இந்தியாவின் இளம் சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரே ரோஹித் மைனம்பள்ளி. தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த இவர் மேதக் தொகுதியின் எம்எல்ஏ-வாக உள்ளார். இவரே அம்பானிக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு மிகவும் ஆடம்பரமான வாழ்க்கையைக் கொண்டிருக்கின்றார். இதற்கு சான்றாக அவரிடத்தில் ஏகப்பட்ட ஆடம்பர வகை விலை உயர்ந்த கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.

அம்பானியுடன் ஒப்பிடும் அளவிற்கு அப்படி என்ன மாதிரியான கார் மாடல்களை அவர் வைத்திருக்கின்றார் என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதாவது, மேதக் சட்டமன்ற உறுப்பினர் ரோஹித் மைனம்பள்ளி பயன்படுத்திக் கொண்டிருக்கும் விலை உயர்ந்த கார் மாடல்கள் என்னென்ன? அவற்றின் விலை மற்றும் சிறப்புகள் என்ன என்பது பற்றியே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

Youngest mla sport car

மெர்சிடிஸ் மேபேக் எஸ்560 (Maybach S560): ரோஹித் மைனம்பள்ளி வைத்திருக்கும் மிக மிக விலை உயர்ந்த கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். இந்தியாவில் குறிப்பிட்ட சில பணக்கார்களே இந்த காரை பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதாவது, அம்பானி மற்றும் கோடியில் புரளும் பெரும் நடிகர்கள் போன்றோரே இந்த காரை பயன்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், மிகுந்த செல்வாக்கைக் கொண்டிருக்கும் இளம் எம்எல்ஏ-வான ரோஹித் மைனம்பள்ளியும் இந்த காரை பயன்படுத்தி வருகின்றார். இந்த ஒற்றை காரின் விலை மட்டுமே ரூ. 2.5 கோடி ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. பிரீமியம் அம்சங்களும், சொகுசு அம்சங்களும் நிரம்பிய ஓர் கார் மாடலே இதுவாகும்.

Youngest mla benz

இதனால்தான் இந்திய பணக்காரர்களின் பிரியமான கார் மாடலாக மெர்சிடிஸ் மேபேக் எஸ்560 காட்சியளிக்கின்றது. இந்த காரில் 4.0 லிட்டர் வி8 பை-டர்போ எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 469 பிஎச்பி பவரையும், 700 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஃபெராரி 488 ஸ்பைடர் (Ferrari 488 Spider): இந்த காரையும் இந்தியாவில் குறிப்பிட்ட சிலரே பயன்படுத்தி வருகின்றனர். ரோஹித் மைனம்பள்ளி சிவப்பு நிற ஃபெராரி 488 ஸ்பைடரையே பயன்படுத்தி வருகின்றார். இந்த காரின் விலை ரூ.4.4கோடிக்கும் அதிகம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த காரில் 3.9லிட்டர் வி8 எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 661பிஎச்பி பவரையும், 760என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

Youngest mla ford and sport car

மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி (G63 AMG): இப்போது இந்த காரின் புதிய தலைமுறை வெர்ஷனே இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் பழைய தலைமுறை வெர்ஷனையே ரோஹித் மைனம்பள்ளி பயன்படுத்தி வருகின்றார். இந்த காரின் விலை ரூ. 2 கோடி ஆகும். இதில் 5.5 விட்டர் வி8 பை-டர்போ பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 544 பிஎச்பி மற்றும் 760 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.

ஜிஎம்சி சைரா (GMC Sierra): இந்த காரை பிரத்யேகமாக ரோஹித் மைனம்பள்ளி இறக்குமதி செய்து பயன்படுத்தி வருகின்றார். பிரமாண்ட தோற்றம் கொண்ட ஓர் கார் மாடலே இதுவாகும். இந்த காரை அவர் இந்தியாவில் இறக்குமதி செய்ய எவ்வளவு செலவிட்டார் என்பது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை. ஜிஎம்சி சைரா டெனெலி 2500 எச்டி காரையே அவர் பயன்படுத்தி வருகின்றார்.

Youngest mla gwagon

இதில், 445 பிஎஸ் மற்றும் 1220 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடிய 6.6 லிட்டர் வி8 டீசல் மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. ரோஹித் மைனம்பள்ளியைப் போலவே இந்த காரை இந்தியாவில் இன்னும் சில செல்வந்தர்கள் பிரத்யேகமாக இறக்குமதி செய்து பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. அமெரிக்கா போன்ற முன்னணி உலக நாடுகளில் இந்த காருக்கு நல்ல வரவேற்பு உண்டு என்பது குறிப்பிடத்தகுந்தது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎஸ் 350 சிடிஐ (Mercedes GL 350 CDI): இந்த காரின் விலை ரூ. 1கோடிக்கும் அதிகம் ஆகும். இது ஓர் எஸ்யூவி கார் என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், இது ஓர் டீசல் எஞ்சின் கொண்ட காரும்கூட. 3.0 லிட்டர் வி6 டர்போ டீசல் மோட்டார் மோட்டாரே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 258 பிஎச்பி மற்றும் 619 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

Youngest mla hummer car

ஹம்மர் எச்2 (Hummer H2): இது ஓர் எஸ்யூவி ரக கார் மாடலாகும். ஆனால், இந்த கார் இப்போது இந்தியாவில் விற்பனையில் இல்லை. இருப்பினும், இன்னும் பல செல்வந்தர்களிடத்தில் இந்த ஆடம்பர கார் பயன்பாட்டில் இருக்கின்றது. பார்ப்பதற்கு லாரி போன்று பிரமாண்ட தோற்றம் கொண்டிருக்கும் இந்த கார், அதன் தோற்றத்தைப் போலவே சொகசு அம்சங்களையும் பாரிய அளவில் இந்த கார் கொண்டிருக்கின்றது.

இத்தகைய ஓர் கார் மாடலையே ரோஹித் மைனம்பள்ளி பயன்படுத்தி வருகின்றது. இந்த ஒற்றை காரின் மதிப்பு ரூ. 80 லட்சத்திற்கும் அதிகம் ஆகும். இதில் 3.7 லிட்டர் பெட்ரோல் எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. கருப்பு நிறத்தினாலான ஹம்மர் எச்2 காரையே இவர் பயன்படுத்தி வருகின்றார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்த கார் மாடல்கள் மட்டுமின்றி ரோஹித் மைனம்பள்ளியிடத்தில் டொயோட்டா வெல்ஃபையர், ஃபோர்டு என்டீயோவர், கியா கார்னிவல் மற்றும் லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் வோக் போன்ற சொகுசு கார்களும் பயன்பாட்டில் இருக்கின்றன. இவர் அரசியல்வாதி மட்டுமல்ல மிக சிறந்த தொழிலதிபராகவும் தெலங்கானாவில் வலம் வந்துக் கொண்டிருக்கின்றார். எனவேதான் இவரிடத்தில் இத்தனை ஆடம்பரமான விலை உயர்ந்த கார்கள் அவரிடத்தில் பயன்பாட்டில் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Saturday, March 16, 2024, 5:00 [IST]
English summary
This telangana mla has surpassed ambani in owning luxury cars
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X