இந்த பைக்கோட விலையை கேட்டதும் ஆன்னு வாயை பிளந்த மக்கள்... அம்பானியே இதை வாங்க 100 தடவ யோசிப்பாரு!

சூப்பர் பைக்குகள் என்றாலே, அதிவேகம்தான் நமக்கு முதலில் நினைவிற்கு வரும். ஆனால் மிதமான வேகத்தில் உல்லாசமாக பயணம் செய்யக்கூடிய ஒரு சில சூப்பர் பைக்குகளும் இருக்கவே செய்கின்றன. அப்படிப்பட்ட பைக்குகளில் ஒன்றுதான் ஹோண்டா கோல்டுவிங் (Honda Goldwing). இதை டூரிங் மோட்டார்சைக்கிள்களின் (Touring Motorcycles) உச்சம் என்று கூட சொல்லலாம். இயக்குனர்கள் ஷங்கர் மற்றும் ராஜமௌலி படங்களை போன்று பிரம்மாண்டமான தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள 2024 ஹோண்டா கோல்டுவிங் பைக்கை, பிரபலமான பெண் யூடியூபர் ஒருவர் சமீபத்தில் 'ரிவியூ' செய்துள்ளார்.

பைக் வித் கேர்ள் என்ற யூடியூப் சேனலில், இது தொடர்பான வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இது புத்தம் புதிய 2024 ஹோண்டா கோல்டுவிங் பைக் என அந்த பெண் யூடியூபர் கூறுகிறார். இந்த 2024 ஹோண்டா கோல்டுவிங் பைக்கின் விலை 55 லட்ச ரூபாய் என அந்த யூடியூபர் குறிப்பிட்டுள்ளார்.

This Touring Motorcycle Costlier Than Many Cars

இது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் நிறைய கார்களின் விலையை விட மிகவும் அதிகம்! தோற்றம் மற்றும் விலையை போலவே, இந்த பைக்கின் பவர் அவுட்புட்டும் பிரம்மாண்டமாக உள்ளது. அதாவது இந்த பைக்கின் இன்ஜின், அதிகபட்சமாக 126 பிஹெச்பி பவர் மற்றும் 170 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் இந்த பைக்கின் எடை கிட்டத்தட்ட 400 கிலோவாக உள்ளது. ஒரு பைக் இந்த அளவிற்கு அதிக எடையுடன் இருப்பது சாதாரண விஷயம் அல்ல. எனினும் இந்த பைக்கை ஓட்டுவது என்பது அவ்வளவு கடினமான காரியம் கிடையாது என ரிவியூ செய்த பெண் யூடியூபர் குறிப்பிட்டுள்ளார்.

2024 Honda Goldwing

ஒரு சில கார்களை விட அதிக விலை கொண்ட இந்த 2024 ஹோண்டா கோல்டுவிங் பைக்கில், கார்களை போன்று, ட்யூயல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் கார்களை போன்று இந்த பைக்கில் ஏர்பேக்கும் உள்ளது. பைக்குகளில் ஏர்பேக் என்பது உண்மையிலேயே நிறைய பேருக்கு தெரியாத ஒரு விஷயம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: 2024 ஹோண்டா கோல்டுவிங் பைக்கில் சாலையில் சென்றால், நிச்சயமாக அனைவரும் வாயை பிளந்து பார்ப்பார்கள் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. இந்த வீடியோவிலேயே, மிக பிரம்மாண்டமான 2024 ஹோண்டா கோல்டுவிங் பைக்கை நிறைய பேர் ஆச்சரியத்துடன் பார்ப்பதை நம்மால் காண முடிகிறது.

பைக்குகளில் அடிக்கடி தொலை தூர பயணங்களை சுற்றுலாவாக மேற்கொள்பவர்களுக்கு, 2024 ஹோண்டா கோல்டுவிங் பைக் மிகவும் ஏற்றதாக இருக்கும். அதற்கு ஏற்ற வகையில் அதிகப்படியான ஸ்டோரேஜ் வசதியுடன், 2024 ஹோண்டா கோல்டுவிங் பைக் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இங்கே உங்கள் லக்கேஜ்களை தாராளமாக வைத்து கொள்ள முடியும்.

இந்தியாவில் பெரும் செல்வந்தர்கள் மற்றும் பைக் ஆர்வலர்கள் பலரிடம், ஹோண்டா கோல்டுவிங் இருக்கிறது. கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதியினர் கூட, கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு ஹோண்டா கோல்டுவிங் பைக்கை வாங்கியிருந்தனர் என்பதும், அந்த செய்தியை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வாசகர்களுக்கு வழங்கியதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Saturday, June 22, 2024, 17:45 [IST]
English summary
This touring motorcycle costlier than many cars viral video
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+