20 வருஷம் ஆகியும் சூப்பர் கண்டிஷன்! இந்த குவாலிஸ் எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிஞ்சா அசந்திருவீங்க

வாங்கி 20 வருடங்கள் ஆன பிறகும் சூப்பர் கண்டிஷனில் உள்ள டொயோட்டா குவாலிஸ் கார் ஒன்று, பிரம்மிக்க வைக்கும் கிலோ மீட்டர்கள் ஓடியுள்ளது.

20 வருஷம் ஆகியும் சூப்பர் கண்டிஷன்! இந்த குவாலிஸ் எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிஞ்சா அசந்திருவீங்க

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நம்பகத்தன்மை மிகுந்த கார் நிறுவனங்களில் ஒன்றாக டொயோட்டா திகழ்கிறது. டொயோட்டா நிறுவனத்தின் குவாலிஸ், இன்னோவா, இன்னோவா க்ரிஸ்ட்டா, பார்ச்சூனர் என அனைத்து மாடல்களுமே வாடிக்கையாளர்கள் மத்தியில், நற்பெயரையும், நம்பிக்கையையும் சம்பாதித்துள்ளன.

20 வருஷம் ஆகியும் சூப்பர் கண்டிஷன்! இந்த குவாலிஸ் எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிஞ்சா அசந்திருவீங்க

இதில், குவாலிஸ் காரை டொயோட்டா நிறுவனம் கடந்த 2000ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இது மிகவும் பிரபலமான எம்பிவி ரக கார் ஆகும். அந்த காலகட்டத்தில், மஹிந்திரா பொலிரோ மற்றும் டாடா சுமோ உள்ளிட்ட மாடல்களுடன் டொயோட்டா குவாலிஸ் போட்டியிட்டு வந்தது. ஆனால் டொயோட்டா நிறுவனம் கடந்த 2004ம் ஆண்டு குவாலிஸ் காரை விற்பனையில் இருந்து விலக்கியது.

20 வருஷம் ஆகியும் சூப்பர் கண்டிஷன்! இந்த குவாலிஸ் எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிஞ்சா அசந்திருவீங்க

அதற்கு பதிலாக இன்னோவா காரை டொயோட்டா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. எனினும் இவ்வளவு ஆண்டுகளை கடந்த பிறகும் கூட, இன்றும் டொயோட்டா குவாலிஸ் காருக்கென்று நல்ல பெயர் இருக்கிறது. இன்னமும் கூட ஒரு சிலர் குவாலிஸ் காரை நல்ல கண்டிஷனில் பராமரித்து வருவதை காண முடிகிறது.

20 வருஷம் ஆகியும் சூப்பர் கண்டிஷன்! இந்த குவாலிஸ் எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிஞ்சா அசந்திருவீங்க

இந்த வரிசையில் 8 லட்சம் கிலோ மீட்டர்களுக்கும் மேல் ஓடிய டொயோட்டா குவாலிஸ் கார் பற்றிய தகவல் நமக்கு தெரியவந்துள்ளது. இவ்வளவு கிலோ மீட்டர்கள் ஓடிய பின்பும் கூட, அந்த கார் இன்னமும் நன்றாக பயணித்து கொண்டுள்ளது. அந்த காரின் உரிமையாளர் தனது தினசரி பயன்பாட்டிற்கு, அதனை பயன்படுத்தி வருகிறார்.

20 வருஷம் ஆகியும் சூப்பர் கண்டிஷன்! இந்த குவாலிஸ் எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிஞ்சா அசந்திருவீங்க

இது தொடர்பான வீடியோவை நிப்பான் டொயோட்டா வெளியிட்டுள்ளது. நிப்பான் டொயோட்டா என்பது கேரளாவில் உள்ள டொயோட்டா டீலர்ஷிப்களில் ஒன்றாகும். இந்த வீடியோவில் நாம் பார்க்கும் குவாலிஸ், கடந்த 2000ம் ஆண்டில் வாங்கப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் புதிதாக திறக்கப்பட்டிருந்த நிப்பான் டொயோட்டா டீலரின் முதல் வாடிக்கையாளர்களில் இந்த குவாலிஸின் உரிமையாளரும் ஒருவர்.

20 வருஷம் ஆகியும் சூப்பர் கண்டிஷன்! இந்த குவாலிஸ் எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிஞ்சா அசந்திருவீங்க

இது முதல் தலைமுறை டொயோட்டா குவாலிஸ் கார் ஆகும். அதன் உரிமையாளர் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, அந்த காரை வாங்கியுள்ளார். இவ்வளவு ஆண்டுகளை கடந்த பிறகும் கூட, அந்த கார் சற்றுதான் பொலிவிழந்துள்ளது. ஒரு சில இடங்களில் பெயிண்ட் மங்க தொடங்கியுள்ளது. இதை தவிர்த்து விட்டு பார்த்தால், இந்த காரின் மற்ற அனைத்து பாகங்களும் இன்னும் சிறப்பாக இயங்குகின்றன.

20 வருஷம் ஆகியும் சூப்பர் கண்டிஷன்! இந்த குவாலிஸ் எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிஞ்சா அசந்திருவீங்க

20 ஆண்டுகளை கடந்த வாகனம் என்பதை வைத்து பார்க்கையில், இது மிகப்பெரிய சாதனைதான். இதுதவிர கடந்த 20 ஆண்டுகளில், இந்த கார் ஓடிய கிலோ மீட்டர்கள் மிகவும் அதிகம் என்பதுதான், இந்த காரை பற்றி நாங்கள் இங்கே பேசி கொண்டிருப்பதற்கு முக்கியமான காரணம். இந்த டொயோட்டா குவாலிஸ் கார் 8.22 லட்சம் கிலோ மீட்டர்களுக்கும் அதிகமாக ஓடியுள்ளது.

20 வருஷம் ஆகியும் சூப்பர் கண்டிஷன்! இந்த குவாலிஸ் எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிஞ்சா அசந்திருவீங்க

இது மிகப்பெரிய சாதனை என்பதில் சந்தேகமே இல்லை. அதுவும் இந்த காருக்கு சாதாரணமான பராமரிப்பு மட்டுமே செய்யப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில் 8.22 லட்சம் கிலோ மீட்டர்களுக்கும் அதிகம் என்பது உண்மையிலேயே சாதனைதான். இன்னமும் கூட இந்த டொயோட்டா குவாலிஸ் காரை தினசரி பயன்பாடுகளுக்கு அதன் உரிமையாளர் பயன்படுத்தி வருகிறார்.

20 வருஷம் ஆகியும் சூப்பர் கண்டிஷன்! இந்த குவாலிஸ் எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிஞ்சா அசந்திருவீங்க

டொயோட்டா குவாலிஸ் காரின் ரைடு குவாலிட்டி, சௌகரியம் ஆகியவற்றை அவர் மிகவும் விரும்புகிறார். அவர் இந்த காரின் சர்வீஸ் பற்றியும் கூட பேசியுள்ளார். இந்த காருக்கான அனைத்து சர்வீஸ் பணிகளும், அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டரில்தான் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்னமும் கூட இந்த கார் நீண்ட ஆயுளுக்கு நீடித்து உழைக்கும் என்பது போல் தெரிகிறது.

20 வருஷம் ஆகியும் சூப்பர் கண்டிஷன்! இந்த குவாலிஸ் எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிஞ்சா அசந்திருவீங்க

ஒட்டுமொத்தத்தில் இந்த காரின் சிறப்பான செயல்பாடுகளாலும், விற்பனைக்கு பிந்தைய சிறப்பான சர்வீஸ் காரணமாகவும் அதன் உரிமையாளர் ஈர்க்கப்பட்டுள்ளார். டொயோட்டா குவாலிஸ் காரில், 2.4 லிட்டர் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 75 பிஎஸ் பவரையும், 151 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

அதே சமயத்தில் டொயோட்டா குவாலிஸ் காரில் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் கூட வழங்கப்பட்டது. டீசல், பெட்ரோல் என இரண்டு இன்ஜின்களுமே 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸை ஸ்டாண்டர்டாக பெற்றுள்ளன. டொயோட்டா குவாலிஸ் காரில் 8 பேர் வரை சௌகரியமாக பயணம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
This Toyota Qualis Has Done Over 8 Lakh KMS - Video. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X