கடின நிலப்பரப்பிலும் பயணிக்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

மடக்கி எடுத்துச் செல்லும் வகையிலான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமாகி உள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.

By Arun

பேட்டரியால் இயங்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தற்போது புதுப்புது தொழில்நுட்பங்களுடனும், பல்வேறு சிறப்பு அம்சங்களுடனனும் பரிணாம வளர்ச்சி பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஈ-ஸ்கூட்டர் ஒன்று மடித்து வைத்து இழுத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மடித்து வைக்கக்கூடிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

சீனாவைச் சேர்ந்த் ‘மெர்கான் வீல்ஸ்' நிறுவனம், தயாரித்துள்ள புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 3 சக்கரங்கள் கொண்டதாகும். கவர்ச்சிகரமான டிசைனில், குறைந்த எடையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டர்களில்

மற்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் அதிகம் இடம்பெறாத முக்கிய அம்சம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மடித்து வைக்கக்கூடிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் முதல் முறையாக தயாரிக்கப்பட்ட காலகட்டத்தில் அவை மென்மையான தரையில் பயணிக்கும் வகையில்தான் தயாரிக்கப்பட்டன. இவை பெரும்பாலும் கரடுமுரடான சாலைகளில் பயணிக்க தகுதியற்றவையாக இருந்தன.

மடித்து வைக்கக்கூடிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

இதற்கு முக்கிய காரணம் அவைகளில் சஸ்பென்ஷன் இல்லாமல் இருப்பதே ஆகும். சஸ்பென்ஷன் இல்லாமல் இவற்றை சாலைகளில் ஓட்டும் போது அவை தாக்குப்பிடிப்பதில்லை. விரைவிலேயே உடைந்துவிடுகின்றன.

மடித்து வைக்கக்கூடிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

மெர்கான் வீல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ஈ-ஸ்கூட்டர் ‘டிரான்ஸ்போர்டு' என பெயரிடப்பட்டுள்ளது. இதில் 3 சக்கரங்கள் உள்ளது. நான்கு சக்கர வாகனங்களில் உள்ளதைப் போன்ற உயர்ரக சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை மடக்கி எடுத்துச் செல்லலாம் என்பது கூடுதல் சிறப்பாகும்.

மடித்து வைக்கக்கூடிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

நின்று கொண்டு பயணிக்கும் வகையில் உள்ள இந்த ஈ-ஸ்கூட்டரில் அகலமான இடவசதி உள்ளது. இதன் முன்புறம் இரண்டு சக்கரங்களும், பின்புறம் ஒரு சக்கரமும் கொடுக்கப்பட்டுள்ளது.

மடித்து வைக்கக்கூடிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

முன்பக்கம் 10 இஞ்ச் டயர்களும், பின்பக்க டயர் 8 இஞ்ச் கொண்டதாகவும் உள்ளது. இதில் க்ரூஸ் கண்ட்ரோல் வசதி கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

மடித்து வைக்கக்கூடிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

இந்த டிரான்ஸ்போர்டு ஈ-ஸ்கூட்டரில் 500 வாட், 48 வோல்ட் ஹப் மோட்டார் கொடுக்கப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக மணிக்கு 35 கிமீ வேகத்தில் செல்லும். இதில் அழகான எல்ஈடி முகப்பு விளக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

மடித்து வைக்கக்கூடிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

ஒரு முறை சார்ஜ் செய்தால் இதில் 40 கிமீ பயணிக்கலாம். இதில் சக்தி வாய்ந்த 8.6 ஏஹச் எல்ஜி செம் லித்தியம் - அயன் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. முழுமையாக சார்ஜ் செய்ய 6 மணி நேரம் எடுத்துக்கொள்கிறது.

மடித்து வைக்கக்கூடிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

இந்த ஸ்கூட்டரின்மற்றொரு முக்கிய அம்சம், இதனை இரண்டாக மடக்கும் வசதி. இதனை இரண்டாக மடக்கினால் ரோலிங் டிராலி போன்று இதனை இழுத்துச் செல்லலாம். எளிதாக இருப்பதால் இதனை எங்கு வேண்டுமென்றாலும் எடுத்துச் செல்லலாம்.

மடித்து வைக்கக்கூடிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

இந்த டிரான்ஸ்போர்டு ஈ-ஸ்கூட்டரை அதிகபட்சமாக 100 கிலோ எடைகொண்டவர்கள் வரை ஓட்டலாம். அலுமினியம் கொண்டு இதன் ஃபிரேம் உருவாக்கப்பட்டுள்ளதால் வலிமைமிக்கதாக உள்ளது.

டிரான்ஸ்போர்டின் எடை 21 கிலோவாகும். இதன் ஹேண்டில் பாரில் வேகத்தை காட்டும் எல்ஈடி ஸ்கிரீன் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் காலால் கட்டுப்படுத்தும் எலக்ட்ரிக் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஈ-ஸ்கூட்டரின் விலை 60,000 முதல் 80,000 என்ற விலையில் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
3 wheel E-scooter with suspension introduced
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X