ஆக்ஷன் மொபில் வாகனம்... உலகம் அழியும் தருவாயிலும் கடைசி நம்பிக்கை!

Written By:

இயற்கை பேரழிவுகளின்போது மனிதர்களை காப்பதற்கான விசேஷ வாகனம் ஒன்றை ஆக்ஷன் மொபில் தயாரித்து வருகிறது. பார்க்க ராணுவ வாகனம் போல தோற்றமளிக்கும் இந்த வாகனத்தில் ஏராளமான விசேஷ வசதிகள் இருந்தன.

இதனை தனிநபர் பயன்பாடு மட்டுமின்றி, மீட்புப் பணிகளுக்கும் ஏற்றதாக இருக்கிறது. இந்த விசேஷ வாகனத்தின் வியக்க வைக்கும் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

 ஆக்ஷன் மொபில் வாகனம்... உலகம் அழியும் தருவாயிலும் கடைசி நம்பிக்கை!

இயற்கை பேரிடரின்போது வீடுகளை இழந்துவிட்டாலும், இந்த வாகனத்தை வீடு போல பயன்படுத்திக் கொள்ளலாம். அவ்வளவு வசதிகளை கொண்டுள்ளது. உட்புறத்தில் மிக தாராளமான இடவசதி கொண்டதாக இருக்கிறது. அதாவது, பொருட்களை வைப்பதற்கான அலமாரிகள் மற்றும் தங்குவதற்கான சோபா கம் பெட் உள்ளிட்டவை மிகச் சிறப்பாக இருக்கிறது.

 ஆக்ஷன் மொபில் வாகனம்... உலகம் அழியும் தருவாயிலும் கடைசி நம்பிக்கை!

இந்த வாகனத்தில் 2,400 லிட்டர் குடி தண்ணீரை நிரப்பி வைத்துக் கொள்வதற்கான வாட்டர் டேங்க் உள்ளது. மேலும், உணவுப் பொருட்களை வைத்துக் கொள்வதற்கான சிறிய அறைகளும், 66 கிலோ கேஸ் சிலிண்டரும் உள்ளது. எனவே, உணவுப் பிரச்னை இருக்காது.

 ஆக்ஷன் மொபில் வாகனம்... உலகம் அழியும் தருவாயிலும் கடைசி நம்பிக்கை!

இந்த வாகனத்தில் விலை உயர்ந்த பொருட்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்கான பெட்டக அறைகளும் உண்டு. அத்துடன், சைக்கிள், இருசக்கர வாகனங்களையும் இந்த வாகனத்தில் பாதுகாப்பாக எடுத்துச் செல்ல முடியும்.

ஆக்ஷன் மொபில் வாகனம்... உலகம் அழியும் தருவாயிலும் கடைசி நம்பிக்கை!

இந்த வாகனத்தின் கேபினை தேவைப்படும்போது விரிவுப்படுத்தி உட்புறத்தில் இடவசதியை மிக தாராளமாக பெற முடியும். கூடுதல் படுக்கை வசதியும் உள்ளது. சமையலறை, குளியலறை வசதிகளும் உள்ளன.

 ஆக்ஷன் மொபில் வாகனம்... உலகம் அழியும் தருவாயிலும் கடைசி நம்பிக்கை!

இயற்கை பேரிடர் சமயங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டாலும் கவலைப்பட வேண்டாம். இந்த வாகனத்தில் இருக்கும் பேட்டரியை சூரிய மின்சக்தி மூலமாக சார்ஜ் செய்து கொள்ள முடியும். இதற்காக, வாகனத்தின் மேற்புறத்தில் சூரிய மின் தகடுகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

 ஆக்ஷன் மொபில் வாகனம்... உலகம் அழியும் தருவாயிலும் கடைசி நம்பிக்கை!

மேன் நிறுவனத்தின் டிரக் சேஸியில்தான் இந்த வாகனம் கட்டமைக்கப்பட்டு இருக்கறது. இந்த வாகனம் 12 மீட்டர் நீளமும், 3 மீட்டர் அகலமும், 4 மீட்டர் உயரமும் கொண்டதாக இருக்கிறது. இதில், 600 குதிரைசக்தி திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த வாகனத்தில் 4 ஆக்சில்களில் 8 சக்கரங்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

 ஆக்ஷன் மொபில் வாகனம்... உலகம் அழியும் தருவாயிலும் கடைசி நம்பிக்கை!

இரவு நேரங்களில் எளிதாக செலுத்துவதற்கு தோதுவாக கூடுதல் ஹெட்லைட்டுகள் மற்றும் வாகனத்தை சுற்றிலும் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இது மீட்புப் பணியின்போது மிகுந்த உதவியாக இருக்கும்.

 ஆக்ஷன் மொபில் வாகனம்... உலகம் அழியும் தருவாயிலும் கடைசி நம்பிக்கை!

தற்போது இந்த வாகனமானது அரபு நாடுகளில் பாலைவனப் பகுதிகளில் சாகச சுற்றுலாச் செல்பவர்கள் இதனை மோட்டார் இல்லமாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும், இது அனைத்து சாலைகளிலும் செல்லத்தக்க அம்சங்களையும் பெற்றிருக்கிறது.

 ஆக்ஷன் மொபில் வாகனம்... உலகம் அழியும் தருவாயிலும் கடைசி நம்பிக்கை!

இந்த வாகனம் மிக வலுவான கட்டமைப்பு கொண்டது. எனவே, நிலச்சரிவு போன்ற சமயங்களில் கூட உள்ளிருப்பவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கும்.

 ஆக்ஷன் மொபில் வாகனம்... உலகம் அழியும் தருவாயிலும் கடைசி நம்பிக்கை!

இந்த வாகனத்தில் மீட்புப் பணிகளின்போது தேவைப்படும் ரம்பம், சுத்தி உள்ளிட்ட பல வகையான ஆயுதங்களும் வைக்கப்பட்டுள்ளன. எனவே, இயற்கை பேரிடர் சமயங்களில் வீடுகளை இழந்தாலும் இந்த வாகனத்தை தற்காலிக இல்லமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
This vehicle will save you when natural disaster time.
Story first published: Friday, December 9, 2016, 11:36 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos