ரியல் ஹீரோ... சொந்த பணம் 15 லட்ச ரூபாயை செலவு செய்து இந்தியாவையே கண் கலங்க வைத்த இளைஞர்

இளைஞர் ஒருவர் தனது சொந்த பணம் 15 லட்ச ரூபாயை செலவு செய்து இந்தியாவையே கண் கலங்க வைத்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சொந்த பணம் 15 லட்ச ரூபாயை செலவு செய்து இந்தியாவையே கண் கலங்க வைத்த இளைஞர்... ஏன் தெரியுமா?

இந்தியாவின் மிக முக்கியமான சாலைகளில் ஒன்று மும்பை-புனே எக்ஸ்பிரஸ்வே. கடந்த 2002ம் ஆண்டுதான் மும்பை-புனே எக்ஸ்பிரஸ்வே கட்டமைக்கப்பட்டது. இந்தியாவில் முதல் முறையாக அமைக்கப்பட்ட 6-லேன் கான்கிரீட் ஹை-ஸ்பீடு எக்ஸ்பிரஸ்வே இதுதான். மும்பை-புனே எக்ஸ்பிரஸ்வே சாலை மொத்தம் 94.5 கிலோ மீட்டர் நீளமுடையது.

சொந்த பணம் 15 லட்ச ரூபாயை செலவு செய்து இந்தியாவையே கண் கலங்க வைத்த இளைஞர்... ஏன் தெரியுமா?

மஹாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பை மற்றும் புனே நகரங்களை, மும்பை-புனே எக்ஸ்பிரஸ்வே இணைக்கிறது. எனவேதான் இந்தியாவின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த சாலைகளில் ஒன்றாக இது உள்ளது. அதே சமயம் இந்தியாவின் மிக அபாயகரமான சாலைகளில் ஒன்றாகவும் மும்பை-புனே எக்ஸ்பிரஸ்வே பார்க்கப்படுகிறது.

சொந்த பணம் 15 லட்ச ரூபாயை செலவு செய்து இந்தியாவையே கண் கலங்க வைத்த இளைஞர்... ஏன் தெரியுமா?

மும்பை-புனே எக்ஸ்பிரஸ்வே மலைகளின் ஊடாக பயணிக்கிறது. எனவே இதன் சிக்கலான சாலை அமைப்பு அதிகப்படியான விபத்துக்களுக்கு வழிவகுத்து வந்தது. ஆனால் மும்பை-புனே எக்ஸ்பிரஸ்வே சாலையில் தற்போது விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 38 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு காரணமானவர் தன்மாய் பெண்ட்சே எனும் இளைஞர்.

சொந்த பணம் 15 லட்ச ரூபாயை செலவு செய்து இந்தியாவையே கண் கலங்க வைத்த இளைஞர்... ஏன் தெரியுமா?

மும்பை-புனே எக்ஸ்பிரஸ்வே சாலையை வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பானதாக மாற்றியே தீர வேண்டும் என்ற குறிக்கோளுடன் தன்மாய் பெண்ட்சே செயல்பட்டு கொண்டுள்ளார். இதற்காக கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் 15 லட்ச ரூபாய்க்கும் அதிகமான தொகையை அவர் செலவு செய்துள்ளார். இவை அனைத்தும் தன்மாய் பெண்ட்சே அவரது பாக்கெட்டில் இருந்து அள்ளி கொடுத்த அவரது சொந்த பணம்.

சொந்த பணம் 15 லட்ச ரூபாயை செலவு செய்து இந்தியாவையே கண் கலங்க வைத்த இளைஞர்... ஏன் தெரியுமா?

மும்பை-புனே எக்ஸ்பிரஸ்வே சாலையை பாதுகாப்பானதாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் கடந்த 2012ம் ஆண்டில்தான் தன்மாய் பெண்ட்சேவிற்கு உருவானது. ஒரு விபத்துதான் இதற்கு காரணம். 2012ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி அந்த கோர விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் மொத்தம் மூன்று பேர் பலியானார்கள். இதில், தன்மாய் பெண்ட்சேவின் சகோதரர் மற்றும் சசோதரர் மகன் ஆகியோரும் அடக்கம்.

சொந்த பணம் 15 லட்ச ரூபாயை செலவு செய்து இந்தியாவையே கண் கலங்க வைத்த இளைஞர்... ஏன் தெரியுமா?

தன்மாய் பெண்ட்சேவின் சகோதரர் பெயர் அக்சய் பெண்ட்சே. இவர் மஹாராஷ்டிரா மாநிலம் முழுவதும் மிக பிரபலமாக திகழ்ந்த நடிகர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2012ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதியன்று தனது 2 வயது மகன் மற்றும் மற்றொரு நடிகரான ஆனந்த் அப்யன்கர் ஆகியோருடன் மும்பை-புனே எக்ஸ்பிரஸ்வே சாலையில் அக்சய் பெண்ட்சே பயணித்து கொண்டிருந்தார்.

சொந்த பணம் 15 லட்ச ரூபாயை செலவு செய்து இந்தியாவையே கண் கலங்க வைத்த இளைஞர்... ஏன் தெரியுமா?

அவர்கள் பயணம் செய்த வாகனம் புனேவில் இருந்து மும்பை நோக்கி சென்று கொண்டிருந்தது. உரஸ் சுங்க சாவடிக்கு அருகே அவர்களது வாகனம் வந்தபோதுதான் அந்த விபத்து நிகழ்ந்தது. அப்போது எதிர்திசையில் வந்த டெம்போ ஒன்று தவறான லேனில் பாய்ந்து, அக்சய் பெண்ட்சேவின் வாகனம் மீது பயங்கரமாக மோதியது.

சொந்த பணம் 15 லட்ச ரூபாயை செலவு செய்து இந்தியாவையே கண் கலங்க வைத்த இளைஞர்... ஏன் தெரியுமா?

டிவைடர்கள் இல்லாமல் இருந்ததே இதற்கு மிக முக்கியமான காரணமாக இருந்தது. இதில், அக்சய் பெண்ட்சே, அவரது மகன் மற்றும் ஆனந்த் அப்யன்கர் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தான் உயிருக்கு உயிராக நேசித்த தன் குடும்ப உறுப்பினர்கள் இருவரின் உயிரிழப்பிற்கு காரணமான இந்த கோர விபத்துதான் புனேவை சேர்ந்த தன்மாய் பெண்ட்சேவின் வாழ்க்கையை மாற்றியது.

சொந்த பணம் 15 லட்ச ரூபாயை செலவு செய்து இந்தியாவையே கண் கலங்க வைத்த இளைஞர்... ஏன் தெரியுமா?

பொதுவாக விபத்து நடந்து விட்டால், சாலை பாதுகாப்பு கொள்கைகள், கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை குறை சொல்வதுதான் அனைவரின் வழக்கமாக இருக்கும். ஆனால் இந்த கோர விபத்து நடைபெற்றபோது 28 வயது மட்டுமே நிரம்பியிருந்த தன்மாய் பெண்ட்சே கொஞ்சம் மாற்றி யோசித்தார். இதன் மூலம் இன்று சாலை பாதுகாப்பு ஹீரோவாக அவர் உருவெடுத்து விட்டார்.

சொந்த பணம் 15 லட்ச ரூபாயை செலவு செய்து இந்தியாவையே கண் கலங்க வைத்த இளைஞர்... ஏன் தெரியுமா?

தன்மாய் பெண்ட்சேவிற்கு தற்போது 34 வயதாகிறது. இடைப்பட்ட இந்த ஆறு வருடங்களில், மும்பை-புனே எக்ஸ்பிரஸ்வே சாலையின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக 15 லட்சத்திற்கும் அதிகமான தொகையை தன்மாய் பெண்ட்சே செலவு செய்துள்ளார். இதற்காக அவர் பல்வேறு துறை அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

சொந்த பணம் 15 லட்ச ரூபாயை செலவு செய்து இந்தியாவையே கண் கலங்க வைத்த இளைஞர்... ஏன் தெரியுமா?

இதில், இந்திய சாலைகள் காங்கிரஸ், மஹாராஷ்டிரா மாநிலத்தின் சாலை மேம்பாட்டு கழகம், காவல் துறை மற்றும் உள்துறை அமைச்சகம் ஆகியவை முக்கியமானவை. இதுதவிர பொறியாளர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளுடனும் தன்மாய் பெண்ட்சே இணைந்து பணியாற்றியுள்ளார். மேலும் மஹாராஷ்டிர திரை துறையினரும் இதில் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பை செய்துள்ளனர்.

சொந்த பணம் 15 லட்ச ரூபாயை செலவு செய்து இந்தியாவையே கண் கலங்க வைத்த இளைஞர்... ஏன் தெரியுமா?

இதுகுறித்து தன்மாய் பெண்ட்சே கூறுகையில், ''எனது சகோதரர் மற்றும் சகோதரர் மகனை இழப்பதற்கு முன் என்னை சுற்றியுள்ள மற்றவர்களை போல் அரசைதான் விமர்சிப்பேன். ஆனால் அவர்களது மரணம் நான் புகார் கூறுவதை நிறுத்தியது. அத்துடன் தீர்வு கண்டறிபவனாகவும் என்னை மாற்றியது. வேறு யாராவது ஏதேனும் செய்வார்கள் என நான் காத்திருக்க முடியாது.

சொந்த பணம் 15 லட்ச ரூபாயை செலவு செய்து இந்தியாவையே கண் கலங்க வைத்த இளைஞர்... ஏன் தெரியுமா?

இந்த எக்ஸ்பிரஸ்வே மற்றவர்களுக்கு பாதுகாப்பானதாக இருக்க வேண்டுமென்றால், நானே களத்தில் இறங்கி அதை செய்ய வேண்டும்'' என்றார். மும்பை-புனே எக்ஸ்பிரஸ்வே சாலையை பாதுகாப்பானதாக மாற்ற என்ன செய்ய வேண்டும்? என்பது தொடர்பான ஆராய்ச்சிக்காக மட்டும் தன்மாய் பெண்ட்சே 1.5 ஆண்டுகளை செலவிட்டுள்ளார்.

சொந்த பணம் 15 லட்ச ரூபாயை செலவு செய்து இந்தியாவையே கண் கலங்க வைத்த இளைஞர்... ஏன் தெரியுமா?

இதன் முடிவில் 200 பக்க ஆராய்ச்சி அறிக்கை ஒன்றை தன்மாய் பெண்ட்சே உருவாக்கினார். இதற்காக அவர் சாலை பாதுகாப்பு ஹீரோக்கள் மற்றும் நிபுணர்கள், அரசியல் தலைவர்கள், பொறியாளர்கள், காவல் துறை அதிகாரிகள் என பல்வேறு தரப்பினரை சந்தித்தார். மும்பை-புனே எக்ஸ்பிரஸ்வே சாலைக்கு ஆயிரம் முறைக்கு மேல் பயணித்தார்.

சொந்த பணம் 15 லட்ச ரூபாயை செலவு செய்து இந்தியாவையே கண் கலங்க வைத்த இளைஞர்... ஏன் தெரியுமா?

இதன் விளைவாகதான் 200 பக்கங்களை கொண்ட ஆராய்ச்சி அறிக்கை உருவானது. மேலும் கொரியா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள சாலைகள் தொடர்பான விரிவான ஆய்வையும் தன்மாய் பெண்ட்சே மேற்கொண்டார். இதன் விளைவாக மும்பை-புனே எக்ஸ்பிரஸ்வே சாலையில் உயிரிழப்புகளை குறைப்பதற்கான வழியை தன்மாய் பெண்ட்சே கண்டறிந்தார்.

சொந்த பணம் 15 லட்ச ரூபாயை செலவு செய்து இந்தியாவையே கண் கலங்க வைத்த இளைஞர்... ஏன் தெரியுமா?

டிவைடர்கள், பேரிகார்டுகள், ப்ரைஃபன் ரோப்ஸ் (Brifen Ropes) இல்லாததே மும்பை-புனே எக்ஸ்பிரஸ்வே சாலையில் அதிக உயிரிழப்புகள் நிகழ காரணம் என்பது தன்மாய் பெண்ட்சேவால் கண்டறியப்பட்டது. கடந்த 1960ம் ஆண்டில் இருந்து, நெடுஞ்சாலைகள், எக்ஸ்பிரஸ்வே சாலைகளில் ப்ரைஃபன் ரோப்ஸ் நிரூபிக்கப்பட்ட நல்ல பாதுகாப்பு டெக்னிக்காக உள்ளது என்பதை அவரது ஆய்வு தெரிவித்தது.

சொந்த பணம் 15 லட்ச ரூபாயை செலவு செய்து இந்தியாவையே கண் கலங்க வைத்த இளைஞர்... ஏன் தெரியுமா?

ப்ரைஃபன் ரோப்கள் 110க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. வேகமாக வரும் வாகனங்கள் லேன் மாறி ஜம்ப் ஆவதை ப்ரைஃபன் ரோப் வேலி தடுக்கிறது. எனவே இதுபோன்ற கட்டமைப்பு வசதிகளை மும்பை-புனே எக்ஸ்பிரஸ்வே சாலையில், தன்மாய் பெண்ட்சே ஏற்படுத்தினார். தற்போது இந்த கயிறுகள் மும்பை-புனே எக்ஸ்பிரஸ்வே சாலையின் 40 கிலோ மீட்டரை கவர் செய்கின்றன.

சொந்த பணம் 15 லட்ச ரூபாயை செலவு செய்து இந்தியாவையே கண் கலங்க வைத்த இளைஞர்... ஏன் தெரியுமா?

மேலும் வாகனங்களின் பதிவு எண்ணை கண்டறியும் வகையில் சிசிடிவி கேமராக்களை நிறுவும் பணிகளும் மும்பை-புனே எக்ஸ்பிரஸ்வே சாலையில் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் தற்போதைய நிலையில் ஒரு சில கேமராக்கள் மட்டுமே உள்ளன. மும்பை-புனே எக்ஸ்பிரஸ்வே சாலை முழுவதும் சிசிடிவி கேமராக்களை பொருத்தும் பணிகள் விரைவில் நடைபெறவுள்ளன.

சொந்த பணம் 15 லட்ச ரூபாயை செலவு செய்து இந்தியாவையே கண் கலங்க வைத்த இளைஞர்... ஏன் தெரியுமா?

தன்மாய் பெண்ட்சேவின் ஆய்வு மற்றொரு விஷயத்தையும் வெளிப்படுத்தியது. மும்பை-புனே எக்ஸ்பிரஸ்வே சாலையில் நடக்கும் விபத்துக்களில் காயமடைபவர்கள் புனேவில் உள்ள லோக்மான்யா மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். அல்லது கலாபூரில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். இந்த 2 மருத்துவமனைகளுமே கணிசமான தொலைவில் உள்ளன.

சொந்த பணம் 15 லட்ச ரூபாயை செலவு செய்து இந்தியாவையே கண் கலங்க வைத்த இளைஞர்... ஏன் தெரியுமா?

எனவே இதற்கு எடுத்து கொள்ளும் அதிகமான நேரம் காரணமாக பலர் உயிரிழக்க நேரிடுகிறது என்பதையும் தன்மாய் பெண்ட்சேவின் ஆய்வு கண்டறிந்தது. அவசர கால ட்ராமா சென்டர் ஒன்று அவசியம் என்பதை இது உணர்த்தியது. எனவே இன்னும் ஒரு சில மாதங்களில் அவசர கால ட்ராமா சென்டர் செயல்பாட்டிற்கு வரவுள்ளது.

சொந்த பணம் 15 லட்ச ரூபாயை செலவு செய்து இந்தியாவையே கண் கலங்க வைத்த இளைஞர்... ஏன் தெரியுமா?

மேலும் சாலை பாதுகாப்பு தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில், குறும்படங்கள் எடுத்து அதனை ரெஸ்டாரெண்ட்கள் மற்றும் ஹோட்டல்களுக்கு இலவசமாக வழங்கும் பணிகளும் நடந்து வருகிறது. இத்தனை வேலைகளையும் இழுத்து போட்டு கொண்டு செய்யும் தன்மாய் பெண்ட்சேவின் பயணம் அவ்வளவு எளிதானது அல்ல.

சொந்த பணம் 15 லட்ச ரூபாயை செலவு செய்து இந்தியாவையே கண் கலங்க வைத்த இளைஞர்... ஏன் தெரியுமா?

இதுகுறித்து தன்மாய் பெண்ட்சே மேலும் கூறுகையில், ''எனது சகோதரர் இறந்த பிறகு, இந்த பணிகளை நான் தொடங்கிய சமயத்தில், என்னை யாரும் அவ்வளவு சீரியஸாக எடுத்து கொள்ளவில்லை. ஒரு சிலர் என்னை விமர்சிக்கவும் கூட செய்தனர். ஆனால் அவை எதுவும் என்னை பாதித்து விடாதவாறு நான் பார்த்து கொண்டேன்.

சொந்த பணம் 15 லட்ச ரூபாயை செலவு செய்து இந்தியாவையே கண் கலங்க வைத்த இளைஞர்... ஏன் தெரியுமா?

எனது குடும்பம், நண்பர்கள், ஊடகத்தினர் மற்றும் மராத்தி ஃபிலிம் இண்டஸ்ட்ரியை சேர்ந்த பலர் என் மீது நம்பிக்கை வைத்ததுடன், எனக்கு ஆதரவும் அளித்தனர்'' என்றார். மும்பை-புனே எக்ஸ்பிரஸ்வே சாலையில் உயிரிழப்பு விகிதம் ஒற்றை இலக்கத்திற்கு வரும் வரை தீவிரமாக பணியாற்றுவதே தனது இலக்கு என தன்மாய் பெண்ட்சே கூறியுள்ளார்.

சொந்த பணம் 15 லட்ச ரூபாயை செலவு செய்து இந்தியாவையே கண் கலங்க வைத்த இளைஞர்... ஏன் தெரியுமா?

அதன்பின் இந்த திட்டங்களை மற்ற அபாயகரமான சாலைகளிலும் செயல்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ''எனது குடும்ப உறுப்பினர்கள் இருவரை நான் இழந்து விட்டேன். இதனை என்னால் மாற்ற முடியாது என்பது எனக்கு தெரியும். ஆனால் இதனால் எனது குடும்பத்திற்கு ஏற்பட்ட வலி வேறு யாருக்கும் ஏற்பட கூடாது என நினைக்கிறேன்.

சொந்த பணம் 15 லட்ச ரூபாயை செலவு செய்து இந்தியாவையே கண் கலங்க வைத்த இளைஞர்... ஏன் தெரியுமா?

மும்பை-புனே எக்ஸ்பிரஸ்வே சாலையில் ஏற்படும் உயிரிழப்புகளை பூஜ்ஜியம் என்ற நிலைக்கு கொண்டு வர முடியாது என்பதும் எனக்கு தெரியும். ஆனால் நாம் அனைவரும் ஒன்றாக கைகளை கோர்த்தால், உயிரிழப்பு எண்ணிக்கையை குறைக்க முடியும்'' என்றார். தன்மாய் டெண்ட்சேவின் இந்த உயரிய பணிக்காக நாம் நம்முடைய பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்வோம்.

Source: Thebetterindia

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
This Youngster Spends Rs.15 Lakh To Make Mumbai-Pune Expressway Safer. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X