துபாயில், ஆண்டுதோறும் 3,000 சொகுசு கார்கள் அனாதையாக்கப்படும் அவலம்... நடப்பது என்ன?

Posted By:

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் செல்வ வளம் கொழிக்கும் துபாயில், சொகுசு கார்களுக்கான வரவேற்பு உலகறிந்த விஷயம். மேலும், சொகுசு கார்களை தயாரிக்கும் நிறுவனங்களும் துபாய் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை மையப்படுத்தியே கார் வடிவமைப்புக்கும், வசதிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

அங்கு சாதாரண கார்களைவிட சொகுசு கார்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதும் அதன் செல்வ வளமைக்கு அத்தாட்சி. இந்த செல்வ வளமையினால்தான் சொகுசு கார்களை அலட்சியமாக கைவிடுகிறார்களோ என்று எண்ண தோன்றுகிறது. ஆனால், உண்மை வேறு மாதிரியாக இருக்கிறது.

வாடிக்கையான நிகழ்வு

வாடிக்கையான நிகழ்வு

துபாய் விமான நிலையத்தின் பார்க்கிங் வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள சாலைகளில்தான் அதிகளவில் கார்கள் அனாதையாக விடப்படும் சம்பவங்கள் நடக்கின்றன. கடந்த 5 ஆண்டுகளில் சாலைகளில் அனாதையாக கைவிடப்படும் கார்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துவிட்டதாம்.

எக்கச்சக்க கார்கள்...

எக்கச்சக்க கார்கள்...

ஆண்டுக்கு 3,000 சொகுசு கார்கள் வரை சாலைகளில் அனாதையாக விடப்படுகிறதாம். இந்த பிரச்னை துபாய் போலீசாருக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

ஃபெராரியும், போர்ஷேவும்...

ஃபெராரியும், போர்ஷேவும்...

பிஎம்டபிள்யூ, பென்ஸ் மாத்திரமல்ல, போர்ஷே, ஃபெராரி, ரோல்ஸ்ராய்ஸ் போன்ற பெரும் பணக்கார கார்கள் பல சாலைகளில் உரிமையாளர்களால் அனாதையாக விட்டுச் செல்லப்படுகிறது.

மில்லியன் டாலர் கார்

மில்லியன் டாலர் கார்

துபாய் விமான நிலையத்தின் பார்க்கிங் வளாகத்தில் ஒரு மில்லியன் டாலர் மதிப்புடைய ஃபெராரி என்ஸோ கார் கூட அனாதையாக விடப்பட்டு கேட்பாரற்று கிடந்துள்ளது.

காரணம்...

காரணம்...

துபாயில் பின்பற்றப்படும் கடுமையான ஷரியா சட்டம்தான் கார்கள் இவ்வாறு அனாதையாக்கப்படுவதற்கு காரணமாகியிருக்கிறது. ஷரியா சட்டத்திற்கும், கார் அனாதையாக்கப்படுவதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது. அடுத்த ஸ்லைடில் காணலாம்.

ஜெயில் தண்டனை

ஜெயில் தண்டனை

சொகுசு கார்களை வாங்கும் பலரால் அதற்கான கடனை சரியாக திருப்பி செலுத்த இயலுவதில்லை. ஷரியா சட்டத்தின்படி, கடனை திருப்பி செலுத்தாதவர்களுக்கு சிறை தண்டனை உண்டு. நம்ம ஊர் போன்று கோர்ட்டில் போட்டு இழுத்தடித்துக் கொண்டிருக்க முடியாது.

ஓட்டம்

ஓட்டம்

சொகுசு கார்களை ஆசையாக வாங்கும் சிலரால் அந்த கடனை கட்ட முடியாத நிலை ஏற்படும்போது, சிறை தண்டனைக்கு பயந்து அந்த நாட்டை விட்டே ஓட்டம் பிடித்துவிடுகின்றனராம். இதில், துபாய் வாசிகள் மட்டுமில்லை. அதிக அளவில் வெளிநாட்டுக்காரர்களும் கார் கடனுக்காக ஜெயிலுக்கு போக பயந்து நாட்டை விட்டு எஸ்கேப் ஆகின்றனர். அவ்வாறு எஸ்கேப் ஆகும்போதுதான், விமான நிலையம் அருகில் கார்களை நிறுத்திவிட்டு மாயமாகிவிடுகின்றனர்.

போலீஸ் நோட்டீஸ்

போலீஸ் நோட்டீஸ்

அனாதையாக கிடக்கும் கார் குறித்து போலீசாருக்கு தெரிய வந்தால் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். சம்பந்தப்பட்ட உரிமையாளர் 15 நாட்களுக்குள் திரும்ப வந்து காரை பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் காருக்கு ஜெயில்...

கார் ஜெயில்

கார் ஜெயில்

சம்பந்தப்பட்ட உரிமையாளர் 15 நாட்களுக்குள் காரை பெற்றுக் கொள்ளாவிட்டால், நம்மூரில் இருக்கும் ஆடுகளுக்கு பட்டி இருப்பது போன்று, கார்களுக்கான ஜெயில் ஒன்றை வைத்துள்ளனர். அதில் கொண்டுபோய் காரை நிறுத்திவிடுவர். கார் ஜெயிலுக்கு வந்து காரை பெற்றுக் கொள்ளும் வாடிக்கையாளர்கள் வெகு சொற்பமாக தெரிவிக்கப்படுகிறது.

ஏலம்

ஏலம்

கார் ஜெயிலில் இருக்கும் கார்களை குறிப்பிட்ட காலம் வரை உரிமையாளர் பெறவில்லை எனில், ஏலம் விடப்பட்டுவிடும். அப்படி ஏலம் விடப்படும்போது, சில சொகுசு கார்கள் அடிமாட்டு விலைக்கு கூட ஏலம் போகுமாம்.

 

Source: Business Insider

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Police have been finding thousands of cars over the last five plus years abandoned at airports, streets and other areas near by the airport in Dubai. So why are people leaving their luxury cars at the airports in Dubai?

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark